படிட்பு 19
இதயத்தைத் தொடுவது
நீதிமொழிகள் 3:1
சுருக்கம்: கற்றுக்கொள்ளும் விஷயங்களின் மதிப்பைப் புரிந்துகொள்ளவும், அவற்றின்படி நடக்கவும் உதவி செய்யுங்கள்.
எப்படிச் செய்வது?
-
தங்களையே எடைபோட்டுப் பார்க்கக் கேட்பவர்களுக்கு உதவுங்கள். கேட்பவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை எடைபோட்டுப் பார்ப்பதற்காக, சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேளுங்கள்.
-
கேட்பவர்கள் சரியானதைத்தான் செய்ய விரும்புகிறார்கள் என்பதில் நம்பிக்கை காட்டுங்கள். நல்ல செயல்களை ஏன் செய்கிறார்கள் என்று யோசிக்கும்படி கேட்பவர்களை உற்சாகப்படுத்துங்கள். சிறந்த உள்நோக்கத்தினால், அதாவது யெகோவா மீதும் மற்ற மனிதர்கள் மீதும் பைபிள் போதனைகள் மீதும் இருக்கிற அன்பினால், அவற்றைச் செய்ய உதவுங்கள். நியாயங்காட்டிப் பேசுங்கள்; குத்திக்காட்டுவதுபோல் பேசாதீர்கள். அவர்களைக் கூனிக்குறுக வைப்பதற்குப் பதிலாக, உற்சாகப்படுத்துங்கள். அப்போதுதான், நல்ல செயல்களை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற தூண்டுதல் அவர்களுக்கு வரும்.
-
யெகோவாமேல் கவனத்தைத் திருப்புங்கள். பைபிளிலுள்ள போதனைகள், நியமங்கள், கட்டளைகள் ஆகியவை கடவுளுடைய குணங்களையும் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பையும் எப்படிக் காட்டுகின்றன என்பதை விளக்குங்கள். யெகோவாவின் உணர்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார்க்கவும், அவருக்குப் பிரியமாக நடக்க வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவும் கேட்பவர்களுக்கு உதவுங்கள்.