Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓய்வுநாள்

ஓய்வுநாள்

ஓய்வுநாள்

சொற்பொருள் விளக்கம்: ஓய்வுநாள் எபிரெய ஷாவத் (sha.vath’) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, அதன் பொருள் “இளைப்பாறுதல், நிறுத்துதல், தவிர்த்தல்” ஆகும். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டுள்ள ஓய்வுக்குரிய ஒழுங்குமுறையில் வாராந்தர ஓய்வுநாள், ஒவ்வொரு ஆண்டு முழுவதிலும் தனிப்படக் குறிப்பிட்ட கூடுதலான பல நாட்கள், ஏழாவது ஆண்டு, மற்றும் ஐம்பதாவது ஆண்டு ஆகியவை அடங்கியிருந்தன. யூதர்களின் வாராந்தர ஓய்வுநாளான, அவர்களுடைய ஆண்டுக்குறிப்பேட்டு வாரத்தின் ஏழாவது நாள், வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை சூரிய மறைவு வரையாகும். கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டிக்கொள்வோர் பலர் ஞாயிற்றுக்கிழமையைத் தங்கள் ஓய்வுக்கும் வணக்கத்துக்குமுரிய நாளாகப் பாரம்பரியமாய் வைத்திருக்கின்றனர்; மற்றவர்கள் யூத ஆண்டுக்குறிப்பேட்டில் ஒதுக்கிவைத்துள்ள அந்த நாளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறார்களா?

யாத். 31:16, 17: “இஸ்ரவேல் புத்திரர் தலைமுறைதலைமுறையாக ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக [நிலையான உடன்படிக்கையாக, RS] ஆசரிக்கும்படி அதைக் கைக்கொள்ளவேண்டும். அது என்றென்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் நடுவே அடையாளமாயிருக்கும்.” (ஓய்வுநாளைக் கைக்கொள்வது யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் நடுவே ஓர் அடையாளமாயிருந்ததென்பதைக் கவனியுங்கள்; மற்ற எல்லாருங்கூட ஓய்வுநாளைக் கைக்கொள்ளும்படி கடமைப்படுத்தப்பட்டிருந்தால் அவ்வாறு இராது. RS பைபிளில் “நிலையான” என்று மொழிபெயர்த்துள்ள எபிரெயச் சொல் ஓலாம் (‘oh.lam’) ஆகும், இது, தற்போதைய நோக்குநிலையிலிருந்து வரையறைப்படாத அல்லது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ள ஆனால் நீண்டகாலம் தொரும் ஒரு காலப்பகுதியென அடிப்படையாய்ப் பொருள்படுகிறது. இது என்றென்றும் எனவும் குறிக்கலாம், ஆனால் அவ்வாறிருக்கவும் வேண்டியதில்லை. எண்ணாகமம் 25:13-ல் இதே எபிரெயச் சொல் ஆசாரியத்துவத்துக்குப் பொருத்திப் பயன்படுத்தியுள்ளது, அது எபிரெயர் 7:12-ன் பிரகாரம் பின்னால் முடிவடைந்தது.)

ரோமர் 10:4: “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.” (ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது அந்த நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகமாகும். அந்த நியாயப் பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குக் கடவுள் கிறிஸ்துவைப் பயன்படுத்தினார். கடவுளுடன் நாம் நீதியுள்ள நிலைநிற்கையைக் கொண்டிருப்பது, வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்வதில் அல்ல, கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதில் சார்ந்திருக்கிறது.) (மேலும் கலாத்தியர் 4:9-11; எபேசியர் 2:13-16)

கொலோ. 2:13-16: “[கடவுள்] உங்கள் . . . அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்துப்[போட்டார்]. . . . ஆகையால் போனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.” (ஒருவன் மோசயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்து ஓய்வுநாளை மீறின குற்றமுள்ளவனென தீர்க்கப்பட்டால், யாத்திராகமம் 31:14 மற்றும் எண்ணாகமம் 15:32-35-ன்படி முழு சபையும் கல்லெறிந்து அவனைக் கொல்லவேண்டும். ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டுமென விவாதிக்கும் பலருக்கு, நாம் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லாததற்காகச் சந்தோஷப்படுவதற்குக் காரணம் உண்டு. இங்கே எடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ள வேதவசனத்தில் காட்டியுள்ளபடி, கடவுளுடன் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைக் கொண்டிருக்க இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வுநாள் கட்டளையைக் கைக்கொள்வது இனிமேலும் தேவைப்படுகிறதில்லை.)

எவ்வாறு ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவமண்டலத்தின் பெரும்பாகத்துக்கு வணக்கத்துக்குரிய முக்கிய நாளாயிற்று?

கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் (இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை என அழைக்கப்படுகிறதில்) உயிர்த்தெழுப்பப்பட்டபோதிலும், அந்த நாளைப் பரிசுத்தமானதென ஒதுக்கிவைக்கும்படி பைபிளில் எந்தக் கட்டளையும் இல்லை.

“இந்த வாராந்தர கிறிஸ்தவ பண்டிகைக்கு ‘டைஸ் சாலிஸ்’ ‘Dies Solis,’ அல்லது ‘ஞாயிற்றுக்கிழமை’ என்ற இந்தப் பழைய புறமதப் பெயரைத் தொர்ந்து வைத்திருப்பது, பெரும்பாலும், புறமதமும் கிறிஸ்தவமும் [என்றழைக்கப்படுவது] ஒன்றிணைந்த உணர்ச்சிகருத்துப்போக்கினிமித்தம் கான்ஸ்டன்டீனால் வாரத்தின் இந்த முதல் நாள் [பொ.ச. 321-ல் ஓர் அரச ஆணையில்] தன்னுடைய குடிமக்களுக்கு, புறமதத்தாருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒன்றுபோல், ‘சூரியனின் வணக்கத்துக்குரிய நாளாக’ சிபாரிசுசெய்யப்பட்டது. . . . இது அந்தப் பேரரசின் ஒத்திசைவில்லாத மதங்களை ஒரே பொது நோக்கத்துக்குரிய அமைப்பின்கீழ்ப் பொருந்தவைப்பதற்கான அவனுடைய முறையாகும்.”—கிழக்கத்திய சர்ச்சின் சரித்திரத்தின்பேரில் சொற்பொழிவுகள் (நியு யார்க், 1871), A. P. ஸ்ன்லி, பக். 291.

ஓய்வுநாளைக் கைக்கொள்வதன் கட்டளை ஆதாமுக்குக் கொடுக்கப்பட்டதா, இவ்வாறு அது அவனுடைய சந்ததியார் யாவர்மீதும் கட்டுப்பட்டதாயிற்றா?

பூமியை மனிதர் குடியிருப்புக்காக ஆயத்தஞ்செய்தபின், யெகோவா தேவன் தம்முடைய சடப்பொருள் பூமிக்குரிய சிருஷ்டிப்பு வேலையைக் குறித்தவரை ஓய்ந்திருக்கலானார். இது ஆதியாகமம் 2:1-3-ல் கூறியுள்ளது. ஆனால் ஒவ்வொரு வாரத்தின் ஏழாம் நாளையும் ஓய்வுநாளாகக் கைக்கொள்ளும்படி கடவுள் ஆதாமுக்குக் கட்டளையிட்டதாக பைபிள் பதிவில் எதுவும் இல்லை.

உபா. 5:15, தி.மொ.: “நீ [இஸ்ரவேல்] எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும் உன் கடவுளாகிய யெகோவா புஜபலத்தினாலும் நீட்டிய கரத்தினாலும் உன்னை அங்கிருந்து கொண்டுவந்தார் என்றும் நினைத்துக்கொள்; அதினிமித்தமே ஓய்வுநாளை ஆசரிக்க உன் கடவுளாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டார்.” (இங்கே யெகோவா தாம் ஓய்வுநாள் சட்டத்தைக் கொடுத்ததை, ஏதேனின் சம்பவங்களோடு அல்ல, இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதோடு இணைக்கிறார்.)

யாத். 16:1, 23-29, தி.மொ.: “இஸ்ரவேல் புத்திரரின் கூட்டத்தார் அனைவரும் . . . எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே சீன் வனாந்தரம் சேர்ந்தார்கள்; . . . [மோசே] அவர்களிடம்: யெகோவா சொன்னது இதுவே: நாளைய தினம் . . . யெகோவாவுக்கென்று ஆசரிக்கவேண்டிய பரிசுத்த ஓய்வுநாள்; . . . ஆறு நாளும் அதைச் [மன்னாவைச்] சேர்க்கவேண்டும்; ஏழாம் நாளிலோ ஓய்வு; அந்நாளிலே அது இராது என்றான். . . . அப்பொழுது யெகோவா மோசயினிடம்: . . . பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை அருளி[னார்] . . . என்றார்.” (இதற்கு முன்னால், ஒவ்வொன்றும் ஏழு நாட்களைக் கொண்ட வாரங்கள் குறிக்கப்பட்டன, ஆனால் இதுவே ஓய்வுநாள் ஆசரிப்பதன் முதல் குறிப்பாகும்.)

மோசேயின் நியாயப்பிரமாணம் “சடங்குமுறைக்குரிய” மற்றும் “ஒழுக்கமுறைக்குரிய” பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதா, மேலும் “ஒழுக்கநெறிச் சட்டங்களுக்கு” (பத்துக் கற்பனைகளுக்கு) கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்களா?

நியாயப்பிரமாணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதுபோல் காட்டும் ஒரு முறையில் இயேசு நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிட்டாரா?

மத். 5:17, 21, 23, 27, 31, 38: “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.” இப்பொழுது, தாம் மேலும் தொர்ந்து சொன்ன குறிப்புகளில் இயேசு உள்ளடக்கினதைக் கவனியுங்கள். “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், . . . பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் [யாத். 20:13; ஆறாவது கற்பனை]. . . . நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து [உபா. 16:16, 17; பத்துக் கற்பனைகளைச் சேர்ந்ததல்ல] . . . விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் [யாத். 20:14; ஏழாவது கற்பனை]. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது [உபா. 24:1; பத்துக் கற்பனைகளின் பாகமல்ல]. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் [யாத். 21:23-25; பத்துக் கற்பனைகளின் பாகமல்ல].” (ஆகையால், இயேசு பத்துக் கற்பனைகளிலிருந்து எடுத்துக் குறிப்பிட்டவற்றையும் நியாயப்பிரமாணத்தின் மற்றப் பாகங்களிலிருந்தெடுத்தக் குறிப்புகளையும் ஒன்றாய்க் கலந்தார், அவற்றிற்கிடையே எந்த வேறுபாட்டையும் செய்யவில்லை. நாம் அவற்றை வேறுபடுத்தி நோக்கவேண்டுமா?)

“போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது”? என்று இயேசுவைக் கேட்டபோது அவர் பத்துக் கற்பனைகளைத் தனிப்படுத்தினாரா? அதற்கு மாறாக, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவாவினிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.” (மத். 22:35-40) பத்துக் கற்பனைகளைக் கைக்கொள்ள கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்களெனவும் ஆனால் மீதியானவற்றிற்குக் கீழ்ப்பட்டில்லையெனவும் சிலர் பத்துக் கற்பனைகளை விடாது பற்றிக்கொண்டிருந்தால் (உபா. 5:6-21), எந்தக் கற்பனைகள் பிரதானமானவையென்று இயேசு (உபா. 6:5; லேவி. 19:18-ஐ எடுத்துக் குறிப்பிட்டு) சொன்னதை அவர்கள் உண்மையில் தள்ளிவிடுகிறார்களல்லவா?

மோசேயின் நியாயப்பிரமாணம் முடிவடைவதைக் குறிக்கையில், முடிவடைந்ததில் பத்துக் கற்பனைகளும் அடங்கியிருந்தனவென பைபிளில் நேர்முகமாய்ச் சொல்லியிருக்கிறதா?

ரோமர் 7:6, 7: “நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்தென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.” (இங்கே, யூதக் கிறிஸ்தவர்கள் ‘நியாயப்பிரமாணத்தினின்று விடுதலையாக்கப்பட்டார்கள்,’ என்று எழுதினதை உடனடியாக அடுத்து, பவுல் நியாயப்பிரமாணத்திலிருந்து என்ன உதாரணத்தை எடுத்துக் குறிப்பிடுகிறான்? பத்தாவது கற்பனையையே, இவ்வாறு, அவர்கள் விடுதலையாக்கப்பட்டிருந்த அந்த நியாயப்பிரமாணத்தில் அது உள்ளடக்கப்பட்டிருந்ததெனக் காட்டுகிறான்.)

2 கொரி. 3:7-11, தி.மொ.: “மோசேயின் முகத்தில் தோன்றிய மகிமையினிமித்தம், அது ஒழிந்துபோகிறதாயிருந்தும், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை உற்றுநோக்க முடியாதிருந்தார்கள்; இப்படியாகக் கற்களின்மேல் எழுதிப் பதித்திருந்த மரணத்துக்குரிய ஊழியம் அவ்வளவு மகிமையோடு வந்ததேயானால் ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிராது? . . . ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால் நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.” (இங்கே, “கற்களின்மேல் எழுதிப் பதித்திருந்த” சட்டத் தொகுப்பைக் குறிப்பிட்டு, அது இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சமயத்தில் “இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை உற்றுநோக்க முடியாதிருந்தார்கள்,” என்று சொல்லப்படுகிறது. இது எதை விவரிக்கிறது? இது பத்துக் கற்பனைகளைக் கொடுத்ததை விவரிக்கிறது; இவை கல்லின்மேல் எழுதி பதிவுசெய்யப்பட்ட கட்டளைகளென யாத்திராகமம் 34:1, 28-30 காட்டுகிறது. “ஒழிந்துபோகிறதாயிருந்த”தென இங்கே குறித்துள்ள வசனம் சொல்வதில் இவை அடங்கியிருந்தனவெனத் தெளிவாயிருக்கிறது.)

பத்துக் கற்பனைகள் உட்பட மோசயின் நியாயப்பிரமாணத்தை ஒழிப்பது, ஒழுக்கக் கட்டுப்பாடு முழுவதையும் எடுத்துப்போடுவதைக் குறிக்கிறதா?

இல்லவே இல்லை; பத்துக் கற்பனைகளில் குறித்து வைக்கப்பட்ட ஒழுக்கத் தராதரங்களில் பல தேவாவியால் ஏவப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் திரும்ப எடுத்துரைக்கப்பட்டுள்ளன. (எனினும், ஓய்வுநாள் சட்டம் திரும்ப எடுத்துரைக்கப்படவில்லை.) ஆனால் ஒரு சட்டம் எவ்வளவு நல்லதாயிருப்பினும், ஓர் ஆளின் ஆசைகளின்பேரில் பாவ மனச்சாய்வு ஆதிக்கம் செலுத்தி வரும்வரை சட்ட மீறுதல் இருந்துவரும். எனினும், நியாயப்பிரமாண உடன்படிக்கையினிடத்தை ஏற்றுள்ள புதிய உடன்படிக்கையைக் குறித்து, எபிரெயர் 8:10 பின்வருமாறு கூறுகிறது: “அந்த நாட்களுக்குப் பின்பு நான் [யெகோவா] இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” இத்தகைய சட்டங்கள், கற்பலகைகளின்மேல் எழுதி பதிவுசெய்யப்பட்டவற்றைப் பார்க்கிலும் எவ்வளவு அதிக பலன்தருபவையாயிருக்கின்றன!

ரோமர் 6:15-17: “நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே. மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தாத்திரம்.” (மேலும் கலாத்தியர் 5:18-24-ஐயும் பாருங்கள்.)

வாராந்தர ஓய்வுநாள் கிறிஸ்தவர்களுக்கு என்ன உட்கருத்துடையது?

கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நாளும் பங்குகொள்ளும் “ஓர் ஓய்வுநாள் இளைப்பாறுதல்” (NW) உண் டு

எபிரெயர் 4:4-11, தி.மொ.: “கடவுள் தமது கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தாரென்று ஏழாம் நாளைப்பற்றி ஓரிடத்தில் [ஆதியாகமம் 2:2] சொல்லியிருக்கிறார். அன்றியும், அவர்கள் என் இளைப்பாறுதலில் பிரவேசிப்பதேயில்லை என்று இந்த இடத்தில் [சங்கீதம் 95:11] சொல்லியிருக்கிறது. ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இனிமேல் வரப்போகிறதாயிருக்கிறபடியினாலும் நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினால் அதில் பிரவேசியாமற் போபடியினாலும் இன்று எனச் சொல்லப்படும் ஒருநாளைக் குறித்திருக்கிறார். எப்படியெனில் வெகுகாலத்திற்குப்பின்: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று மேலே சொல்லப்பட்டபடியே தாவீதின் புஸ்தகத்தில் [சங்கீதம் 95:7, 8] சொல்லியிருக்கிறாரே. யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால் அதன்பின் அவர் வேறொரு நாளைப்பற்றிச் சொல்லியிருக்கமாட்டார். ஆகையால் கடவுளின் ஜனங்களுக்கு ஓய்வின் காலமொன்று வரவிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் கடவுள் தமது கிரியைகளை முடித்து ஓய்ந்திருந்ததுபோலத் தானும் தன் [சுய, NW] கிரியைகளை முடித்து ஓய்ந்திருக்கிறான். ஆகையால், எவனும் கீழ்ப்படியாமையைக் காண்பிக்கும் அந்தத் திருஷ்டாந்தப்படி விழுந்துபோகாதிருக்க நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க விடாமுயற்சியாயிருப்போமாக.”

கிறிஸ்தவர்கள் எதிலிருந்து ஓய்ந்திருக்கும்படி துரிதப்படுத்தப்படுகின்றனர்? தங்கள் “சுய கிரியைகளி”லிருந்து (NW). என்ன கிரியைகள்? முன்னால் எவற்றைக்கொண்டு தங்களை நீதிமான்களாக நிரூபிக்கும்படி தேடினார்களோ அந்தக் கிரியைகள். குறிப்பிட்ட கட்டளைகளுக்கும் ஆசாரங்களுக்கும் உடன்படுவதால் கடவுளுடைய அங்கீகாரத்தையும் நித்திய ஜீவனையும் தாங்கள் சம்பாதிக்க முடியுமென அவர்கள் இனிமேலும் நம்புகிறதில்லை. இதுவே, ‘தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடி தேவநீதிக்குக் கீழ்ப்படியாமற்போன’ விசுவாசியாத யூதர்களின் தவறாகும். (ரோமர் 10:3) நாம் எல்லாரும் பாவிகளாய்ப் பிறந்தோமெனவும் கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் காட்டுவதனால் மாத்திரமே எவராயினும் கடவுளுடன் நீதியுள்ள நிலைநிற்கையைக்கொண்டிருக்க முடியுமெனவும் உண்மையான கிறிஸ்தவர்கள் மதித்துணருகிறார்கள். கடவுளுடைய குமாரனின் எல்லாப் போகங்களையும் இருதயத்தில் ஏற்று அவற்றை வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்த அவர்கள் முயற்சிசெய்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் அறிவுரையையும் கடிந்துகொள்ளுதலையும் அவர்கள் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். இம்முறையில் தாங்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைச் சம்பாதிக்க முடியுமென்று அவர்கள் எண்ணுகிறார்களென இது குறிக்கிறதில்லை; அதற்குப் பதில், அவர்கள் செய்வது அவர்களுடைய அன்பின் மற்றும் விசுவாசத்தின் வெளிக்காட்டேயாகும். இத்தகைய வாழ்க்கைப் போக்கினால் அவர்கள் அந்த யூத ஜனத்தின் “கீழ்ப்படியாமையைக் காண்பிக்கும் அந்தத் திருஷ்டாந்தப்படி,” நடப்பதைத் தவிர்க்கிறார்கள்.

ஆதியாகமம் 2:2-ல் குறிப்பிட்டுள்ள இந்த “ஏழாம் நாள்,” வெறும் 24-மணிநேர நாள் அல்ல. (பக்கம் 88-ல், “சிருஷ்டிப்பு” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.) இவ்வாறே உண்மையான கிறிஸ்தவர்கள் பங்குகொள்ளும் இந்த “ஓய்வுநாள் இளைப்பாறுதல்” 24-மணிநேரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டில்லை. விசுவாசங்காட்டி பைபிளின் அறிவுரைக்குக் கீழ்ப்படிவதனால், அவர்கள் அதை ஒவ்வொருநாளும் அனுபவித்து மகிழலாம், மேலும் முக்கியமாய்க் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் அவ்வாறு அனுபவித்து மகிழ்வார்கள்.

ஓர் ஆயிர-ஆண்டு “ஓய்வுநாள்” இளைப்பாறுதல் மனிதவர்க்கத்துக்கு எதிரே உள்ளது

மாற்கு 2:27, 28: “[இயேசு] அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.”

ஓய்வுநாளைக் கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் நடுவே ஓர் அடையாளமாக யெகோவா ஸ்பித்தாரெனவும், அது அவர்களுடைய பயனற்ற உழைப்பிலிருந்து அவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும்படி கருதப்பட்டதெனவும் இயேசு அறிந்திருந்தார். மேலும் மோசயின் நியாயப்பிரமாணம் தம்மில் நிறைவேற்றத்தைக் கண்டடைந்திருக்க அதை விலக்கிப்போடுவதற்குத் தம்முடைய சொந்த மரணம் ஆதாரத்தை அளிக்குமெனவும் இயேசு அறிந்திருந்தார். ஓய்வுநாள் கட்டளையோடுகூடிய அந்த நியாயப்பிரமாணம் “வரப்போகிற நன்மைகளின் நிழலாய்” இருந்ததை அவர் மதித்தார். (எபி. 10:1; கொலா. 2:16, 17) அந்த “நன்மையான காரியங்கள்” சம்பந்தமாக ஓர் “ஓய்வுநாள்” இருக்கிறது அதற்கு அவர் ஆண்டவராயிருக்கப்போகிறார்.

கர்த்தாதி கர்த்தராக, கிறிஸ்து பூமி முழுவதையும் ஆயிர ஆண்டுகளுக்கு ஆளுவார். (வெளி. 19:16; 20:6; சங். 2:6-8) பூமியில் இருக்கையில், இயேசு, தம்முடைய மிக அதிக ஆச்சரியந்தரும் சுகப்படுத்தும் கிரியைகள் சிலவற்றை ஓய்வுநாளில் இரக்கமாய் நடப்பித்தார், இவ்வாறு தம்முடைய ஆயிர ஆண்டு ஆட்சியின்போது சகல ஜாதிகளிலிருந்தும் வரும் ஜனத்துக்குத் தாம் கொண்டுவரப்போகிற வகையான விடுதலையை நடப்பித்துக் காட்டினார். (லூக்கா 13:10-13; யோன் 5:5-9; 9:1-14) ஓய்வுநாளின் உண்மையான பொருளை நன்றியோடு மதித்துணருபவர்கள் அந்த “ஓய்வுநாள்” இளைப்பாறுதலிலிருந்து பயனடையும் வாய்ப்பையும் உடையோராயிருப்பர்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் ஏன் அவ்வாறு உணருகிறீர்களென நான் கேட்கலாமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘இந்தக் காரியத்தின்பேரில் பைபிளில் சொல்லியிருப்பது நிச்சயமாய் நம்முடைய சிந்தனையை ஆட்கொள்ளவேண்டும், அல்லவா? . . . இந்தப் பொருளின்பேரில் உதவியாயுள்ள சில பைபிள் வசனங்களை நான் கண்டிருக்கிறேன். அவற்றைத் தயவுசெய்து உங்களோடு பகிர்ந்துகொள்ள அனுமதியுங்கள். (பின்பு முந்தின பக்கங்களிலுள்ள குறிப்புகளில் பொருத்தமான பகுதிகளைப் பயன்படுத்துங்கள்.)’

‘நீங்கள் ஏன் ஓய்வுநாளைக் கைக்கொள்கிறதில்லை?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘உங்கள் மனதில் நீங்கள் கருதும் ஓய்வுநாளின்பேரில் என் பதில் சார்ந்திருக்கும். பைபிளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வுநாட்களைப்பற்றிச் சொல்லியிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? . . . கடவுள் யூதர்களுக்கு ஓய்வுநாள் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் கிறிஸ்தவர்கள் கைக்கொள்ளவேண்டிய வேறு வகையான ஓய்வுநாளைப்பற்றி பைபிளில் சொல்லியிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘நாங்கள் வாரத்தில் ஒரு நாளை ஓய்வுநாளாகக் கைக்கொள்கிறதில்லை ஏனெனில் அந்தக் கட்டளை ‘ஒழிந்துபோயிற்றென’ பைபிளில் சொல்லியிருக்கிறது. (2 கொரி. 3:7-11; பக்கங்கள் 348, 349-ல் இவற்றைப்பற்றிய குறிப்புகளைப் பாருங்கள்.)’ (2) ‘ஆனால் நாங்கள் தவறாமல் கைக்கொள்ளும் ஓர் ஓய்வுநாள் இருக்கிறது. (எபி. 4:4-11; பக்கங்கள் 349, 350-ஐ பாருங்கள்.)’