மரணம்
மரணம்
சொற்பொருள் விளக்கம்: “உயிரின் எல்லா இயக்கங்களும் நின்றுவிடுதல். சுவாசித்தலும், இருதயத் துடிப்பும், மூளை செயல்படுவதும் நின்றுவிட்டபின்பு, உடலின் உயிரணுக்களிலுள்ள உயிர்ச்சக்தி செயல்படுவது படிப்படியாய் நின்றுவிடுகிறது. மரணம் உயிர்வாழ்வதற்கு எதிர்மாறானது.
மனிதன் மரிப்பதற்கே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டானா?
அதற்கு மாறாக, மரணத்துக்கு வழிநடத்தும் கீழ்ப்படியாமைக்கு எதிராக யெகோவா ஆதாமை எச்சரித்தார். (ஆதி. 2:17) பின்னால், அகாலமரணத்துக்கும் வழிநடத்தக்கூடிய நடத்தைக்கு எதிராகக் கடவுள் இஸ்ரவேலரை எச்சரித்தார். (எசே. 18:31) ஏற்றக் காலத்தில் தம்முடைய குமாரனை மனிதவர்க்கத்துக்காக மரிக்கும்படியும் இவ்வாறு இந்த ஏற்பாட்டில் விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழும்படியும் கடவுள் அனுப்பினார்.—யோவான் 3:16, 36.
பொதுவாக மானிடரின் ஆயுட்காலம் 70 அல்லது 80 ஆண்டுகள் என்று சங்கீதம் 90:10-ல் சொல்லியிருக்கிறது. மோச அதை எழுதினபோது அவ்வாறு இருந்தது, ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இல்லை. (ஆதியாகமம் 5:3-32-ஐ ஒப்பிடுங்கள்.) “ஒரேதரம் மரிப்பதும், . . . மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிற”தென்று எபிரெயர் 9:27-ல் சொல்லியிருக்கிறது. இதுவும், அது எழுதப்பட்டபோது அவ்வாறு இருந்தது. ஆனால் கடவுள் பாவியான ஆதாமின்பேரில் நியாயத்தீர்ப்பைக் கூறுவதற்கு முன்னால் அவ்வாறு இல்லை.
நாம் ஏன் வயோதிபராகி மரிக்கிறோம்?
யெகோவா, முதல் மானிட ஜோடியைப் பரிபூரணராகவும், என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடனும் சிருஷ்டித்தார். தெரிவு சுயாதீனத்தை இயற்பண்பாக அவர்களில் அமைத்திருந்தார். அவர்கள் தங்கள் சிருஷ்டிகரின்பேரிலுள்ள ஆதி. 2:17; 3:1-19; 5:3-5; உபாகமம் 32:4 மற்றும் வெளிப்படுத்துதல் 12:9-உடன் ஒப்பிடுங்கள்.
அன்பினாலும் அவர் தங்களுக்குச் செய்த எல்லாவற்றிற்காக நன்றியுணர்வினாலும் தூண்டப்பட்டு அவருக்குக் கீழ்ப்படிவார்களா? அவ்வாறு செய்வதற்கு அவர்கள் முற்றிலும் திறமையுடையோராயிருந்தனர். கடவுள் ஆதாமிடம் பின்வருமாறு கூறினார்: “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” ஒரு சர்ப்பத்தைப் பேசுவதற்கான கருவியாகப் பயன்படுத்தி, சாத்தான், யெகோவாவின் கட்டளையை மீறும்படி ஏவாளைக் கவர்ச்சியூட்டி வஞ்சித்தான். ஆதாம் தன் மனைவியைக் கடிந்துகொள்ளவில்லை, மாறாக அந்த விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடுவதில் அவளுடன் சேர்ந்துகொண்டான். யெகோவா, தம்முடைய வார்த்தைக்கு உண்மையாக, ஆதாமின்மீது மரணத் தீர்ப்பைக் கூறினார், ஆனால் பாவிகளான அந்த ஜோடியின்பேரில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால், அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படி யெகோவா இரக்கத்துடன் அவர்களை அனுமதித்தார்.—ரோமர் 5:12, 17, 19: “ஒரே மனுஷனாலே [ஆதாமால்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது—. . . ஒருவனுடைய மீறுதலினாலே, . . . மரணம் [அரசனாக] ஆண்டுகொண்டிருக்[கிறது], . . . ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்”டார்கள்.
1 கொரி. 15:22: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கி[றார்கள்].”
“விதி” என்ற முக்கிய தலைப்பையும் பாருங்கள்.
குழந்தைகள் ஏன் மரிக்கிறார்கள்?
சங். 50:5, கத்.பை. “இதோ குற்றமுள்ள நிலையில் நான் பிறந்தேன்: பாவ நிலையிலேயே என் அன்னை என்னைக் கருத்தரித்தாள்.” (யோபு 14:4; ஆதியாகமம் 8:21-ஐயும் பாருங்கள்.)
ரோமர் 3:23; 6:23: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா[னார்கள்.] . . . பாவத்தின் சம்பளம் மரணம்.”
கடவுள் “எடுத்துக்கொள்கிறார்,” என்று சிலருக்குச் சொல்லப்பட்டிருப்பதுபோல், கடவுள் பிள்ளைகளை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து எடுத்துக்கொள்வதில்லை. பூமி போதிய உணவை விளைவிக்கிறபோதிலும், மிக அதிகத் தேவையிலிருப்போருக்கு அதைப் பகிர்ந்தளிப்பதற்கு, தன்னல அரசியல் மற்றும் வியாபார மூலங்கள் அடிக்கடி இடையூறாக இருக்கின்றன, இது உணவு ஊட்டப்போதாக்குறையினால் மரணத்தில் விளைவடைய செய்கிறது. சில பிள்ளைகள், பெரியவர்களைப்போல், விபத்துகளில் மரிக்கின்றனர், ஆனால் நாமெல்லாரும் பாவத்தைச் சுதந்தரித்திருக்கிறோம்; நாமெல்லாரும் அபூரணர். எல்லாரும்—நல்லோரும் பொல்லாதவர்களும்—முடிவில் மரிக்கும் ஓர் ஒழுங்குமுறைக்குள் பிறந்திருக்கிறோம். (பிர. 9:5) ஆனால் உயிர்த்தெழுப்புவதன்மூலம் பிள்ளைகளை அவர்களுடைய பெற்றோருடன் திரும்ப ஒன்றுசேர்க்க யெகோவா ‘ஆவலுடன் விரும்புகிறார்,’ அவ்வாறு செய்வதற்கு ஏற்பாடும் செய்திருக்கிறார்.—யோவான் 5:28, 29; யோபு 14:14, 15; ஒப்பிடுங்கள் எரேமியா 31:15, 16; மாற்கு 5:40-42.
மரித்தோர் எங்கே இருக்கின்றனர்?
ஆதி. 3:19: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய்; மண்ணுக்குத் திரும்புவாய்.”
பிர. 9:10: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [ஷியோல், NW; “பிரேதக்குழி,” KJ, Kx; “மரித்தோரின் உலகம்,” TEV] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”
மரித்தோரின் நிலைமை என்ன?
பிர. 9:5: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”
சங். 146:4: “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் [“யோசனைகள்,” KJ, கத்.பைபிளில் 145:4; “அவனுடைய சிந்தனைகளெல்லாம்,” NE; “திட்டங்கள்,” கத்.பை., RS, NAB] அழிந்துபோம்.”
யோவான் 11:11-14: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் . . . இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச்” சொன்னார். (சங்கீதம் 13:3-ம்)
உடல் சாகையில் மனிதனின் ஏதோ பாகம் தொடர்ந்து உயிரோடிருக்கிறதா?
எசே. 18:4: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே [“ஆத்துமா,” RS, NE, KJ, Dy, Kx, “ஆன்மாவே,” கத்.பை.; “மனிதன்,” JB; “ஆள்,” TEV] சாகும்.”
ஏசா. 53:12: “அவர் தம்முடைய ஆத்துமாவை [“ஆத்துமா,” RS, KJ, Dy, கத்.பை.; “உயிர்,” TEV; “தம்மை,” JB; Kx, NAB] மரணத்திலூற்றி”னார். (மத்தேயு 26:38-ஐ ஒப்பிடுங்கள்.)
“ஆத்துமா” மற்றும் “ஆவி” என்ற முக்கிய தலைப்புகளின் கீழ் பாருங்கள்.
மரித்தோர் உயிருள்ளோருக்கு எம்முறையிலாவது உதவிசெய்ய அல்லது தீங்குசெய்ய முடியுமா?
பிர. 9:6: “அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும் அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.”
ஏசா. 26:14: “அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்.”
மரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபின் உயிர்ப்பிக்கப்பட்டு மற்றொரு வாழ்க்கையைப்பற்றிப் பேசின ஆட்களால் செய்யப்பட்ட அறிவிப்புகளைப்பற்றியதென்ன?
இயல்பாய், ஓர் ஆள் சுவாசிப்பது நின்றுபோய் இருதயத் துடிப்பு நின்றுவிட்டபின்னும், உடலின் உயிரணுக்களிலுள்ள உயிர்ச்சக்தி படிப்படியாய் இல்லாமல் போகத் தொடங்குவதற்குமுன் பல நிமிடங்கள் செல்லும். அந்த
உடலைக் கடுமையான குளிருக்கு உட்படுத்தினால், இவ்வாறு நடப்பதைப் பலமணிநேரங்கள் தாமதித்து வைக்கலாம். இந்தக் காரணத்தினிமித்தம், இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட உயிர்ப்பிக்கும் செயல்முறையைக்கொண்டு (கார்டியோபல்மனரி ரிஸஸ்ஸிடேஷன்) ஆட்களைத் திரும்ப உயிர்ப்பிக்கச் செய்வது சிலசமயங்களில் கூடியதாயிருக்கிறது. இவர்கள் “மருத்துவ ரீதியாக மரித்தவர்கள்,” எனச் சொல்லப்படுகின்றனர், ஆனால் அவர்களுடைய உடலின் உயிரணுக்கள் இன்னும் உயிரோடிருக்கின்றன.“மருத்துவ ரீதியான மரணத்திலிருந்து” உயிர்ப்பிக்கப்பட்ட பல ஆட்களுக்கு எதுவும் நினைவில் இல்லை. மற்றவர்கள் மிதப்பதைப்போன்ற ஓர் உணர்ச்சியை அனுபவிப்பதாக அறிவிக்கின்றனர். சிலர் தாங்கள் அழகிய காரியங்களைக் கண்டதாகச் சொல்கின்றனர்; மற்றவர்கள் தங்கள் அனுபவத்தால் திகிலடைந்தனர்.
இந்த அனுபவங்கள் எவற்றிற்காவது மருத்துவ ரீதியான விளக்கம் உண்டா?
தி அரிஜோனா ரிப்பப்ளிக் என்ற பிரசுரத்தின் பதிப்பாசிரியர் பின்வருமாறு எழுதினார்: “மயக்கமருந்தின் பாதிப்பின்கீழ் இருப்பதுபோல், அல்லது நோயின் அல்லது காயமடைந்ததன் விளைவாக உடலின் சக்தி அதன் மிக அதிகம் தாழ்ந்தத் தளர்வுற்ற நிலையில் இருக்கையில், அதற்கேற்ப உடல் அங்கங்களின் கிரியைகளின் தானியங்கிக் கட்டுப்பாட்டுத் திறன் குறைந்துவிடுகிறது. இவ்வாறு நரம்பு மண்டலத்தின் நரம்பு சுரப்புகளும் மற்றும் சுரப்புகளாகச் செயல்படும் கூட்டுப்பொருட்களும் வெளியேற்றப்பட்டு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஊற்றப்படுகின்றன. இதன் விளைவாக வெளிப்படுகிற மற்றக் காரியங்களில் பிரமையும் உள்ளடங்கியிருக்கிறது. இந்தப் பிரமை, மரித்துத் திரும்ப உயிருக்கு வந்த ஓர் உணர்வைக் கொண்டுவருகிறது.”—மே 28, 1977, பக். C-1; மேலும் ஜெர்மன் மருத்துவ பத்திரிகை ஃபோர்ட்ஸ்கிரிட் டெர் மெடிஸின் (Fortschritte der medizin), எண் 41, 1979; இன்றைய உளநூல், ஜனவரி 1981.
ஆனால் உயிர்ப்பிக்கப்பட்டவர்களின் இந்தச் சாட்சியம், மரித்த அன்பானவர்கள் தங்களுக்குத் தோன்றி பேசின ஆட்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதல்லவா?
மரித்தோரின் நிலைமையைப்பற்றி முன்னால் மேற்கோளாக எடுத்துக்குறிப்பிட்ட அந்த வேத வசனங்களைத் தயவுசெய்து, திரும்ப வாசியுங்கள். மரித்தோரின் நிலைமையைப்பற்றி கடவுளுடைய சத்திய வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது?
மனிதர் வேறுவகையில் நம்பும்படி விரும்புகிறவன் யார்? கீழ்ப்படியாமை மரணத்தைக் கொண்டுவருமென்று யெகோவா நம்முடைய முதல் பெற்றோரை எச்சரித்தப் பின்பு, அதற்கு முரணாகப் பேசியது யார்? “அப்பொழுது சர்ப்பம் [சாத்தானால் பயன்படுத்தப்பட்டது; வெளிப்படுத்துதல் 12:9-ஐப் பாருங்கள்] ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; . . . என்றது.” (ஆதி. 3:4) பின்னால், நிச்சயமாகவே, ஆதாமும் ஏவாளும் மரித்தார்கள். அப்படியானால், மனிதனின் ஓர் ஆவி பாகம் உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைத்திருக்கிறதென்ற எண்ணத்தை உருவாக்கியது யார்? நாம் ஏற்கெனவே கவனித்தபடி, கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்வதில்லை. பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம், செத்தவர்களிடத்தில் குறிகேட்கும் பழக்கத்தை “அசுத்தமானது” மற்றும் “அருவருப்பானது” என்று கண்டனம் செய்தது. (லேவி. 19:31; உபா. 18:10-12; ஏசா. 8:19) தங்களைவிட்டுப் பிரிந்துசென்ற அன்பானவர்களோடு உயிரோடிருப்பவர்கள் வெறுமென பேச்சுத்தொடர்பு கொள்கிறார்களென்றால், அன்பான கடவுள் அந்தப் பழக்கத்தைக் கண்டனம் செய்வாரா? மறுபட்சத்தில், பேய்த்தன ஆவிகள் செத்தவர்களைப்போல் பாசாங்குசெய்துகொண்டு, ஒரு பொய்யை நிலைநாட்டும் எண்ணங்களை அவர்களுடைய மனதுக்குள் புகுத்தி மனிதவர்க்கத்தை மோசம்போக்கிக்கொண்டிருந்தால், அத்தகைய ஏமாற்றத்துக்கெதிராகத் தம்முடைய ஊழியரைப் பாதுகாப்பது கடவுளுடைய பங்கில் அன்புள்ள காரியமாயிருக்குமல்லவா?—எபே. 6:11, 12.
மரித்தோருக்காகத் துக்கங்கொண்டாடும் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பங்குகொள்வதில்லை?
அன்பான ஒருவர் மரித்துவிட்டதன்பேரில் துக்கமடைவது இயல்பானது அதைச் சரியானபடி வெளிப்படுத்தலாம்
தம்முடைய நெருங்கிய நண்பனான லாசரு மரித்தப்பின், “இயேசு கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:35) சில சமயங்களில் மரண சம்பந்தமாகக் கடவுளுடைய ஊழியர்கள் அனுபவித்தத் துக்கம் மிகக் கடுமையாயிருந்திருக்கிறது.—2 சாமு. 1:11, 12.
ஆனால் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையின் காரணமாக, கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு சொல்லப்படுகிறது: “நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.”—1 தெச. 4:13.
மரணத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாப் பழக்கங்களையும் யெகோவாவின் ஊழியர்கள் தள்ளிவிடுவதில்லை
ஆதி. 50:2, 3: “தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; . . . சுகந்தவர்க்கமிட [“வழக்கமாய்,” NW] நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின.”
யோவான் 19:40: “அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே [“வழக்கத்தின்படி,” NW] அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.”
கடவுளைப் பிரியப்படுத்த நாடுகிறவர்கள் கடவுளுடைய வார்த்தைக்கு முரண்படும் பழக்கவழக்கங்களைத் தவிர்க்கின்றனர்
சில வழக்கங்கள் ஒருவரின் துக்கத்தை யாவரறிய விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் இயேசு பின்வருமாறு சொன்னார்: “[துக்கத்தினிமித்தம்] நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல் முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, மத். 6:16-18.
அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”—மனிதனுக்கு அழியாமையுள்ள ஓர் ஆத்துமா இருக்கிறது, அது உடலின் மரணத்தைத் தப்பிப்பிழைக்கிறது, ஆகவே, உயிரோடிருப்பவர்கள் செய்துகொண்டிருப்பதை அறிகிறது என்ற நம்பிக்கையைச் சில வழக்கங்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால், பைபிளில் சொல்லியிருப்பதாவது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிர. 9:5) மேலும், “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.”—எசே. 18:4.
மரித்தோருக்கு உயிருள்ளோரின் உதவி தேவை என்ற நம்பிக்கையிலிருந்து அல்லது அவர்களைச் சாந்தப்படுத்தாவிடில் உயிருள்ளோருக்கு அவர்கள் தீங்குசெய்யலாம் என்ற பயத்திலிருந்து பல வழக்கங்கள் தோன்றுகின்றன. ஆனால் மரித்தோர் துன்பத்தையோ இன்பத்தையோ அனுபவிக்கிறதில்லையென கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங். 146:4; 2 சாமுவேல் 12:22, 23-ஐயும் பாருங்கள்.) “அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.”—பிர. 9:6.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘இது கடவுளுடைய சித்தம்’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘இது மிகப் பொதுவான நம்பிக்கை. ஆனால் கடவுள்தாமே இதைப்பற்றிச் சொல்வதை ஆராய்ந்து பார்ப்பது பயனுள்ளதென நான் கண்டிருக்கிறேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘(ஆதியாகமம் 2:17-ஐ வாசியுங்கள்.) ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வது அவனுடைய உயிரையே இழக்கச் செய்யுமென ஒரு தகப்பன் தன் மகனை எச்சரித்தால், அந்த மகன் அதைச் செய்யும்படி தகப்பன் விரும்புகிறாரென நீங்கள் சொல்வீர்களா?’ (2) ‘அப்படியானால் மனிதவர்க்கத்தைக் குறித்தக் கடவுளுடைய சித்தம் உண்மையில் என்ன? இயேசு பின்வருமாறு சொன்னார்: “குமாரனைக் கண்டு [அதாவது, இயேசு உண்மையாகவே கடவுளுடைய குமாரன் என மனதில் உணர்ந்து ஏற்றுக்கொண்டு] அவரிடம் விசுவாசம் வைக்கிறவன் எவனும் நித்திய ஜீவனை உடையவனாக வேண்டுமென்பதே என் பிதாவின் சித்தம்; நானும் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.” (யோவான் 6:40, தி.மொ.)’
‘மனிதர் எப்பொழுதும் மரித்துக்கொண்டுதான் இருப்பார்கள்’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘அது நிச்சயமாகவே நம்முடைய நாள்வரை மனிதருக்கு சம்பவித்துவந்திருக்கிறதல்லவா?’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘ஆனால் வெளிப்படுத்துதல் 21:3, 4-ல் கடவுள் கொடுத்திருக்கும் இந்த அதிசயமான வாக்குறுதியைக் கவனியுங்கள் (அல்லது ஏசாயா 25:8).’
‘உங்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடியும்போது அது வருகிறது’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘நீங்கள் உணருகிறபிரகாரம் பலர் உணருகிறார்கள். பூர்வ கிரேக்கரில் பலர் இதே கருத்தைக் கொண்டிருந்தனரென உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மனிதனுக்குமுரிய வாழ்நாள் நீடிப்பு அளவைத் தீர்மானித்த மூன்று தேவதைகள் இருந்தார்களென அவர்கள் நம்பினர். ஆனால் வாழ்க்கையைப் பற்றிய வெகு வேறுபட்ட கருத்தை பைபிள் அளிக்கிறது.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘(பிரசங்கி 9:11-ஐ (NW) வாசியுங்கள்.) உதாரணம்: காரைக்கட்டுத் துண்டு ஒன்று ஒரு கட்டிடத்திலிருந்து உடைந்து, நடந்துசெல்பவர் ஒருவர்மீது விழலாம். அதைக் கடவுள் நடப்பித்தாரா? அப்படியானால், அந்தக் கட்டிடநிலையைக் கவனியாமற்விட்டதே காரணமென கட்டிடச் சொந்தக்காரரைக் குற்றஞ்சாட்டுவது நியாயமா? . . . பைபிளில் சொல்லியிருக்கிறபடி, அந்த வழியில் சென்றவருக்கு, அந்தக் காரைக்கட்டி விழும்சமயத்தில் அவர் அதற்குநேராக அவ்விடத்தில் இருந்தது, முன்தீர்மானிக்கப்படாத மற்றும் எதிர்பாராத சம்பவமே.’ (2) ‘நாம் கெட்ட நடத்தையைத் தவிர்த்தால் நம்முடைய உயிரைப் பாதுகாத்துக்கொள்வோமென பைபிள் நமக்குச் சொல்கிறது. (நீதி. 16:17) நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இந்த நியமத்தை உங்கள் பிள்ளைகளுக்குப் பொருத்திப் பயன்படுத்துகிறீர்களென்று நான் நிச்சயமாயிருக்கிறேன். உயிரை இழப்பதில் விளைவடையக்கூடிய காரியங்களுக்கு எதிராக நீங்கள் அவர்களை எச்சரிக்கிறீர்கள். இன்று யெகோவா அதையே மனிதவர்க்கம் முழுவதற்கும் செய்துகொண்டிருக்கிறார்.’ (3) ‘எதிர்காலம் முன்வைத்திருப்பதை யெகோவா அறிந்திருக்கிறார். நாம் எவ்வாறு, அவர் சொல்வதை அசட்டைசெய்கிற ஆட்களைப் பார்க்கிலும் மிக நீடித்தக் காலம் உயிரை அனுபவித்து மகிழக்கூடுமென பைபிளின்மூலம் அவர் நமக்குச் சொல்கிறார். (யோவான் 17:3; நீதி. 12:28)’ (“விதி” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.)