Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யூதர்கள்

யூதர்கள்

யூதர்கள்

சொற்பொருள் விளக்கம்:  இன்று பொதுவாய்ப் பயன்படுத்துகிறபடி, இந்தப் பதம் எபிரெய வம்சபரம்பரையில் வந்த மக்களையும் யூதேய மதத்துக்கு மாற்றப்பட்ட மற்றவர்களையும் குறிக்கிறது. மேலும் பைபிள், ஆவிக்குரியபடி யூதரான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் “கடவுளின் இஸ்ரவேலர்” ஆகிறார்கள் என்பதற்குக் கவனத்தை இழுக்கிறது.

இன்று மாம்சப்படியான யூதர்கள் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களா?

இது பல யூதர்களின் நம்பிக்கை. என்ஸைக்ளோபீடியா ஜூடேய்க்கா (ஜெருசலெம், 1971, புத். 5, பத்தி 498) சொல்வதாவது: “தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், என்பது இஸ்ரவேல் ஜனத்துக்குப் பொதுவான சுட்டுப்பெயர், இது இஸ்ரவேல் ஜனம் சர்வலோகக் கடவுளிடம் விசேஷித்த தனித்தன்மைவாய்ந்த உறவில் நிற்கிறதென்று எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இது யூத எண்ணத்தின் சரித்திரம் முழுவதிலும் ஒரு மையக் கருத்தாய் இருந்து வந்திருக்கிறது.”—உபாகமம் 7:6-8; யாத்திராகமம் 19:5-ஐ பாருங்கள்.

கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள பலர் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். அட்லான்டா ஜர்னல் அண்ட் கான்ஸ்டிட்யூஷன் பத்திரிகையில் “மதம்” என்ற பிரிவு (ஜனவரி 22, 1983, பக். 5-B) பின்வருமாறு அறிவித்தது: “கடவுள் ‘தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைத் தள்ளிவிட்டு’ ‘புதிய இஸ்ரவேலை’ அதனிடத்தில் வைத்தாரென்ற சர்ச்சுகளின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான போகங்களுக்கு மாறாக, அவர் [பால் M. வான் பூரன், ஃபிலடெல்பியாவிலுள்ள ஆலய பல்கலைக்கழக இறைமைநூல் பேராசிரியர்] ‘கடவுளுக்கும் யூத ஜனங்களுக்குமுள்ள உடன்படிக்கை நித்தியமானது,’ என்று சர்ச்சுகள் இப்பொழுது உறுதிசெய்கின்றன, ‘இந்த ஆச்சரியமான மாற்றம் அட்லான்ட்டிக்கின் இருபக்கங்களிலுமுள்ள புராட்டஸ்டன்ட்களாலும் கத்தோலிக்கராலும் செய்யப்பட்டிருக்கிறது.’ என்று கூறுகிறார்.” தி நியு யார்க் டைம்ஸ் (பிப்ரவரி 6, 1983, பக். 42) கூடுதலாகச் சொன்னதாவது: “‘புராட்டஸ்டன்ட்டுகளின் பங்கில் இஸ்ரவேல் சம்பந்தப்பட்ட உரிமையில் ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது, மேலும் இஸ்ரவேல் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிக்கவேண்டும், ஏனெனில் கடவுள் இஸ்ரவேலின் சார்பில் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது,’ என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸன் பல்கலைக்கழகத்தில் இறைமைநூல் பேராசிரியரும், உவெஸ்லின் புராட்டஸ்டன்ட் சமயத்தினருமான, தீமோத்தேயு ஸ்மித் கூறினார்.” மாம்சப்படியான இஸ்ரவேலர் எல்லாரும் மதம் மாற்றப்படுவதையும் முடிவாக இரட்சிப்படைவதையும் கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலர் எதிர்பார்க்கின்றனர். கடவுளுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே பிரிக்கமுடியாத ஓர் உறவு எப்பொழுதும் இருந்துவருகிறதென மற்றவர்கள் கருதுகிறார்கள், ஆகையால் புறஜாதியார் மாத்திரமே கிறிஸ்துவின்மூலம் ஒப்புரவாக வேண்டியவர்களென அவர்கள் விவாதிக்கின்றனர்.

கவனியுங்கள்: பாபிலோனிய நாடுகடத்தலைப் பின்தொடர்ந்து, இஸ்ரவேல் அதன் நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டபோது, அந்த ஜனங்கள் கடவுள்-கொடுத்த தங்கள் நாட்டில் உண்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டவேண்டியிருந்தது. அவர்கள் மேற்கொண்ட முதல் திட்டங்களில் ஒன்று எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதாகும். எனினும், பொ.ச. 70-ல் ரோமர் எருசலேமை அழித்ததுமுதற்கொண்டு, அந்த ஆலயம் ஒருபோதும் திரும்பக் கட்டப்படவில்லை. அதற்குப் பதில், அந்த முந்திய ஆலய நிலப்பகுதியில் இஸ்லாமியர் மசூதி நிற்கிறது. மோசயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் தாங்கள் இருப்பதாகச் சொல்லும் யூதர்கள், கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இன்று எருசலேமில் இருந்தால், அவருடைய வணக்கத்துக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட ஆலயம் திரும்பக் கட்டப்பட்டிருக்குமல்லவா?

மத். 21:42, 43: “இயேசு அவர்களை [எருசலேமிலிருந்த யூதரின் பிரதான ஆசாரியர்களையும் மூப்பர்களையும்] நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே [யெகோவாவால், NW] ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் என்றார்.”

மத். 23:37, 38: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”

ஆபிரகாமுடன் கடவுள் செய்த உடன்படிக்கை, யூதர்கள் தொர்ந்து கடவுளின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாயிருப்பார்களென உறுதிதருகிறதா?

கலா. 3:27-29: “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும் [வித்தாயும்]; வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (ஆகவே, கடவுளுடைய நோக்குநிலையில், ஆபிரகாம் வித்து யாரென தீர்மானிப்பது இனிமேலும் ஆபிரகாமின் மாம்சப்படியான வம்சபரம்பரையல்ல.)

எல்லா யூதரும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதற்கு மதம் மாற்றப்பட்டு நித்திய மீட்பைப் பெறுவார்களா?

ரோமர் 11:25, 26, தி.மொ.: “சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடி இந்த இரகசியத்தை நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனமில்லை. அதென்னவெனில், புறஜாதியாரின் நிறைவு வரும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கிறது. இவ்விதமாக [“இந்தப்பிரகாரம்,” யூ.மொ.; கிரேக்கில், ஹெளடாஸ்] இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். (“இஸ்ரவேலரெல்லாரும்” இரட்சிக்கப்படுவது, எல்லா யூதர்களும் மதமாற்றப்படுவதால் அல்ல, ஆனால் புறஜாதியாரிலிருந்து ஜனங்கள் “வருவ”தால் நிறைவேற்றப்படுகிறதென்பதைக் கவனியுங்கள். சில மொழிபெயர்ப்பாளர்கள் 26-ம் வசனத்தைப் பின்வருமாறு மொழிபெயர்க்கின்றனர்: “பின்னும் இதன்பின்பு இஸ்ரவேலின் மீதியானோர் இரட்சிக்கப்படுவர்.” ஆனால் புதிய ஏற்பாட்டின் ஒரு கிரேக்கக் கையேடு [எடின்பர்க், 1937, G. அபட் ஸ்மித், பக். 329] ஹெளடாஸ் என்பதை “இம்முறையில், எனவே, இவ்வாறு” என பொருள்கொள்வதாக விளக்குகிறது.)

ரோமர் 11:25, 26-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளதைத் திருத்தமாய்ப் புரிந்துகொள்வதற்கு, ரோமரில் முன்னால் கூறப்பட்டுள்ள பின்வரும் இந்தக் கூற்றுகளையும் நாம் கவனத்துக்குள் ஏற்கவேண்டும்: “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” (2:28, 29) “இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.”—9:6.

இரட்சிக்கப்படுவதற்கு யூதர்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது கட்டாயம் தேவைப்படுகிறதா?

ஏசாயா 53:1-12-ல் ‘அநேகருடைய பாவங்களைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொள்வதற்கு’ மேசியா மரிப்பதைப்பற்றி முன்னறிவித்துள்ளது. தானியேல் 9:24-27-ல் மேசியாவின் வருகையும் அவருடைய மரணமும் ‘பாவங்களைத் தொலைப்பதோடும் அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுவதோடும்’ இணைக்கப்பட்டிருக்கின்றன. யூதர்களுக்கு அத்தகைய வேண்டுதலும் மன்னிப்பும் தேவைப்பட்டதை இந்த இரண்டு பகுதிகளும் காட்டுகின்றன. மேசியாவை வேண்டாமெனத் தள்ளிவிட்டு அவரை அனுப்பினவருடைய அங்கீகாரத்தைப் பெற அவர்கள் எதிர்பார்க்க முடியுமா?

அப். 4:11, 12: “[இயேசு கிறிஸ்துவைப்பற்றி, அப்போஸ்தலன் பேதுரு எருசலேமிலிருந்த யூத அதிபதிகளுக்கும் மூப்பர்களுக்கும் இவ்வாறு சொல்லும்படி பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டான்:] வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (மாம்சப்படியான இஸ்ரவேல் ஜனம் இனிமேலும் தனிப்பட்ட தெய்வீக தயவை அனுபவித்து மகிழாதபோதிலும், மேசியாவாகிய இயேசுவின்மூலம் கூடியதாக்கப்பட்டிருக்கிற மீட்பிலிருந்து பயனடைவதற்கான வழி, எல்லா ஜாதிகளின் ஜனத்தாருக்கும் திறந்திருப்பதுபோல், தனியாட்களான யூதர்களுக்கும் திறந்திருக்கிறது.)

இன்று இஸ்ரவேலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமா?

எசே. 37:21, 22: “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்.” (இன்று இஸ்ரவேல் தாவீதின் அரச வம்சபரம்பரையில் வந்த ஓர் அரசரின்கீழ் ஒரு ராஜ்யமாக இல்லை. அவர்களுடையது ஒரு குடியரசே.)

ஏசா. 2:2-4: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்பிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவாம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். . . . அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (இன்று எருசலேமில், முன்பு ஆலயம் இருந்த இடத்தில் “யாக்கோபின் தேவனுடைய ஆலயம்” இல்லை, அதற்குப்பதில், இஸ்லாமியர் மசூதி ஒன்றே அங்கிருக்கிறது. மேலும் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிக்கும்”படியான முயற்சி இஸ்ரவேலின் பங்கிலோ அதன் அயலாரின் பங்கிலோ செய்யப்படவில்லை. தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இராணுவ முறையில் தயாராயிருப்பதிலேயே அவர்கள் சார்ந்திருக்கின்றனர்.)

ஏசா. 35:1, 2: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.” (தனிச்சிறப்புக்குரியமுறையில் காடுகளைத் திரும்பப் புதுப்பித்தல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் இஸ்ரவேலில் வெற்றிகரமாய் மேற்கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் தலைவர்கள் கர்த்தராகிய கடவுளுக்குப் புகழைக் கொடுக்கிறதில்லை. டேவிட் பென்-குரியன் என்ற முன்னாள் முதலமைச்சர் சொன்னபடி: “இஸ்ரவேல் . . . வனாந்தரத்தைக் கீழ்ப்படுத்தி விஞ்ஞானத்தின் வல்லமையாலும் புதுவழிகாணும் முயற்சிகொண்ட மனப்பான்மையாலும் அதைச் செழிக்கச் செய்து, நாட்டை மக்களாட்சிக்குரிய அரண் ஆக்குவதற்கு . . . உறுதிசெய்திருக்கிறது.”)

சகரி. 8:23: “அந்நாட்களில் பலவித [எல்லா, NW] பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு; தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவாம் என்று சொல்”வார்கள். (இந்தத் தீர்க்கதரிசனம் எந்தக் கடவுளைக் குறிக்கிறது? எபிரெய மொழியில் அவருடைய பெயர் [יהזח, பொதுவாய் ஜெஹோவா என மொழிபெயர்க்கப்படுகிறது] பரிசுத்த வேத எழுத்துக்களின் இந்த ஒரு புத்தகத்தில் மாத்திரமே 130 தடவைகளுக்குமேல் காணப்படுகிறது. இன்று எவராவது இந்தப் பெயரைப் பயன்படுத்துகையில், அந்த ஆள் யூதனாக இருக்கவேண்டுமென ஆட்கள் முடிவுசெய்கிறார்களா? இல்லை; பல நூற்றாண்டுகளாக, மொத்தத்தில் யூத ஜனங்கள், கடவுளுடைய சொந்தப் பெயரைச் சொல்வதிலிருந்தே தவிர்த்திருக்கும்படி, போலி பக்தி அவர்களைச் செய்வித்திருக்கிறது. இன்று மாம்சப்படியான இஸ்ரவேலைக் குறித்த இந்த மத அக்கறையின் பொங்கெழுச்சி இந்தத் தீர்க்கதரிசனத்துக்குப் பொருந்துகிறதில்லை.)

அப்படியானால், தற்கால இஸ்ரவேலில் நடக்கும் நிகழ்ச்சிகளை எவ்வாறு கருதுவது? பைபிளில் முன்னறிவித்துள்ள பூகோள எழுச்சிகளின் பாகமாகவே வெறுமென கருதவேண்டும். இவை போர், அக்கிரமம், கடவுள்பேரில் அன்பு தணிந்துபோதல், பண ஆசை ஆகியவை உட்பட்டிருக்கின்றன.—மத். 24:7, 12; 2 தீமோ. 3:1-5.

இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இன்று யாருக்குள் நிறைவேற்றமடைகின்றன?

கலா. 6:15, 16: “விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.” (ஆகையால் “தேவனுடைய இஸ்ரவேலர்,” இன்னாரென்பது, ஆபிரகாமுக்குக் கொடுத்தக் கட்டளையாகிய அவன் வீட்டாரின் ஆண்கள் யாவரும் விருத்தசேதனஞ்செய்யப்பட வேண்டுமென்பதைக் கடைப்பிடிப்பதன்பேரில் இனிமேலும் தீர்மானிக்கப்படுகிறதில்லை. அதைப் பார்க்கிலும், கலாத்தியர் 3:26-29-ல் கூறப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவுக்கு உரியவர்களும் ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்களுமான கடவுளுடைய குமாரரே “உண்மையில் ஆபிரகாமின் வித்தானவர்கள்,” NW.)

எரே. 31:31-34, தி.மொ.: “இதோ நாட்கள் வரும், இது யெகோவாவின் திருவாக்கு; அப்பொழுது இஸ்ரவேல் வீட்டாரோடும், யூதா வீட்டாரோடும் புது உடன்படிக்கை செய்வேன். . . . இனி எவனும் தன் அயலானுக்கும் எவனும் தன் சகோதரனுக்கும் போனை செய்து, யெகோவாவை அறிந்துகொள்ளுங்கள் எனச் சொல்வதில்லை; அவர்கள் எல்லாரும், சிறியவன் முதல் பெரியவன் வரைக்கும் என்னை அறிந்துகொள்வார்கள்; இது யெகோவாவின் திருவாக்கு.” (இந்தப் புது உடன்படிக்கை மாம்சப்படியான இஸ்ரவேல் ஜனத்தோடு அல்ல, இயேசு கிறிஸ்துவை உண்மைப்பற்றுடன் பின்பற்றினோரோடு செய்யப்பட்டது, இவர்களுக்குப் பரலோக வாழ்க்கையின் நம்பிக்கை அளிக்கப்பட்டது. இயேசு, தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலைத் தொங்கிவைத்தபோது, அவர்களிடம் திராட்சமதுபான பாத்திரத்தைக் கொடுத்து: “இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது,” என்று சொன்னார். [1 கொரி. 11:25])

வெளி. 7:4: “முத்திரைபோடப்பட்டவர்களின் தொகயைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.” (ஆனால் பின்தொடர்ந்துவரும் வசனங்களில், “லேவி கோத்திரமும்” “யோசேப்பு கோத்திரமும்” குறிப்பிட்டிருக்கின்றன. மாம்சப்படியான இஸ்ரவேலின் 12 கோத்திரங்களின் பெயர்ப் பட்டியலில் இவை சேர்க்கப்படவில்லை. கவனத்தைக் கவருவதாய், ஆட்கள் “சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்”படுவார்களென சொல்லியிருக்கையில், தாண் மற்றும் எப்பிராயீம் கோத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை. [எண்ணாகமம் 1:4-16-ஐ ஒத்துப்பாருங்கள்.] இங்கே குறிக்கப்படுவோர் ஆவிக்குரிய இஸ்ரவேலராகவே இருக்கவேண்டும், கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்வார்களென்று வெளிப்படுத்துதல் 14:1-3 காட்டுகிற ஆட்களாகவே இருக்கவேண்டும்.)

எபி. 12:22: “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், . . . வந்து சேர்ந்தீர்கள்.” (இவ்வாறு பூமிக்குரிய எருசலேமினிடம் அல்ல “பரம எருசலேமினிடமே” கடவுளின் வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றமடையும்படி உண்மையான கிறிஸ்தவர்கள் நோக்கியிருக்கிறார்கள்.)