Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமணம்

திருமணம்

திருமணம்

சொற்பொருள் விளக்கம்:  பரிசுத்த வேத எழுத்துக்களில் குறித்து வைத்திருக்கிற தராதரத்தின்படி கணவனும் மனைவியுமாக ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றுபடும் இணைப்பாகும். திருமணம் ஒரு தெய்வீக ஏற்பாடு. அதில் அன்பு சூழ்நிலை இருப்பதாலும் மணத்துணைவர்கள் இருவரும் தனித்தனியே மனமுவந்து வாக்குறுதி பொறுப்பேற்றிருப்பதாலும் அது கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஒரு பாதுகாப்பு உணர்ச்சியோடுகூடிய மிக நெருங்கிய உறவை அளிக்கிறது. திருமணத்தை யெகோவா நிலைநாட்டுகையில், மனிதனை முழுமையாக்கும் நிரப்புப் பாதியான ஒரு நெருங்கிய துணையை அவனுக்கு அளிப்பதற்கு மட்டுமல்லாமல் மேலுமதிக மனிதர்களைக் குடும்ப ஏற்பாட்டுக்குள் பிறப்பிப்பதற்கு வழிவகை ஏற்பாடாகவும் அவ்வாறு செய்தார். கிறிஸ்தவ சபை ஏற்கத்தக்கத் திருமண உறவைச் சட்டப்பூர்வமாய்ப் பதிவுசெய்வது, கூடிய எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது.

சட்டப்பூர்வத் தேவைகளின்படி திருமணம் செய்வது உண்மையில் முக்கியமா?

தீத்து 3:1, 2: “துரைத்தனங்களுக்கும் [அரசாங்கங்களுக்கும்] அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், . . . அவர்களுக்கு [தொடர்ந்து, NW] நினைப்பூட்டு.” (ஆட்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகையில், அந்தத் திருமண இணைப்புக்குரிய இரு பகுதியினரின் பெயரும் நிந்தைக்குட்படாமல் வைக்கப்படுகிறது, மேலும், பிள்ளைகளிருந்தால், திருமணமாகாதப் பெற்றோரின் பிள்ளைகளின்மீது வரும் நிந்தை இவர்களுக்குண்டாகாதபடி பாதுகாக்கப்படுகின்றனர். மேலும், மணத்துணைவர் ஒருவருக்கு மரணம் ஏற்படுகையில், திருமணத்தின் சட்டப்பூர்வ பதிவு, குடும்ப உறுப்பினரின் சொத்துரிமைகளைப் பாதுகாக்கிறது.)

எபி. 13:4: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (சட்டப்பூர்வமாய்த் திருமணஞ்செய்வது “கனமுள்ளதாக” ஏற்கப்படும் திருமணஞ்செய்திருப்பதில் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கிறது. “வேசித்தனத்தையும்” “விபசாரத்தையும்” இன்னதென்று விளக்குகையில் மேல் குறிப்பிட்டுள்ள தீத்து 3:1, 2-ல் சொல்லியிருப்பதை நாம் மனதில் வைக்கவேண்டும்.)

1 பேதுரு 2:12-15: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது [வாயடைப்பது, தி.மொ.] தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”

ஆதாமும் ஏவாளும் ஒன்றுசேர்ந்து வாழத் தொடங்குகையில் “சட்ட விதிமுறை ஒழுங்குகள்” எவையாவது இருந்தனவா?

ஆதி. 2:22-24, தி.மொ.: “கடவுளாகிய யெகோவா மனுஷனிலிருந்தெடுத்த [ஆதாமிலிருந்தெடுத்த] விலா எலும்பை மனுஷியாக அமைத்து உருவாக்கி அவளை மனுஷனிடம் அழைத்துக்கொண்டு வந்தார். அப்பொழுது மனுஷன்: இப்பொழுதோ, இது என் எலும்பில் எலும்பும் தசையில் தசையுமாம், இது மனுஷனிலிருந்தெடுக்கப்பட்டபடியால் மனுஷியென்று பேர்பெறும் என்றான். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடிசைந்திருப்பான். இவர்கள் ஒரே மாமிசமாயிருப்பார்கள்.” (சர்வவல்லமையுள்ள பேரரசராகிய யெகோவா தேவன்தாமே ஆதாமையும் ஏவாளையும் ஒன்றுசேர்த்தார் என்பதைக் கவனியுங்கள். அது ஆணும் பெண்ணும் சட்டப்பூர்வ அதிகாரத்தைப்பற்றி அக்கறையெடுத்துக்கொள்ளாமல் ஒன்றுசேர்ந்து வாழத் தீர்மானித்துக்கொண்டக் காரியமாயிருக்கவில்லை. அந்த ஒன்றிணைப்பின் நிலையானத் தன்மையைக் கடவுள் அறிவுறுத்திக் கூறினதையும் கவனியுங்கள்.)

ஆதி. 1:28: “தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை [ஆதாம் ஏவாளை] ஆசீர்வதித்தார்.” (எல்லாரிலும் மிக உயர்ந்த உன்னத சட்ட அதிகாரியின் ஆசீர்வாதம் இங்கே அந்த ஒன்றிணைப்பின்பேரில் கூறப்பட்டது, அவர்கள் பாலுறவுகள் கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டனர், மேலும் தங்கள் வாழ்க்கையை பயனுடையதாக நிரப்பும் ஒரு வேலையும் கொடுக்கப்பட்டனர்.)

உள்ளூர் சட்டம் அனுமதித்தால் ஒருவர் பலமனைவிகளை மணம்செய்யும் பழக்கத்தில் ஈடுபடலாமா?

1 தீமோ. 3:2, 12: “ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனுமாய் . . . இருக்கவேண்டும். . . . மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், . . . இருக்கவேண்டும்.” (இந்த ஆண்களுக்குப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் இவர்கள் கிறிஸ்தவ சபையிலிருந்த மற்றவர்கள் பார்த்துப் பின்பற்றுவதற்கு முன்மாதிரிகளாகவும் இருந்தார்கள்.)

1 கொரி. 7:2: “வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.” (ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளையோ அல்லது கணவர்களையோ கொண்டிருப்பதற்கு இங்கே அனுமதியில்லை.)

ஆபிரகாம், யாக்கோபு, மற்றும் சாலொமோன் ஆன இவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருக்கும்படி கடவுள் ஏன் அனுமதித்தார்?

பல மனைவிகளை மணஞ்செய்தலை யெகோவா தொங்கி வைக்கவில்லை. அவர் ஆதாமுக்கு ஒரே ஒரு மனைவியையே கொடுத்தார். பின்னால், காயீனின் சந்ததியானான லாமேக்கு, தனக்கு இரண்டு மனைவிகளைக் கொண்டான். (ஆதி. 4:19) காலப்போக்கில் மற்றவர்கள் அவனுடைய மாதிரியைப் பின்பற்றினார்கள், சிலர் அடிமைப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக்கொண்டார்கள். கடவுள் இந்தப் பழக்கத்தைப் பொறுத்துவந்தார், மேலும் மோசயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இத்தகைய உறவுடைய பெண்கள் சரியானபடி நடத்தப்படுவதை நிச்சயப்படுத்தச் சில கட்டளைகளையும் ஏற்படுத்தினார். கிறிஸ்தவ சபை நிலைநாட்டப்படும்வரை இவ்வாறு செய்தார், ஆனால் அதன்பின்பு தம்முடைய ஊழியர்கள் அவர்தாமே ஏதேனில் தொங்கிவைத்த அந்தத் தராதரத்துக்குத் திரும்பும்படி அவர் கட்டளையிட்டார்.

ஆபிரகாமைக் குறித்ததில், அவன் சாராயைத் (சாராளைத்) தன் மனைவியாகக் கொண்டான். சாராய் தான் ஏறக்குறைய 75 வயதாக இருந்து, தான் ஒருபோதும் பிள்ளைப்பெற மாட்டாளென நினைத்தபோது, தன் அடிமைப்பெண்ணின் மூலம் தனக்கு ஒரு சட்டப்பூர்வ பிள்ளை உண்டாயிருக்கும்படிக்குத் தன் கணவன் அந்த அடிமைப்பெண்ணுடன் பாலுறவுகொள்ளும்படி அவள் அவனைக் கேட்டுக்கொண்டாள். ஆபிரகாம் அவ்வாறே செய்தான், ஆனால் அது அவனுடைய வீட்டாருக்குள் வினைமையான சச்சரவுக்கு வழிநத்தினது. (ஆதி. 16: 1-4) பின்னால் யெகோவா, அற்புதமாய்ச் சாராள்தானே கர்ப்பந்தரிக்கும்படி செய்வதனால் “வித்துவைப்” பற்றித் தாம் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். (ஆதி. 18:9-14) சாராள் மரணமடைந்த பின்பே ஆபிரகாம் மற்றொரு மனைவியை மணம் செய்தான்.—ஆதி. 23:2; 25:1.

யாக்கோபு தன் மாமனாரால் ஏமாற்றப்பட்டதால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளையுடையவனானான். பதான் அராமில் தனக்கு ஒரு மனைவியைத் தேட யாக்கோபு சென்றபோது அவன் மனதில் இருந்தது இதுவல்ல. அவனுடைய மனைவிகளுக்கிடையில் இருந்த வருந்தத்தக்கப் போட்டியைப்பற்றி பைபிள் விவரப்பதிவில் பேரளவு நுட்பவிவரத்துடன் சொல்லியிருக்கிறது.—ஆதி. 29:18–30:24.

சாலொமோனுக்குப் பல மனைவிகளும் மேலும் வைப்பாட்டிகளும் இருந்தனரென்பது நன்றாய் அறியப்பட்டதே. ஆனால் அவ்வாறு செய்ததில், அரசன் “தன் இருதயம் பின்வாங்கிப்போகாதபடி தனக்கு மனைவிகளைப் பெருகச் செய்யவும் கூடாது,” என்று யெகோவா தெளிவாய் கூறின கட்டளையை அவன் மீறினானென்பதைப் பலர் அறியார். (உபா. 17:17, NW) மேலும் தன் அன்னிய நாட்டு மனைவிகளின் செல்வாக்கின் காரணமாக, சாலொமோன் பொய்க் கடவுட்களின் வணக்கத்துக்குத் திரும்பி “யெகோவாவின் பார்வையில் தீமையாயிருப்பதைச் செய்தான். . . . யெகோவா அவன்மேல் கோமானார்,” என்பதையும் கவனிக்கவேண்டும்.—1 இரா. 11:1-9.

மணத் துணைவர்கள் சமாதானமாய் ஒன்றிணைந்து வாழ முடியவில்லையென்றால் பிரிந்துசெல்லுதல் அனுமதிக்கக்கூடியதா?

1 கொரி. 7:10-16: “விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும், தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: [ஆனால், 40-ம் வசனம் காட்டுகிறபடி, பவுல் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டான்] சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?” (விசுவாசி ஏன் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு திருமண இணைவு உறுதியாய்த் தொர்ந்திருக்க ஊக்கமாய் முயற்சிசெய்வான்[ள்]? திருமணத்தின் தெய்வீகத் தொக்கத்துக்கு மதிப்புத் தரும்படியும் அந்த அவிசுவாசி காலப்போக்கில் உண்மையான கடவுளின் ஊழியனாகும்படி உதவிசெய்யப்படலாமென்ற நம்பிக்கையிலும் அவ்வாறு செய்வாள்.)

மறுமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் திருமணவிலக்கு செய்வதைக் குறித்து பைபிளின் கருத்து என்ன?

மல்கி. 2:15, 16, தி.மொ.: “ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடி உங்கள் ஆவிக்குள்ளேயே எச்சரிக்கையாயிருங்கள். மனைவியைத் தள்ளிவிடுவது எனக்கு வெறுப்பு என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்லுகிறார்.”

மத். 19:8, 9: “அதற்கு அவர் [இயேசு]: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோச உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, [திருமணத்துக்குப் புறம்பே பாலுறவுகொள்ளுதல்] அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் . . . என்றார்.” (ஆகையால் குற்றமற்ற மணத்துணைவர் “வேசித்தனஞ்செய்யும்” துணையைத் திருமணவிலக்கு செய்ய அனுமதிக்கப்படுகிறான்[ள்], ஆனால் கட்டளையிடப்படுகிறதில்லை.)

ரோமர் 7:2, 3: “புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.”

1 கொரி. 6:9-11: “மோசம்போகாதிருங்கள்; வேசிமார்க்கத்தார் விக்கிரகாராதனைக்காரர் விபசாரக்காரர் தற்புணர்ச்சிக்காரர் ஆண்புணர்ச்சிக்காரர் . . . கடவுளின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் நீங்கள் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டீர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் நமது கடவுளின் ஆவியினாலுமே அப்படியாக்கப்பட்டீர்கள்.” (இந்தக் காரியத்தின் வினைமையானத் தன்மையை இது அறிவுறுத்துகிறது. மனந்திரும்பாத விபசாரக்காரருக்குக் கடவுளின் ராஜ்யத்தில் பங்கிராது. எனினும், முன்னால் விபசாரக் குற்றஞ்செய்த ஆட்கள், ஒருவேளை தகாதமுறையில் மறுமணம் செய்தவர்களும், தாங்கள் உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பி இயேசுவின் பாவநிவாரண ஈடுபலியின் விலைமதிப்பில் விசுவாசங்காட்டினால் கடவுளுடைய மன்னிப்பையும் அவருடன் ஒரு சுத்தமான நிலைநிற்கையையும் பெறலாம்.)

கடந்த காலத்தில் சகோதரனும் சகோதரியும் திருமணஞ்செய்வதைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?

காயீன் தன் சகோதரிகளில் ஒருத்தியை மணஞ்செய்தானெனவும் (ஆதி. 4:17; 5:4) ஆபிராம் தன் ஒன்றுவிட்ட சகோதரியை மணஞ்செய்தான் எனவும் பைபிள் பதிவு குறிப்பாய்க் காட்டுகிறது. (ஆதி. 20:12) ஆனால் பின்னால், மோசயின்மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில், இத்தகைய மண இணைப்புகள் திட்டவட்டமாய்த் தடைவிதிக்கப்பட்டன. (லேவி. 18:9, 11) இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் இது அனுமதிக்கப்படுகிறதில்லை. நெருங்கிய உறவினரோடு திருமண இணைப்பு, தலைமுறைதலைமுறையாகத் தொர்ந்துரும் ஊறுபாடு உண்டாக்கும் உயிர்மத்தின் இணைமரபுகீற்றுகள் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவது சராசரிக்கு மேற்பட்டு பெரும்பாலும் நிகழக்கூடியதாயிருக்கிறது.

மனிதவர்க்கச் சரித்திரத்தின் தொக்கத்தில் சகோதரரும் சகோதரிகளும் மணஞ்செய்வது ஏன் தகாததாயில்லை? கடவுள் ஆதாமையும் ஏவாளையும் பரிபூரணராகச் சிருஷ்டித்து மனிதவர்க்கம் முழுவதும் அவர்களிலிருந்து பரம்பரையாகத் தோன்றவேண்டுமென்று நோக்கங்கெண்டார். (ஆதி. 1:28; 3:20) சந்தேகமில்லாமல் நெருங்கிய உறவினரை மணஞ்செய்வது, முக்கியமாய் முதல் ஒருசில சந்ததிகளுக்குள் நடக்கும். பாவம் தோன்றின பின்பும், முதல் சந்ததிகளின்போது பிள்ளைகளில் உருக்குலைந்த தடங்கள் தோன்றுவதன் அபாயம் அவ்வளவு அதிகமாயில்லை, ஏனெனில் மனிதக் குலம் ஆதாமும் ஏவாளும் அனுபவித்துமகிழ்ந்திருந்த பரிபூரணத்துக்கு மிக நெருங்க இருந்தது. அப்பொழுதிருந்த ஆட்களின் நீண்டகால வாழ்வு இதை உறுதிசெய்கிறது. (ஆதியாகமம் 5:3-8; 25:7-ஐ பாருங்கள்.) ஆனால் ஆதாம் பாவஞ்செய்து ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்குப் பின்னர், கடவுள், நெருங்கிய உறவினரை மணம்செய்தல் கூடாதெனக் கட்டளைகொடுத்தார். இது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும், அப்பொழுது தங்களைச் சுற்றிலும் எல்லா வகையான சீர்கெட்டப் பழக்கவழக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜனங்களிலிருந்து யெகோவாவின் ஊழியரின் பால்சம்பந்த ஒழுக்கநடத்தையை உயர்த்துவதற்கும் சேவித்தது.—லேவியராகமம் 18:2-18-ஐ பாருங்கள்.

திருமணத்தை மேம்பாடடைய செய்வதற்கு எது உதவிசெய்யும்?

(1) ஒன்றுசேர்ந்து தவறாமல் கடவுளுடைய வார்த்தையைப் படித்துக்கொண்டும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உதவிக்காகக் கடவுளிடம் ஜெபித்தும் வருவது.—2 தீமோ. 3:16, 17; நீதி. 3:5, 6; பிலி. 4:6, 7.

(2) தலைமைக்குரிய நியமத்தை மதித்துணருதல். இது கணவன்மீது கனத்தப் பொறுப்பை வைக்கிறது. (1 கொரி. 11:3; எபே. 5:25-33; கொலா. 3:19) இது மனைவியின் பங்கிலும் ஊக்கமான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது.—எபே. 5:22-24, 33; கொலா. 3:18; 1 பேதுரு 3:1-6.

(3) பால்சம்பந்த அக்கறையைத் தன் மணத்துணைவரிடமே கட்டுப்படுத்துதல். (நீதி. 5:15-21; எபி. 13:4) தன் மணத் துணைவரின் தேவைகளுக்கு அன்புள்ள அக்கறைகொண்டிருப்பது அந்தத் துணையைத் தவறுசெய்யும்படியான சோனைக்கு எதிராகப் பாதுகாக்க உதவிசெய்யும்.—1 கொரி. 7:2-5.

(4) அன்பும் கனிவும் பரிவுமுள்ள முறையில் ஒருவரோடொருவர் பேசுதல்; கோத்தால் சீறிவிழுவதையும், ஓயாது நச்சுப்படுத்துவதையும், கடுடுத்துக் குத்தலாகப் பேசுவதையும் தவிர்த்தல்.—எபே. 4:31, 32; நீதி. 15:1; 20:3; 21:9; 31:26, 28.

(5) குடும்பம் வாழும் இடத்தையும் ஆடைகளையும் கவனிப்பதிலும், மேலும் உடலுக்குகந்த உணவு தயாரிப்பதிலும் சுறுசுறுப்பாய் உழைப்பவராயும் நம்பத்தக்கவராயும் இருத்தல்.—தீத்து 2:4, 5; நீதி. 31:10-31.

(6) அந்த மற்றவர் தான் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்கிறார் அல்லது செய்கிறதில்லையென நீங்கள் உணர்ந்தாலும் உணராவிடினும் பைபிளின் அறிவுரையை மனத்தாழ்மையுடன் பொருத்திப் பயன்படுத்துதல்.—ரோமர் 14:12; 1 பேதுரு 3:1, 2.

(7) தன் சொந்த ஆவிக்குரிய பண்புகளை வளரச் செய்வதற்குக் கவனம் செலுத்துதல்.—1 பேதுரு 3:3-6; கொலா. 3:12-14; கலா. 5:22, 23.

(8) பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்குத் தேவையான அன்பு, பயிற்றுவிப்பு, மற்றும் சிட்சையை அளித்தல்.—தீத்து 2:4; எபே. 6:4; நீதி. 13:24; 29:15.