வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்

மற்றவர்கள்முன் வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள இந்தப் பிரசுரம் உங்களுக்கு உதவி செய்யும். பேசும் கலையையும் கற்பிக்கும் கலையையும் வளர்த்துக்கொள்வதற்குக்கூட இது உதவி செய்யும்.

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்திகளிலேயே மிக முக்கியமான செய்தியை நாம் கற்றுக்கொடுக்கிறோம்.

படிப்பு 1

பொருத்தமான முன்னுரை

பொருத்தமான முன்னுரை மூன்று குறிக்கோள்களை அடைய உதவுகிறது.

படிப்பு 2

இயல்பாகப் பேசுவது

இயல்பாகப் பேசும்போது கேட்பவர்கள் ரிலாக்ஸாக உணருவார்கள், நீங்கள் சொல்வதை நன்றாகக் கேட்பார்கள்.

படிப்பு 3

கேள்விகளைப் பயன்படுத்துவது

ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்கும் சாதுரியமான கேள்விகளைக் கேளுங்கள்.

படிப்பு 4

வசனங்களைச் சரியாக அறிமுகப்படுத்துவது

ஒரு வசனத்தை வாசிப்பதற்கு முன்பு, கேட்பவர்களின் மனதை எப்படித் தயார்படுத்தலாம் என்று யோசியுங்கள்.

படிப்பு 5

திருத்தமாக வாசிப்பது

திருத்தமாக வாசிப்பது யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுக்க உதவும் ஒரு அடிப்படையான விஷயம்.

படிப்பு 6

வசனங்களைத் தெளிவாகப் பொருத்திக் காட்டுவது

நீங்கள் வாசிக்கும் வசனத்துக்கும் நீங்கள் சொல்லும் குறிப்புக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெளிவாக விளக்குங்கள்.

படிப்பு 7

துல்லியமாகவும் நம்பகமாகவும் பேசுவது

துல்லியமான, நம்பகமான அத்தாட்சிகளைக் குறிப்பிடுவது, கேட்பவர்கள் சரியான முடிவுக்கு வர உதவும்.

படிப்பு 8

உதாரணங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பது

திறமையாகக் கற்றுக்கொடுப்பதற்கு எளிமையான உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்; அவை கேட்பவர்களின் மனதைத் தொட வேண்டும், முக்கியமான குறிப்புகளைப் புரியவைக்க வேண்டும்.

படிப்பு 9

படங்களை அல்லது வீடியோக்களைக் காட்டுவது

மனதில் நன்றாகப் பதியும் விதத்தில் கற்றுக்கொடுப்பதற்குப் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் காட்டுங்கள்.

படிப்பு 10

குரல் வேறுபாடு

கேட்பவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் அவர்களைச் செயல்படத் தூண்டுவதற்கும் உங்கள் குரலின் சத்தத்திலும் ஏற்றத்தாழ்விலும் வேகத்திலும் வேறுபாடு காட்டுங்கள்.

படிப்பு 11

ஆர்வத்துடிப்பு

ஆர்வத்துடிப்போடு பேசுவது ஒரு விஷயத்தை நீங்கள் எந்தளவுக்கு உறுதியாக நம்புகிறீர்கள் என்பதைக் காட்டும், கேட்பவர்களின் ஆர்வம் குறையாமல் இருப்பதற்கும் உதவும்.

படிப்பு 12

கனிவும் அனுதாபமும்

கேட்பவர்கள்மேல் உங்களுக்கு உண்மையான அன்பும் அக்கறையும் இருப்பதைக் காட்டும் விதத்தில் பேசுங்கள்.

படிப்பு 13

நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது

நீங்கள் பேசும் விஷயம் தங்களுடைய வாழ்க்கைக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கற்றுக்கொள்ளும் விஷயங்களை அவர்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் புரிய வையுங்கள்.

படிப்பு 14

முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது

ஒவ்வொரு முக்கியக் குறிப்பும் உங்கள் பேச்சின் குறிக்கோளோடும் மையப்பொருளோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று தெளிவாகக் காட்டுங்கள்; அப்போதுதான், பேச்சை நீங்கள் எப்படிக் கோர்வையாகக் கொண்டுபோகிறீர்கள் என்பதைக் கேட்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

படிப்பு 15

உறுதியாகப் பேசுவது

உறுதியாகப் பேசுங்கள். நீங்கள் சொல்வது முக்கியம் என்று உறுதியாக நம்புவதைக் காட்டுங்கள்.

படிப்பு 16

நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படி பேசுவது

குத்திக்காட்டிப் பேசுவதற்குப் பதிலாகத் தட்டிக்கொடுத்துப் பேசுங்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள புத்துணர்ச்சி தரும் சத்தியங்களுக்குக் கவனத்தைத் திருப்புங்கள்.

படிப்பு 17

புரியும்படி பேசுவது

நீங்கள் சொல்லும் விஷயத்தைப் புரிந்துகொள்ள கேட்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். முக்கியக் குறிப்புகளைத் தெளிவாக விளக்குங்கள்.

படிப்பு 18

கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது

கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டுங்கள்; பிரயோஜனமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.

படிப்பு 19

இதயத்தைத் தொடுவது

கடவுள் மீதும் அவருடைய வார்த்தையாகிய பைபிள் மீதும் அன்பை வளர்த்துக்கொள்ள கேட்பவர்களைத் தூண்டுங்கள்.

படிப்பு 20

பொருத்தமான முடிவுரை

முடிவுரை பொருத்தமாக இருந்தால், கற்றுக்கொண்ட விஷயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க கேட்பவர்கள் தூண்டப்படுவார்கள்.

உங்கள் முன்னேற்றத்தைக் குறித்து வையுங்கள்

இன்னும் திறமையாக வாசிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் நீங்கள் உழைக்கும்போது, உங்கள் முன்னேற்றத்தைக் குறித்து வையுங்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

தொடர் வீடியோக்கள்

வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்—வீடியோக்கள்

மற்றவர்களுக்கு முன்பாக வாசிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.