Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 7—நவீன காலங்களில் பைபிள்

ஆராய்ச்சி எண் 7—நவீன காலங்களில் பைபிள்

ஆராய்ச்சி எண் 7—நவீன காலங்களில் பைபிள்

பைபிள் சங்கங்களின் சரித்திரம்; பைபிள்களை அச்சடித்து வெளியிடுவதில் த உவாட்ச் டவர் சொஸைட்டியின் பங்கு; புதிய உலக மொழிபெயர்ப்பை உருவாக்கியது.

பரிசுத்த வேதாகமத்தில், அதாவது தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட 66 புத்தகங்களைக் கொண்ட பைபிளில் “யெகோவாவின் வார்த்தை” உள்ளது. (ஏசா. 66:​5, NW) இந்த “வார்த்தை,” யெகோவாவிடமிருந்து பூமியிலிருந்த அவருடைய தீர்க்கதரிசிகளுக்கும் ஊழியர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக தாராளமாய் அருளப்பட்டது. கடவுளிடமிருந்து இவ்விதம் வந்த செய்திகள் அவற்றின் உடனடி நோக்கத்தை நிறைவேற்றின; மேலும் எதிர்காலத்தில் நிச்சயமாய் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய சக்திவாய்ந்த முற்காட்சிகளையும் அளித்தன. கடவுளுடைய தீர்க்கதரிசிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ‘யெகோவாவின் வார்த்தையை’ எழுதிவைக்கும்படி எல்லா சமயத்திலும் எதிர்பார்க்கப்படவில்லை. உதாரணமாக, எலியாவும் எலிசாவும், அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொன்னவற்றில் சில விஷயங்கள் எழுதப்பட்டு பாதுகாக்கப்படவில்லை. மறுபட்சத்தில், தீர்க்கதரிசிகளாகிய மோசே, ஏசாயா, எரேமியா, ஆபகூக் போன்றோர் தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ‘யெகோவாவின் வார்த்தையை’ ‘எழுதும்படி’ அல்லது ‘ஒரு புஸ்தகத்தில் அல்லது சுருளில் எழுதும்படி’ திட்டவட்டமான கட்டளைகளை பெற்றனர். (யாத். 17:14; ஏசா. 30:8; எரே. 30:​2, ஆப. 2:2; வெளி. 1:11) இவ்விதம் ‘பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளும்’ மற்ற பரிசுத்த எழுத்துக்களும் பாதுகாத்து வைக்கப்பட்டன. யெகோவாவின் ஊழியர்களது சிந்திக்கும் திறமைகளை தூண்டியெழுப்புவதற்கும் முக்கியமாக ‘கடைசிநாட்களை’ பற்றி சரியான வழிநடத்துதலை அளிப்பதற்கும் பாதுகாக்கப்பட்டன.​—2 பே. 3:​1-3.

2எஸ்றாவின் காலம் முதற்கொண்டு தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தை அதிகமாக நகல் எடுக்க ஆரம்பித்தனர். பைபிள் பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் பூர்வ கிறிஸ்தவர்களால் நகல் எடுக்கப்பட்டு, பின்பு நகலிலிருந்து நகலெடுப்பது தொடங்கப்பட்டது; அப்போது அறியப்பட்ட உலகத்தின் எல்லைகள் முழுவதிலும் கிறிஸ்து சம்பந்தப்பட்ட யெகோவாவின் நோக்கங்களை சாட்சியளிப்பதற்கு பைபிள் பயன்படுத்தப்பட்டது. நகர்த்தக்கூடிய அச்சைக்கொண்டு (movable type) அச்சடிப்பது (15-வது நூற்றாண்டிலிருந்து) பிரபலமானபோது, பைபிளின் நகல்களை அதிகரிப்பதற்கும் விநியோகம் செய்வதற்கும் அதிக ஊக்கமளிக்கப்பட்டது. 16-வது 17-வது நூற்றாண்டுகளில், தனிப்பட்ட முறையில் சில தொகுதியினர் மொழிபெயர்ப்பு செய்து அச்சடித்தனர். பைபிள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ 71 மொழிகளில் 1800-களிலேயே கிடைத்தது.

பைபிள் சங்கங்கள்

3புதிதாக அமைந்த பைபிள் சங்கங்கள், 19-வது 20-வது நூற்றாண்டுகளில் பைபிளை விநியோகிக்கும் மாபெரும் வேலையைச் செய்ய ஆரம்பித்தன; அப்போது இந்த வேலைக்கு அதிக ஊக்கமளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட பழமையான பைபிள் சங்கங்களில் பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டியும் ஒன்று; இது 1804-ல் லண்டனில் அமைக்கப்பட்டது. மேலும் பல சங்கங்கள் அமைக்கப்படுவதற்கு இது ஒரு தூண்டுகோலானது. a

4இத்தனை பைபிள் சங்கங்கள் இயங்கியதால், பைபிளைப் பரவச்செய்யும் வேலை செழித்தோங்கியது. 1900 ஆண்டுக்குள், பைபிள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ 567 மொழிகளிலும், 1928-க்குள் 856 மொழிகளிலும் கிடைத்தது. 1938-க்குள் ஆயிரம் மொழிகள் என்ற இலக்கை எட்ட முடிந்தது. இப்போது 2,000-க்கும் மேற்பட்ட மொழிகளில் பைபிள் கிடைக்கிறது. புத்துயிரளிக்கும் யெகோவாவின் ஜீவ வார்த்தை பூமி முழுவதும் பரவிவிட்டது! இவ்வாறு, ‘ஜாதிகளே நீங்கள் எல்லாரும் யெகோவாவைத் துதியுங்கள், ஜனங்கள் யாவரும் அவரைத் துதிப்பார்களாக,’ என்ற அழைப்புக்கு எல்லா தேசத்தைச் சேர்ந்த ஜனத்தாரும் பதிலளிப்பதற்கு சாத்தியமானது. (ரோ. 15:11, NW) தற்கால பைபிள் விநியோகிப்பைப் பற்றி 322-வது பக்கத்திலுள்ள, “முக்கிய ஏழு மொழிகளில் பிரபல பைபிள் மொழிபெயர்ப்புகள் சில” என்ற அட்டவணை கூடுதலான தகவல் அளிக்கிறது.

5திரளான ஜனங்களுக்கு பைபிள் கிடைக்கும்படி செய்வது போற்றத்தக்க ஓர் ஊழியமாக இருக்கிறபோதிலும், பைபிளை ஜனங்கள் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் உதவுவது அதைப் பார்க்கிலும் மிக முக்கியமான வேலையாகும். சொற்ப பைபிள்களே கிடைத்த யூத மற்றும் பூர்வ கிறிஸ்தவர்கள் காலத்தில்கூட வார்த்தையின் ‘உட்கருத்தை’ தெரிவிப்பதற்கே முக்கியத்துவம் அளித்தனர்; இதுவே இன்றைக்கும் மிக முக்கியமான காரியமாக இருக்கிறது. (மத். 13:23; நெ. 8:8, NW) எனினும், பைபிள் விரிவாக விநியோகம் செய்யப்பட்டிருப்பதால் பூமியில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் கடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும் இந்த ஊழியம் விரைவாக்கப்பட்டிருக்கிறது. இன்று யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதிலும் பைபிள் அறிவுபுகட்டும் ஊழியத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர்; எனவே லட்சக்கணக்கான பைபிள்கள் பல நாடுகளிலும் மொழிகளிலும் இப்போது கிடைப்பதால் அதற்காக நன்றியோடு இருக்கின்றனர்.

பைபிள் பிரசுரிப்போராக யெகோவாவின் சாட்சிகள்

6யெகோவாவின் சாட்சிகள் பைபிள் பிரசுரிக்கும் மக்களே. எஸ்றாவின் நாட்களில் இதைத்தான் செய்தனர். இயேசு கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்களின் நாட்களிலும் அவ்வாறே இருந்தது. இந்த சீஷர்கள் கையால் எழுதப்பட்ட பைபிள் நகல்களால் அந்தப் பூர்வ உலகத்தை நிரப்பினர்; எனவே இப்போது நமக்கு கிடைத்திருக்கும் அவர்களுடைய கையெழுத்துப் பிரதிகள் வேறு எந்தப் பூர்வ இலக்கியங்களைப் பார்க்கிலும் மிகவும் அதிகமானவை. அவர்களைப் போலவே இந்த நவீன காலங்களில் ஊக்கமாக பைபிளை பிரசுரிப்பது யெகோவாவின் சாட்சிகளின் தனித்தன்மை.

7பைபிள் பிரசுரிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் 1884-ல் ஒரு சங்கத்தை அமைத்தனர்; அது இப்போது, தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்சில்வேனியா என்று அறியப்படுகிறது. மறுவிநியோகம் செய்வதற்காக பைபிள்களை மற்ற பைபிள் சங்கங்களிலிருந்து சாட்சிகள் விலைக்கு வாங்கினர்; அவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த வீட்டுக்கு-வீடு-ஊழியத்தை அப்போதும் செய்து அதில் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் 1611-ல் வெளியிடப்பட்ட கிங் ஜேம்ஸ் வர்ஷன், அவர்கள் பைபிள் படிப்புக்கு அடிப்படை மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டது.

8தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி அதன் பெயருக்கேற்ப, பைபிள்களை விநியோகிப்பதிலும், அதோடு புத்தகங்களையும் துண்டுப்பிரதிகளையும் கிறிஸ்தவ இலக்கியங்களையும் பிரசுரிப்பதிலும் ஈடுபட்டுவந்திருக்கிறது. இது, கடவுளுடைய வார்த்தையின் போதகங்களை சரியாக விளக்கிக் கூறும் நோக்கத்துடனே செய்யப்படுகிறது. நீதியை நேசிப்போர் பொய்மத பாரம்பரியத்தையும் உலக தத்துவஞானத்தையும் விட்டு விலகுவதற்கு இந்த பைபிள் பயிற்றுவிப்பு உதவியிருக்கிறது. இயேசுவின் மூலமும் யெகோவாவுக்குப் பக்தியுள்ள பேச்சாளர்கள் மூலமும் வெளிப்படுத்தப்பட்ட பைபிள் சத்தியத்திடம் திரும்பி விடுதலை பெறுவதற்கு இது உதவி செய்திருக்கிறது. (யோவா. 8:​31, 32) 1879-ல் தி உவாட்ச்டவர் பத்திரிகை பிரசுரிக்கப்பட தொடங்கியது. அந்த சமயத்திலிருந்து, உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்கள் பல பைபிள் மொழிபெயர்ப்புகளை குறிப்பிட்டு காட்டியும், மேற்கோள் காட்டியும், இடக்குறிப்புகளில் கொடுத்தும் இருக்கின்றன. இவ்வாறு அவற்றின் நன்மதிப்பை சங்கம் மதித்துணர்ந்திருக்கிறது. பல மொழிபெயர்ப்பு பைபிள்களில் உள்ள நல்ல விஷயங்களை பயன்படுத்தி மத குழப்பத்தை நீக்கி கடவுளுடைய செய்தியைத் தெளிவாக தெரிவிப்பதற்கு அவை சங்கத்தால் பயன்படுத்தப்பட்டன.

9ரோதர்ஹாம் மற்றும் ஹோல்மன் பைபிள்கள். 1896-ல் யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் பிரசுரிப்போரும் விநியோகிப்போருமாக உவாட்ச் டவர் சொஸைட்டியின் மூலமாக பிரவேசித்தனர். அந்த ஆண்டில் பிரிட்டிஷ் பைபிள் மொழிபெயர்ப்பாளராகிய ஜோஸஃப் பி. ரோதர்ஹாமின் புதிய ஏற்பாட்டின் திருத்திய பன்னிரண்டாவது பதிப்பை ஐக்கிய மாகாணங்களில் பிரசுரிப்பதற்கு அச்சடிக்கும் உரிமைகளை பெற்றனர். இந்த பிரதிகளின் தலைப்பு தாளில், தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி, அலிகெனி, பென்ஸில்வேனியா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கத்தின் தலைமை அலுவலகம் அந்தச் சமயத்தில் அங்கிருந்தது. 1901-ல், ஹோல்மன் லீனியர் பைபிளை விசேஷமாய் அச்சடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் 1895-லிருந்து 1901 வரை வெளிவந்த சங்கத்தின் பிரசுரங்களிலிருந்து ஓர விளக்கக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்த பைபிள் வாக்கியம் எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமங்களின் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பையும் ரிவைஸ்ட் மொழிபெயர்ப்பையும் அளித்தது. 1903-வது ஆண்டுக்குள் இந்த பதிப்பின் 5,000 பிரதிகளும் விநியோகிக்கப்பட்டன.

10தி எம்ஃபாட்டிக் டயக்ளாட். 1902-ல் தி உவாட்ச் டவர் சொஸைட்டி, தி எம்ஃபாட்டிக் டயக்ளாட்டின் பதிப்புரிமை சொந்தக்காரரும், தனி பிரசுரிப்புரிமையுடையோரும், விநியோகிப்போருமாக ஆனது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இந்த மொழிபெயர்ப்பு, ஆங்கிலேயராய் பிறந்த பைபிள் மொழிபெயர்ப்பாளராகிய இல்லினாய்ஸிலுள்ள ஜெனீவா நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் வில்சனால் 1864-ல் முடிக்கப்பட்டது. அது, ஜே. ஜே. கிரீஸ்பாச்சின் கிரேக்க வாக்கியத்தைப் பயன்படுத்தியது. வரிகளுக்கிடையே சொல்லுக்குச் சொல் ஆங்கில மொழிபெயர்ப்பையும், வலதுபுறத்தில் அழுத்தத்துக்குரிய தனிப்பட்ட அடையாளக்குறிகளைப் பயன்படுத்தியுள்ள வில்சனின் சொந்த மொழிபெயர்ப்பையும் கொண்டுள்ளது.

11பைபிள் மாணாக்கரின் ஒரு பதிப்பு. 1907-ல் தி உவாட்ச் டவர் சொஸைட்டி, “பைபிள் மாணாக்கர் பதிப்பு” என்ற ஆங்கில பைபிளை பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பின் தெளிவாக அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளும், மிகச் சிறந்த ஓரக் குறிப்புகளும், யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட பயனுள்ள பிற்சேர்க்கையும் இருந்தன. பின்னால் 550 பக்கங்களுக்குமேல் விரிவாக்கப்பட்ட இந்தப் பிற்சேர்க்கை, ‘பெரோய பைபிள் போதகர்களின் கையேடு’ என்றழைக்கப்பட்டு, தனி புத்தக உருவிலும் பிரசுரிக்கப்பட்டது. இது, பைபிள் வசனங்கள் பலவற்றின்பேரில் சுருக்கமான விளக்கக் குறிப்புகளைக் கொண்டிருந்தது; அதில் தி உவாட்ச் டவர் மற்றும் சங்கத்தின் பாடபுத்தகங்களுக்கு ரெஃபரன்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதை எளிதாக்குவதற்காக கோட்பாடு சம்பந்தப்பட்ட பொருட்களின் சுருக்கக் குறிப்புகளும் முக்கிய வேதவசனங்களும் இருந்தன. இது சங்கத்தால் பிற்பாடு பிரசுரிக்கப்பட்ட ‘எல்லாவற்றையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’ (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை ஒத்திருந்தது. மேலும் அதில் பொருளடக்க அட்டவணை, கடினமான வசனங்களின் விளக்கங்கள், போலியான பகுதிகளின் ஒரு பட்டியல், வேதவசன அட்டவணை, ஓர் ஒப்பீட்டுக் காலக்கணக்கு மற்றும் 12 தேசப்படங்களும் அடங்கியிருந்தன. இந்த மிகச் சிறந்த பைபிள், யெகோவாவின் சாட்சிகளுக்கு அவர்களுடைய ஊழியத்தில் பல ஆண்டுகள் பயனளித்தது.

பைபிள் அச்சிடும் ஒரு சங்கம்

1230 ஆண்டுகளாக, உவாட்ச் டவர் சொஸைட்டி பைபிள்களை அச்சடிப்பதற்கு வெளியாட்களின் அச்சாலைகளை பயன்படுத்தியது. எனினும், நியூ யார்க், புரூக்ளினில் சங்கத்தின் அச்சாலைகளில் டிசம்பர் 1926-ல் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிள் தி எம்ஃபாட்டிக் டயக்ளாட். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் இந்தப் பதிப்பை அச்சடித்தபோது, என்றாவது ஒரு நாள் முழு பைபிளும் சங்கத்தின் அச்சாலைகளில் அச்சடிக்கப்படுமென்ற நம்பிக்கை துளிர்விட்டது.

13தி கிங் ஜேம்ஸ் வர்ஷன். பைபிளை தனிப்பட்ட முறையில் பிரசுரிப்பதற்கான தேவையை இரண்டாவது உலகப் போர் ஏற்படுத்தியது. அந்தப் பூகோளப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிள் முழுவதற்குமுரிய அச்சுத் தகடுகளை வாங்குவதில் சங்கம் வெற்றி கண்டது. செப்டம்பர் 18, 1942-ல், யெகோவாவின் சாட்சிகளின் புதிய உலக தேவராஜ்ய அசெம்பிளியில், அதன் முக்கிய மாநாட்டு இடமாகிய க்ளீவ்லாண்ட், ஒஹாயோவில், “‘ஆவியின் பட்டயத்தை’ அளித்தல்” என்ற பொருளில் சங்கத்தின் பிரெஸிடென்ட் பேசினார். இந்தப் பேச்சுக்கு உச்சக்கட்டமாக அவர், உவாட்ச் டவர் சொஸைட்டியின் புரூக்ளின் அச்சாலையில் அச்சடிக்கப்பட்ட இந்த முதல் முழு பைபிளை வெளியிட்டார். அதன் பிற்சேர்க்கையில் ஆட்களின் மற்றும் இடங்களின் பெயர்களை அவற்றின் அர்த்தத்தோடு கொண்டுள்ள ஒரு பட்டியலும், விசேஷமாக “பைபிள் வார்த்தைகளின் மற்றும் சொற்றொடர்களின் சொல் பகுதி விளக்கப்பட்டிய”லும் மற்ற உதவிகளும் அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் மேல்விளிம்பிலும் பொருத்தமான தொடர்தலைப்பு கொடுக்கப்பட்டது. உதாரணமாக, நியாயாதிபதிகள் 11-ல் “யெப்தாவின் அவசர பொருத்தனை” என்ற பாரம்பரிய தலைப்பு “யெப்தாவின் ஊக்கமான பொருத்தனை” என்று மாற்றப்பட்டது. யோவான் 1-ம் அதிகாரத்தில், “கடவுளுடைய வார்த்தை, மனிதனாவதற்கு முன்பு இருந்த நிலையும் மனிதப் பிறப்பும்” என்று இருந்தது.

14தி அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வர்ஷன். மற்றொரு முக்கிய பைபிள் மொழிபெயர்ப்பு 1901-ன் அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வர்ஷன். இது கடவுளுடைய பெயராகிய “ஜெஹோவா” என்பதை எபிரெய வேதவாக்கியங்களில் ஏறக்குறைய 7,000 தடவை மொழிபெயர்த்திருக்கிறது, இது மிகவும் போற்றத்தக்க அம்சம். நீண்டகால பேச்சு வார்த்தைகளுக்குப் பின்பு, 1944-ல் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அச்சாலைகளில் அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் மொழிபெயர்ப்பின் அச்சுத்தகடுகள் முழுவதையும் பயன்படுத்துவதற்கு வாங்க முடிந்தது. ஆகஸ்ட் 10, 1944 அன்று, ஒரே சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய 17 மாநாடுகள் நடப்பதற்கு ஏதுவாக தனிப்பட்ட தொலைபேசி இணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டன. அவற்றின் மைய நகரமாகிய நியூ யார்க்கிலுள்ள பஃலோவில் சங்கத்தின் பிரெஸிடென்ட், உவாட்ச் டவர் பதிப்பின் அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வர்ஷன் பைபிளை வெளியிட்டு சபையோரை மகிழ்வித்தார். இதன் பிற்சேர்க்கையில் அதிக உதவியளிக்கும் விரிவாக்கப்பட்ட “பைபிள் சொற்களின், பெயர்களின், சொற்றொடர்களின் விளக்கப்பட்டியல்” சேர்க்கப்பட்டது. இதே பைபிளின் சிறிய பதிப்பு 1958-ல் பிரசுரிக்கப்பட்டது.

15தி பைபிள் இன் லிவ்விங் இங்லிஷ். 1972-ல் உவாட்ச் டவர் சொஸைட்டி, காலஞ்சென்ற ஸ்டீஃபன் டி. பையிங்டன் தயாரித்த, தி பைபிள் இன் லிவ்விங் இங்லிஷ்-ஐ பிரசுரித்தது. இது கடவுளுடைய பெயரை “ஜெஹோவா” என்று எல்லா இடங்களிலும் மொழிபெயர்த்திருக்கிறது.

16இவ்வாறு, யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பூமி முழுவதிலும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் பிரசங்கிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த ராஜ்ய செய்தி அடங்கிய விலைமதியா புத்தகமாகிய யெகோவா தேவனால் ஏவப்பட்ட பரிசுத்த வேதவாக்கியங்களை அதிகளவில் அச்சடித்து வெளியிட்டனர்.

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு

17கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை படிப்பதற்கு பயன்படுத்திய பலவித பைபிள் மொழிபெயர்ப்புகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் நன்றி செலுத்துகின்றனர். எனினும் எல்லா மொழிபெயர்ப்புகளிலும், மிகச் சமீபத்தில் வெளிவந்தவற்றிலும் குறைபாடுகள் உள்ளன. அவை மதப்பிரிவு பாரம்பரியங்களால் அல்லது உலகியல் தத்துவஞானங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, யெகோவா தம்முடைய வார்த்தையில் பதிவு செய்திருக்கிற பரிசுத்த சத்தியங்களுக்கு அவை முழுமையாக ஒத்திசைவதில்லை. அவற்றில் முரண்பாடை அல்லது சந்தேகத்திற்குரிய மொழிபெயர்ப்பை காணமுடிகிறது. முக்கியமாய் 1946 முதற்கொண்டு, தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரெஸிடென்ட், மூல மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வேதவாக்கியங்களின் உண்மையுள்ள ஒரு மொழிபெயர்ப்பை ஆவலுடன் தேடினார். பைபிள் எழுதப்பட்ட சகாப்தத்தில் வாழ்ந்த புத்தியுள்ள சாதாரண மக்கள் அந்த ஆரம்பகால எழுத்துக்களை புரிந்துகொண்டதைப்போல தற்கால வாசகர்களும் புரிந்துகொள்ளத்தக்க ஒரு மொழிபெயர்ப்புக்காக தேடிக்கொண்டிருந்தார்.

18செப்டம்பர் 3, 1949-ல், சங்கத்தின் புரூக்லினிலுள்ள தலைமை அலுவலகத்தில் புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு இருப்பதை பிரெஸிடென்ட் அறிவித்தார்; அந்தக் குழு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் நவீன மொழிபெயர்ப்பு ஒன்றை தயாரித்து முடித்திருப்பதையும் இயக்குநர் குழுவுக்கு அறிவித்தார். அந்தக் குழு எழுதிக்கொடுத்த ஆவணம் வாசிக்கப்பட்டது; அதில், மொழிபெயர்க்கப்பட்ட கையெழுத்துப் பிரதியை உடைமையாக வைத்திருப்பதற்கும், கையாளுவதற்கும், பிரசுரிப்பதற்குமுரிய உரிமையை சங்கத்துக்கு அந்தக் குழு அளித்தது. பூமி முழுவதிலும் பைபிள் பயிற்றுவிப்பை முன்னேற்றுவிக்கும் சங்கத்தின் பிரிவினையற்ற ஊழியத்தை அந்தக் குழு அங்கீகரித்ததால் அவ்வாறு செய்தது. அந்த மொழிபெயர்ப்பின் இயல்புக்கும் தனித்தன்மைக்கும் உதாரணங்களாக அந்தக் கையெழுத்துப் பிரதியின் சில பாகங்களும் வாசிக்கப்பட்டன. இந்த மொழிபெயர்ப்பை நன்கொடையாக ஏற்பதில் அந்த இயக்குநர்கள் ஒருமனதாயிருந்தனர், உடனடியாக அச்சடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செப்டம்பர் 29, 1949-ல் அச்சுக்கோப்பு தொடங்கப்பட்டது, 1950-ன் கோடைக்கால ஆரம்பத்திற்குள் பத்தாயிரக்கணக்கான பிரதிகள் தயார்செய்து முடிக்கப்பட்டன.

19புதிய உலக மொழிபெயர்ப்பை பாகம் பாகமாக வெளியிடுதல். நியூ யார்க், யாங்க்கி ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 2, 1950 புதன்கிழமையன்று, யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச மாநாடு நடந்துகொண்டிருந்தது; அது, அந்த மாநாட்டின் நான்காவது நாள். 82,075 யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டதைக் கேட்டு முற்றிலும் ஆச்சரியமடைந்தனர், அதை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் ஏற்றனர். இவ்வாறு மிக ஆர்வமாக இதை ஏற்றுக்கொண்டதாலும், அந்த மொழிபெயர்ப்பின் சிறப்புகளை மதித்துணர்ந்து போற்றுதலை தெரிவித்ததாலும் அந்தக் குழுவினர் ஊக்குவிக்கப்பட்டனர்; எனவே அவர்கள் அடுத்தபடியாக எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பெரிய வேலையை மேற்கொண்டனர். இது, 1953 முதல் 1960 வரை ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த ஆறு புத்தக தொகுதிகளும், தற்கால ஆங்கிலத்தில் முழு பைபிளையும் கொண்ட ஒரு நூலகத்தை உண்டாக்கின. ஒவ்வொரு தொகுதியிலும் பைபிள் படிப்புக்குப் பயனுள்ள உதவிகள் அடங்கியிருந்தன. இவ்வாறு, வேதப்பூர்வ தகவலின் மிகப் பெரும் களஞ்சியம் தற்கால பைபிள் மாணாக்கருக்கு கிடைத்தது. புதிய உலக மொழிபெயர்ப்பு தேவாவியால் ஏவப்பட்ட மூல வேதவாக்கியங்களில் உள்ள வலிமைமிக்க செய்தியை தெளிவாகவும் திருத்தமாகவும் அளிக்க வேண்டும் என்பதற்காக மூலவாக்கிய தகவலின் நம்பத்தக்க ஒவ்வொரு ஊற்றுமூலமும் ஊக்கமாக ஆராய்ச்சி செய்யப்பட்டது.

20 புதிய உலக மொழிபெயர்ப்பின் ஆறு பாக முதற்பதிப்பில் அநேக பைபிள் படிப்பு உதவிகள் இருந்தன; அவற்றில் மொழிபெயர்ப்புகளுக்குப் பின்னணியை அளிக்கும் மதிப்புவாய்ந்த அடிக்குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்தக் குறிப்புகளில் வேதவாக்கியங்களின் சார்பாக வலிமையான விவாதங்கள் கொடுக்கப்பட்டன. பயனுள்ள தொடர் வசனக்குறிப்பும் அதில் அடங்கும். முக்கியக் கோட்பாட்டுச் சொற்களின் இந்தத் தொடர்கள், குறிப்பிட்ட பொருட்களோடு தொடர்புடைய முக்கிய வசனங்களுக்கு மாணாக்கரை வழிநடத்தும்படி திட்டமிடப்பட்டது. பக்கங்களின் ஓரங்களில் பல குறுக்குக் குறிப்புகள் இருந்தன. இவை, வாசகரை (இணையான சொற்கள், (இணையான எண்ணங்கள், கருத்துக்கள், மற்றும் சம்பவங்கள், (வாழ்க்கை வரலாற்றுத் தகவல், (புவியியல் தகவல், (தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் மற்றும் (பைபிளின் மற்ற பாகங்களிலுள்ள அல்லது அவற்றிலிருந்து நேர்முகமான மேற்கோள்கள் ஆகியவற்றிற்கு வழிநடத்தின. மேலும், இந்தத் தொகுதிகளில் முக்கியமான முன்னுரைகளும், பூர்வ கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றின் படங்களும், உதவியாயிருக்கும் பிற்சேர்க்கைகளும், பொருளடக்க அகரவரிசை அட்டவணைகளும், பைபிள் நாடுகள் மற்றும் இடங்களின் நிலப்படங்களும் இருந்தன. புதிய உலக மொழிபெயர்ப்பின் இந்த முதல் பதிப்பு, தனிப்பட்ட பைபிள் படிப்புக்கும் நேர்மையான இருதயமுள்ள ஆட்களுக்கு கற்பிப்பதற்கும் சாட்சிகளுக்கு உதவியது; இது அவர்களுக்கு தங்கச்சுரங்கமாகவே இருந்தது. இது பின்னர், மாணாக்கரின் விசேஷ பதிப்பாக, ஒரே தொகுப்பாக பிரசுரிக்கப்பட்டது; ஜூன் 30, 1963-ல், அ.ஐ.மா., விஸ்கான்ஸின், மில்வாக்கீயில், யெகோவாவின் சாட்சிகளுடைய “நித்திய நற்செய்தி” மாநாட்டின் தொடக்கத்தில் ஒரே புத்தகமாக 1,50,000 பிரதிகள் வெளியிடப்பட்டன.

21ஒரே புத்தகத்தின் திருத்திய பதிப்பு. 1961-ன் கோடைக்காலத்தில், ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டன; அப்போது பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் முழுமையான திருத்திய பதிப்பு, ஒரே புத்தகமாக விநியோகிப்பதற்கு வெளியிடப்பட்டது. இந்த மாநாடுகளுக்கு வந்திருந்த லட்சக்கணக்கானோரால் அது மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்டது. அதில் 1,472 பக்கங்கள் இருந்தன, பச்சை துணியில் பவுண்டு செய்யப்பட்டிருந்தது. அதில் மிகச் சிறந்த சொல் தொகுதி விளக்கப்பட்டியலும், பைபிள் பொருள்களின்பேரில் ஒரு பிற்சேர்க்கையும், நிலப்படங்களும் இருந்தன.

22மேலுமான பதிப்புகள். 1969-ல் தி கிங்டம் இன்டர்லீனியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி கிரீக் ஸ்கிரிப்ச்சர்ஸ் வெளியிடப்பட்டது, 1985-ல் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம், வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் பதிப்பித்த கிரேக்க வாக்கியத்தின் சொல்லர்த்தமான ஆங்கில மொழிபெயர்ப்பையும் 1984-ம் ஆண்டு பதிப்பாகிய புதிய உலக மொழிபெயர்ப்பின் நவீன ஆங்கில மொழிபெயர்ப்பையும் தருகிறது. இவ்வாறு இது, மூல கிரேக்கு, அடிப்படையாக அல்லது சொல்லர்த்தமாக என்ன சொல்கிறது என்பதை கருத்தோடு ஆராயும் பைபிள் மாணாக்கருக்கு வெளிப்படுத்துகிறது.

23 புதிய உலக மொழிபெயர்ப்பின் இரண்டாவது திருத்திய பதிப்பு 1970-ல் வெளியிடப்பட்டது. மூன்றாவது திருத்திய பதிப்பு அடிக்குறிப்புகளுடன் 1971-ல் வெளியிடப்பட்டது. 1984-ல் நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் “ராஜ்ய அதிகரிப்பு” மாவட்ட மாநாடுகளில், துணைக்குறிப்புகளைக் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட ஒரு பதிப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அதில், 1950 முதல் 1960 வரை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட ஓரக் (குறுக்குக்) குறிப்புகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இது கூர்ந்து படிக்கும் பைபிள் மாணாக்கருக்காக திட்டமிடப்பட்டிருக்கிறது; இதில் 1,25,000-க்கும் மேற்பட்ட ஓர வசனக் குறிப்புகளும், 11,000-த்திற்கும் மேற்பட்ட அடிக்குறிப்புகளும், விரிவான சொல் தொகுதி விளக்கப்பட்டியலும், நிலப்படங்களும், 43 பிற்சேர்க்கைக் கட்டுரைகளும் அடங்கியிருக்கிறது. மேலும் 1984-ல் திருத்தியமைக்கப்பட்ட, வழக்கமாய் பயன்படுத்தும் பதிப்பு ஒன்று, ஓரக்குறிப்புகளுடன் ஆனால் அடிக்குறிப்புகள் இல்லாமல் வெளியிடப்பட்டது.

24சில அனுகூலங்கள். விரும்பும் எந்த விஷயத்தையும் விரைவாக கண்டுபிடிப்பதில் வாசகருக்கு உதவிசெய்வதற்காக, பொதுவானதும், வசனக் குறிப்புகளுள்ளதுமான இரண்டு பதிப்புகளிலும் ஒவ்வொரு பக்கத்தின் மேற்புறத்திலும் கவனமாய் திட்டமிடப்பட்ட தொடர் தலைப்புகள் இருக்கின்றன. இந்தத் தொடர் தலைப்புகள், கீழுள்ள விஷயத்தை விவரிக்கின்றன. ராஜ்ய பிரஸ்தாபியிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக வசனங்களை அவர் விரைவில் கண்டுபிடிப்பதற்கு உதவிசெய்வதற்காக இது திட்டமிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதன்பேரில் அறிவுரையைக் கண்டுபிடிக்க அவர் முயன்றுகொண்டிருக்கலாம். (ஆங்கிலத்தில் பொதுவான பதிப்பில்) நீதிமொழிகளில் 860-ம் பக்கத்தில் “ஒரு நல்ல பெயர்” என்ற கடைசி முக்கிய சொற்றொடரைக் காண்கிறார். இது, அந்தத் தலைப்பின் கடைசி சொற்றொடராக இருப்பதால், அந்த விஷயம் அந்தப் பக்கத்தில் கடைசியாக தோன்றும் என்று காட்டுகிறது; ஆகவே, நீதிமொழிகள் 22:​1-ல் அதைக் காண்கிறார். 861-ம் பக்கத்தில் தொடர் தலைப்பின் முதல் பாகம் அடையாளம் காட்டும் வேதவாக்கியமாகிய “பையனை பயிற்றுவி” என்பதை அந்தப் பக்கத்தின் தொடக்கத்திலேயே அதாவது 6-ம் வசனத்தில் காண்கிறார். அந்தத் தலைப்பின் அடுத்த பகுதி “பிரம்பைக் கையாடுவதைத் தவிர்க்காதே” என்று வாசிக்கிறது. இந்த விஷயம் முதல் பத்தியின் அடியில், 15-ம் வசனத்தில் உள்ளது. பக்கங்களின் மேற்புறத்திலுள்ள இந்தத் தொடர் தலைப்புகள், தான் தேடும் வசனங்களின் இடங்களை ஓரளவு அறிந்திருக்கிற ராஜ்ய பிரஸ்தாபிக்கு மிகுந்த உதவியாயிருக்கும். பைபிள் வசனங்களை விரைவாய் கண்டுபிடித்து பயன்படுத்துவதற்கு அவை உதவிசெய்யும்.

25பொதுவான மற்றும் வசனக் குறிப்புகள் உள்ள இந்த பைபிளின் பதிப்புகள் இரண்டிலும் பின்பாகத்தில் “பைபிள் சொற்கள் அகரவரிசை அட்டவணை” என்றழைக்கப்படும் ஒரு முக்கிய பகுதி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான முக்கிய பைபிள் சொற்களை அவை தோன்றும் சூழமைவு வரிகளோடு காணலாம். இதனால் சொல் தொகுதி விளக்கப்பட்டியலின் உதவி கிடைக்கிறது; இதில் பயன்படுத்தப்பட்ட புதிய விளக்கமான சொற்களும் அடங்கும். கிங் ஜேம்ஸ் வர்ஷன் மொழிபெயர்ப்பை பயன்படுத்தி பழகியிருப்பவர்களுக்கு பழைய ஆங்கில பைபிள் சொற்களிலிருந்து நவீன பைபிள் பதங்களுக்கு மாற்றம் செய்வதற்கு உதவியளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கிங் ஜேம்ஸ் வர்ஷனிலுள்ள “கிருபை” (grace) என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம். இதைப் பொருளடக்க அகரவரிசையில் குறிப்பிட்டு, நவீனகால சொற்றொடரான “தகுதியற்ற தயவு” (undeserved kindness) என்று புதிய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பதை மாணாக்கருக்கு காட்டுகிறது. இந்தச் சொல் அகர வரிசை, “ஆத்துமா” (soul) அல்லது “மீட்பின் கிரயம்” (ransom) போன்ற முக்கிய கோட்பாட்டு பொருள்களின்பேரில் வேதவசனங்களை கண்டுபிடிக்க உதவுகிறது, பைபிள் வசனங்களிலிருந்தே நேரடியாக நுட்பமாய் படிப்பதை ஆதரிக்கிறது. இந்த முக்கிய விஷயங்களில் ஒன்றை விளக்கும்படி ஒரு ராஜ்ய பிரஸ்தாபியிடம் கேட்கப்பட்டால் அவர் இந்தச் சொல் தொகுதி விளக்கப்பட்டியலில் அளிக்கப்பட்டிருக்கிற சுருக்கமான பாகங்களை உடனடியாக பயன்படுத்தலாம். மேலும் நிலவியல் சம்பந்தப்பட்ட இடங்களும் முக்கியமான பைபிள் கதாபாத்திரங்களும் உட்பட, முதன்மையான பெயர்களுக்கான முக்கிய வசனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தும் பைபிள் மாணாக்கர் எல்லாருக்கும் மதிப்புள்ள உதவி அளிக்கப்பட்டுள்ளது.

26கற்பிப்பதற்கு பயனுள்ள திருத்தமான தகவலை புலமைமிக்க ஒரு பிற்சேர்க்கை அளிக்கிறது. இந்தப் பிற்சேர்க்கை கட்டுரைகள், அடிப்படையான பைபிள் கோட்பாடுகளையும் அவற்றோடு சம்பந்தப்பட்ட காரியங்களையும் விளக்கிக் கூறுவதற்கு உதவியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, “ஆத்துமா” என்ற பொருளில் இந்தப் பிற்சேர்க்கை எட்டு வெவ்வேறு தலைப்புகளின்கீழ் அமைக்கப்பட்டிருக்கிறது; இவற்றில் “ஆத்துமா” (எபிரெயுவில், நெஃபெஷ் [neʹphesh]) என்ற சொல் பயன்படுத்தப்படுகிற பல்வேறு வகைகளைக் காட்டும் வேதவசனங்களைக் குறிப்பிடுகிறது. இந்தப் பிற்சேர்க்கை கட்டுரைகளில் விளக்க வரைப்படங்களும், தேசப்படங்களும் இடம் பெறுகின்றன. துணைக்குறிப்புகளுள்ள பைபிளில் (ஆங்கிலம்) இன்னும் விரிவான ஒரு பிற்சேர்க்கையும் அதோடு முக்கிய மூலவாக்கிய தகவலை எளிய முறையில் அளிக்கும் அடிக்குறிப்புகளும் அடங்கியுள்ளன. இவ்வாறு, புதிய உலக மொழிபெயர்ப்பு திருத்தமான அறிவை அதன் வாசகர்கள் விரைவில் பெறுவதற்கு தலைசிறந்த உதவியளிக்கிறது.

27பைபிள் பெயர்களை உச்சரிப்பதில் உதவி. ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பின் எல்லா பதிப்புகளும் தனிப்பட்ட பெயர்களை உச்சரிப்பதற்கு உதவி அளிக்கின்றன. 1952-ன் ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன் பைபிளுக்காக ஒரு நிபுணர் திட்டமிட்ட அதே முறைதான் இதிலும் பின்பற்றப்படுகிறது. அந்தப் பெயர் அசைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு புள்ளியால் அல்லது அழுத்தக்குறியால் (ʹ) ஒன்றுக்கொன்று விலகியிருக்கும்படி அமைக்கப்படுகிறது. இந்த அழுத்தக்குறி, அந்தச் சொல்லை உச்சரிப்பதில் அதிக அழுத்தம் வைக்கவேண்டிய அசையைப் பின்தொடருகிறது. அந்த அழுத்தம் குறிக்கப்பட்ட அசை உயிரெழுத்தில் முடிந்தால், அப்போது அந்த உயிரெழுத்து அதன் உச்சரிப்பில் நீண்டதாயிருக்கும். ஒரு அசை மெய்யெழுத்தில் முடிந்தால், அப்போது அந்த அசையிலுள்ள உயிரெழுத்து அதன் உச்சரிப்பில் குறுகியதாயிருக்கும்.

28உதாரணமாக, யோபு 4:​1-ஐக் கவனியுங்கள். இங்கே பைபிளில் “Elʹi·phaz the Teʹman·ite,” (தேமானியனாகிய எலீப்பாஸ்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இரு சொற்களிலும் அழுத்தம் முதல் அசையில் வருகிறபோதிலும், அதில் வரும் எழுத்தாகிய “e” இந்த இரண்டிலும் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட வேண்டும். “Elʹi·phaz” என்பதில் மெய்யெழுத்து “l” என்பதற்குப் பின்னால் அழுத்தக்குறி வருவதால், அந்த உயிரெழுத்தாகிய “e” என்பதை “end” என்பதில் இருப்பதைப்போல் குறுகிய ஓசையுடையதாக்குகிறது. ஆனால் “Teʹman·ite” என்பதில் அழுத்தக்குறியானது, உயிரெழுத்தான “e” என்பதற்கு அடுத்தபடியாக இருப்பதால் “Eden” என்பதில் இருப்பதுபோல் அந்த முதல் “e”-ஐ நீண்ட ஓசையுடன் வாசிக்க வேண்டும். எஸ்தர் 2:​5-லுள்ள “Morʹde·cai” என்பதிலும், யாத்திராகமம் 19:​1-லுள்ள “Siʹnai” என்பதிலும் இருப்பதுபோல், “a” மற்றும் “i” என்ற இரண்டு உயிரெழுத்துக்களும் ஒன்றுசேருகையில், “ai” என்பது நீண்ட “i” என்பதாகவே உச்சரிக்கப்படுகிறது.

29புத்தம் புதிய மொழிபெயர்ப்பு. புதிய உலக மொழிபெயர்ப்பு மூலமுதல் பைபிள் மொழிகளாகிய எபிரெயு, அரமிக், கிரேக்கிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தம் புதிய மொழிபெயர்ப்பாகும். வேறெந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தும் திருத்தியமைக்கப்பட்டதல்ல; எழுத்துநடை, சொல் தொகுதி அல்லது ஒத்திசைவுநயத்திலும் வேறு எந்த மொழிபெயர்ப்பையும் பின்பற்றவுமில்லை. எபிரெயு-அரமிக் பகுதிக்கு, நன்றாகச் செம்மையாக்கப்பட்டதும் உலகமுழுவதும் ஏற்கப்பட்டதுமான ருடால்ஃப் கிட்டலின் பிப்ளியா ஹெப்ரேய்க்கா 7-வது, 8-வது, 9-வது பதிப்புகள் (1951-55) பயன்படுத்தப்பட்டன. புதிய உலக மொழிபெயர்ப்பு​—துணைக்குறிப்புகளுடன் என்ற பைபிளின் அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்ட தகவலை காலத்துக்கு ஏற்ற புத்தம்புதிய நிலைக்குக் கொண்டுவருவதற்கு, 1977-ன் பிப்ளியா ஹெப்ரேய்க்கா ஸ்டட்கார்ட்டென்ஸியா என்ற எபிரெய வாக்கியத்தின் ஒரு புதிய பதிப்பு பயன்படுத்தப்பட்டது. கிரேக்கப் பகுதியானது, வெஸ்ட்காட்டும் ஹார்ட்டும் தயாரித்து, 1881-ல் பிரசுரித்த தனிச்சிறப்பு வாய்ந்த கிரேக்க மூலவாக்கியத்திலிருந்தே (master text) முக்கியமாய் மொழிபெயர்க்கப்பட்டது. இருந்தாலும், புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு, நெஸ்லெயின் கிரேக்க வாக்கியம் (1948) உட்பட, மற்ற கிரேக்க வாக்கியங்களையும் அலசிப் பார்த்தது. இந்த மிகச் சிறந்த முதல்தரமான மூலவாக்கியங்களைப் பற்றிய விவரிப்புகள் இந்தப் புத்தகத்தின் 5-வது, 6-வது ஆராய்ச்சிகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மொழிபெயர்ப்பு குழு உயிரோட்டமுடைய திருத்தமான பைபிள் மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறது. தெளிவான, உயிருள்ள இந்த மொழிபெயர்ப்பு கடவுளுடைய வார்த்தையை ஆழமாகவும், அதிக திருப்தி தரும் முறையிலும் புரிந்துகொள்வதற்கு வழியை திறந்து வைத்தது.

30இந்த மொழிபெயர்ப்பை நுண்ணாய்வாளர் ஒருவர் எவ்வாறு மதிப்பிட்டார் என்பதை கவனியுங்கள்: “எபிரெய வேதாகமத்தை மூல மொழிகளிலிருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்த்திருக்கும் மொழிபெயர்ப்புகள் வெகு குறைவே. ஆகவே, [எபிரெய மூலவாக்கியங்களின்] ஆதியாகமத்திலிருந்து ரூத் வரையான, புதிய உலக மொழிபெயர்ப்பின் இந்த முதல் பாக வெளியீட்டை வரவேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. . . . இந்த மொழிபெயர்ப்பு நன்றாக வாசிக்கத்தக்க முறையில் இருப்பதற்காக தனிப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. புத்தம்புதியது என்பதிலும் தனிபண்பிலும் அதை யாரும் குறைசொல்ல முடியாது. எள்ளளவும் முந்திய மொழிபெயர்ப்புகளை ஆதாரமாக கொண்டு அதன் சொல்தொகுதி அமைக்கப்படவில்லை.” b

31இஸ்ரேலின் எபிரெய அறிஞரான பேராசிரியர் டாக்டர் பெஞ்சமின் கேதாரை உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரதிநிதி ஒருவர் சந்தித்துப் பேசியபோது, புதிய உலக மொழிபெயர்ப்பைப் பின்வருமாறு மதிப்பிட்டார்: “எபிரெய பைபிளும் மொழிபெயர்ப்பும் சம்பந்தமான என்னுடைய மொழிசார்ந்த ஆராய்ச்சியில் புதிய உலக மொழிபெயர்ப்பு என்றறியப்படுகிற ஆங்கில பதிப்பை நான் அடிக்கடி குறிப்பிடுகிறேன். இதை மொழிபெயர்த்தவர்கள், கூடிய வரையில், திருத்தமாக மூலவாக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு நேர்மையான முயற்சி செய்திருக்கின்றனர் என்பதை என் உள்ளம் திரும்பத்திரும்ப சொல்கிறது. இந்த மொழிபெயர்ப்பு, மூல மொழியின் தேர்ச்சித்திறமிக்க அத்தாட்சியை அளிப்பதாய், எபிரெயுவின் தனிப்பட்ட அமைப்பிலிருந்து அவசியமின்றி விலகாமல் மூலச் சொற்களை இரண்டாவது மொழியில் புரிந்துகொள்ளத் தக்கவாறு மொழிபெயர்க்கிறது. . . . எந்த மொழியும் ஒரு கூற்றை விளக்கும்போது அல்லது மொழிபெயர்க்கும்போது ஓரளவு உரிமையை அனுமதிக்கிறது. ஆகவே கொடுக்கப்படும் மொழிசார்ந்த விளக்கம் விவாதத்திற்கு வழிநடத்துகிறது. ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பில், மூலவாக்கியத்தில் அடங்கியிராத ஒன்றை அதற்குள் திணிக்கும் எந்த ஒரு மறைவான நோக்கத்தையும் நான் ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை.” c

32சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு. சொல்லர்த்தமாக இருப்பதாலும் மொழிபெயர்ப்பின் நேர்மை வெளிப்படுகிறது. எனவே, எபிரெய மற்றும் கிரேக்க வாக்கியங்களும் ஆங்கில மொழிபெயர்ப்பும் ஏறக்குறைய சொல்லுக்குச்சொல் ஒத்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அந்த வாக்கியத்தை அது மொழிபெயர்க்கப்படும் மொழியில் அளிக்கும்போது, சொல்லர்த்தமான தன்மை, அந்த மூலமொழி மரபு வழக்கு அனுமதிக்குமளவுக்கு உயர்வாக இருக்க வேண்டும். மேலும், சொல்லர்த்தமான தன்மை, எபிரெயுவில் அல்லது கிரேக்கில் இருப்பது போலவே மொழிபெயர்ப்பின் பெரும்பான்மையானவற்றின் சொல் ஒழுங்கு இருக்க வேண்டும்; இவ்வாறு மூல எழுத்துக்களின் அசை அழுத்தத்தைப் பாதுகாக்க வேண்டும். சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பின் மூலமாக மூல எழுத்துக்களின் சுவை, பொலிவு, சந்தம் ஆகியவற்றை திருத்தமாய் தெரிவிக்க முடியும்.

33கடினமான எபிரெய அல்லது கிரேக்க மரபு வழக்குகளை புரிந்துகொள்ளுவதற்காக சிலசமயம் சொல்லர்த்தமாக மொழிபெயர்க்க இயலாமல் போகிறது. எனினும், புதிய உலக மொழிபெயர்ப்பின் துணைக்குறிப்புகளுள்ள பதிப்பில், சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பை அளிக்கும் அடிக்குறிப்புகளின் மூலமாக இவை வாசகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

34பைபிள் மொழிபெயர்ப்பாளர் பலர், மொழிநடையின் மற்றும் அமைப்பின் நேர்த்தியென தாங்கள் கருதுபவற்றிற்காக சொல்லர்த்தமான தன்மையை கைவிட்டிருக்கின்றனர். சொல்லர்த்தமான மொழிபெயர்ப்புகள் நயமற்று, விறைப்பாய், கட்டுப்படுத்துவதாய் உள்ளதென்று அவர்கள் விவாதிக்கின்றனர். எனினும், சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பை அவர்கள் கைவிட்டு அதற்கு பதில் பொழிப்புரை செய்வதையும் பொருள்விளக்கம் செய்வதையும் அறிமுகப்படுத்தினர்; இதன் காரணமாக சத்தியத்தின் திருத்தமான மூலக் கூற்றுகளிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் கடவுளின் எண்ணங்களையே கலப்படம் செய்திருக்கின்றனர். உதாரணமாக, பைபிளின் அழகையும் நேர்த்தியையும் அழித்ததாக யெகோவாவின் சாட்சிகளை ஒரு பெரிய அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற முதல்வர் ஒரு சமயம் குற்றம் சாட்டினார். பைபிள் என்று அவர் அழைத்தது கிங் ஜேம்ஸ் வர்ஷனைத்தான், இது நெடுங்காலமாக ஆங்கிலத்தில் மிக அழகாகவும் தரமாகவும் இருப்பதாக போற்றப்பட்டு வந்தது. அவர் சொன்னதாவது: “சங்கீதம் 23-ஐ (NW) நீங்கள் எப்படி கெடுத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். ‘யெகோவா என் மேய்ப்பர்’ (“Je/ho/vah is/ my/ shep/herd”) என்று சொன்னதன் மூலம் அதன் இசை நயத்தையும் அழகையும் கெடுத்துவிட்டீர்கள். ஆறுக்குப் பதிலாக ஏழு அசைகள். இது அதிர்ச்சியளிக்கிறது. இது சமநிலையை இழந்துவிட்டது. இதில் தாளமே இல்லை. கிங் ஜேம்ஸில் அது சரியாக ஆறு சமநிலைப்பட்ட அசைகளுடன் காணப்படுகிறது​—‘கர்த்தர் என் மேய்ப்பர்.’ (The/ Lord/ is/ my/ shep/herd”)” பைபிள் எழுத்தாளனாகிய தாவீது எழுதியபடியே அதை எழுதுவது அதைப் பார்க்கிலும் அதிக முக்கியமானது என்று அந்தப் பேராசிரியரிடம் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தாவீது பொதுவான பதமாகிய “கர்த்தர்” என்பதைப் பயன்படுத்தினாரா அல்லது அவர் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினாரா? தாவீது கடவுளுடைய பெயரையே பயன்படுத்தினாரென்று பேராசிரியர் ஒப்புக்கொண்டார்; ஆனாலும் அழகு மற்றும் நேர்த்தியின் காரணமாக, “கர்த்தர்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அவர் விவாதித்தார். யெகோவாவின் துதிக்குரிய இந்தச் சங்கீதத்திலிருந்து அவருடைய பெயரையே நீக்குவதற்கு எத்தகைய நொண்டிச்சாக்கு!

35மொழியின் அழகைப் பற்றிய மனிதனுடைய கருத்து என்ற பலிபீடத்தின்மீது ஆயிரக்கணக்கான வார்த்தைகள் இம்முறையில் பலியாகி இருக்கின்றன; இதனால் பைபிள் மொழிபெயர்ப்புகள் பலவற்றில் பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய உலக மொழிபெயர்ப்பை அதன் தெளிவும் திருத்தமுமான பைபிள் மூலவாக்கியத்துடன் அருளியதற்காக கடவுளுக்கு நன்றி! அதை வாசிப்போர் யாவருடைய இருதயங்களிலும், அவருடைய மேன்மையான பெயராகிய யெகோவா பரிசுத்தப்படுவதாக!

[அடிக்குறிப்புகள்]

a 1804 முதற்கொண்டு அமைக்கப்பட்ட பைபிள் சங்கங்களில் சில பின்வருமாறு: அமெரிக்கன் பைபிள் சொஸைட்டி (1816), இது ஏற்கெனவே அந்த வட்டாரத்தில் இருந்துவந்த சங்கங்களால் அமைக்கப்பட்டது. எடின்பர்க் பைபிள் சொஸைட்டி (1809), கிளாஸ்கோ பைபிள் சொஸைட்டி (1812); பிற்பாடு இவ்விரண்டும் நேஷனல் பைபிள் சொஸைட்டி ஆஃப் ஸ்காட்லண்ட் என்ற சங்கமாக ஒன்றிணைந்தன (1861). 1820-க்குள் ஸ்விட்ஸர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய இடங்களிலும் பைபிள் சங்கங்கள் அமைக்கப்பட்டன.

b அலெக்ஸாண்டர் தாம்ஸன், வேறுபாடுகாண்பவர், (ஆங்கிலம்) ஜூன் 1954, பக்கம் 131.

c ஜூன் 12, 1989, ஜெர்மானிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

[கேள்விகள்]

1. (அ) கடவுள் என்ன நோக்கங்களுக்காக தகவல்களை அளித்தார், சில தகவல்கள் ஏன் எழுதி பதிவுசெய்யப்படவில்லை? (ஆ) தீர்க்கதரிசிகள் பலருக்கு என்ன திட்டவட்டமான கட்டளைகளை யெகோவா கொடுத்தார், இதனால் “கடைசிநாட்களில்” வாழும் நமக்கு என்ன நன்மை?

2. சரித்திரத்தில் எந்தக் காலப்பகுதியில் பைபிளை நகல் எடுப்பது, மொழிபெயர்ப்பது போன்ற செயல்கள் பெருகின?

3. பைபிள் விநியோகிப்பு, 19-வது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பெருகியதற்கு காரணம் என்ன?

4. (அ) ஜீவ வார்த்தை பூமி முழுவதிலும் பரவிவிட்டது என்பதை எந்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன? (ஆ) வெவ்வேறு மொழிபெயர்ப்புகளைப் பற்றி, 322-வது பக்கத்திலுள்ள அட்டவணையில் என்ன உதவியளிக்கும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது? ஏதாவதொரு தனி பைபிள் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டு இதை விளக்கிக் காட்டுங்கள்.

5. பைபிளை விநியோகிப்பதை பார்க்கிலும் முக்கியமானது எது, எனினும் எதற்காக யெகோவாவின் சாட்சிகள் நன்றியோடு இருக்கின்றனர்?

6. பூர்வ காலங்களில் மட்டுமல்லாமல் இன்றும் என்ன நடவடிக்கையில் யெகோவாவின் சாட்சிகள் தனித்தன்மையோடு இருக்கின்றனர்?

7. யெகோவாவின் சாட்சிகள் என்ன சங்கத்தை அமைத்தனர், எப்போது, அந்தச் சமயத்தில் ஊழியத்தில் எவ்வாறு முன்னேற ஆரம்பித்தனர்?

8. (அ) உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி எவ்வாறு அதன் பெயருக்கேற்ப இருந்திருக்கிறது? (ஆ) பல பைபிள் மொழிபெயர்ப்புகளை சங்கம் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறது, என்ன நோக்கத்துடன்?

9. பைபிள் பிரசுரிக்கும் துறைக்குள் சங்கம் எவ்வாறு பிரவேசித்தது?

10. 1902-ல் சொஸைட்டி கிரேக்க வேதாகமத்தின் எந்த மொழிபெயர்ப்பை பிரசுரித்தது?

11. ‘பைபிள் மாணாக்கர் பதிப்பை’ சங்கம் எப்போது பிரசுரித்தது, இதில் என்ன அடங்கியிருந்தது?

12. பைபிள் அச்சடிக்கும் துறைக்குள் சங்கம் எப்போது பிரவேசித்தது?

13. (அ) சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட முதல் முழு பைபிள் எது, அது எப்போது வெளியிடப்பட்டது? (ஆ) அதில் என்ன உதவிகள் அடங்கியிருந்தன?

14. தரமான என்ன பைபிள் மொழிபெயர்ப்பை சங்கம் 1944-ல் அச்சடித்தது, இந்த பைபிள் என்ன முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது?

15. 1972-ல் என்ன மொழிபெயர்ப்பைச் சங்கம் பிரசுரித்தது?

16. இதனால் எந்த இரண்டு விதமான ஊழியத்தில் யெகோவாவின் சாட்சிகள் ஈடுபட்டிருக்கின்றனர்?

17. (அ) பல பைபிள் மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயனளித்திருக்கின்றன, எனினும் என்ன குறைபாடுகளும் அவற்றில் இருக்கின்றன? (ஆ) 1946 முதற்கொண்டு, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரெஸிடென்ட் எதை நாடித்தேடிக்கொண்டிருந்தார்?

18. சொஸைட்டி எவ்வாறு புதிய உலக மொழிபெயர்ப்பின் பிரசுரிப்போரும் அச்சடிப்போருமானது?

19. (அ) புதிய உலக மொழிபெயர்ப்பு எவ்வாறு பாகம் பாகமாக தோன்றியது? (ஆ) இந்தப் புத்தகத் தொகுதிகளை தயாரிப்பதில் என்ன முயற்சி செய்யப்பட்டது?

20. பயனுள்ள என்ன உதவிகளை புதிய உலக மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பு அதன் (அ) அடிக்குறிப்புகளில், (ஆ) ஓரக் குறிப்புகளில், (இ) முன்னுரைகளிலும் பிற்சேர்க்கைகளிலும் கொண்டிருந்தது?

21. (அ) திருத்திய புதிய உலக மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டதன் சூழ்நிலைமைகள் யாவை? (ஆ) அதன் சிறப்பான அம்சங்களில் சில யாவை?

22, 23. மேலும் என்ன பதிப்புகள் வெளியிடப்பட்டன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் யாவை?

24. (அ) பொதுவானதும், வசனக் குறிப்புகளுள்ளதுமான இந்த இரண்டு பதிப்புகளின் அனுகூலங்களில் சில யாவை? (ஆ) தொடர் தலைப்புகளின் உபயோகத்தை விளக்கிக் காட்டுங்கள்.

25. என்ன சொல் தொகுதி விளக்கப்பட்டியல் சேவை அளிக்கப்பட்டுள்ளது, இதை நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

26. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள பிற்சேர்க்கை உதவியாயிருக்கும் வழிகளில் ஒன்றை விளக்கிக் காட்டுங்கள்.

27, 28. தனிப்பட்ட பெயர்களின் உச்சரிப்பை புதிய உலக மொழிபெயர்ப்பு எவ்வாறு காட்டுகிறது என்பதை விவரித்து உதாரணம் கொடுங்கள்.

29. புதிய உலக மொழிபெயர்ப்பு முந்திய மொழிபெயர்ப்புகளின் திருத்திய அமைப்பா, என்ன அம்சங்கள் உங்கள் பதிலை ஆதரிக்கின்றன?

30. நுண்ணாய்வாளர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்பை எவ்வாறு மதிப்பிடுகிறார்?

31. எபிரெய அறிஞர் ஒருவர் புதிய உலக மொழிபெயர்ப்பை எவ்வாறு மதிப்பிட்டார்?

32. எந்த அளவுக்குப் புதிய உலக மொழிபெயர்ப்பு சொல்லர்த்தமானது, அதன் பயன் என்ன?

33. சொல்லர்த்தமாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத இடங்களில் அவை எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றன?

34. (அ) சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பை விட்டு விலகுவதன் விளைவு என்ன? (ஆ) உதாரணத்துடன் விளக்குங்கள்.

35. எதற்காக நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம், நம்முடைய நம்பிக்கையும் ஜெபமும் என்ன?

[பக்கம் 322-ன் அட்டவணை]

முக்கிய ஏழு மொழிகளில் பிரபல பைபிள் மொழிபெயர்ப்புகள் சில

மொழிபெயர்ப்பின் முதலாவது எபிரெய கடவுளுடைய பெயர் கிரேக்க

பெயர் பிரசுரிக்கப்பட்டது வேதாகமத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது வேதாகமத்துக்கு

அடிப்படையான அடிப்படையான

வாக்கியம் வாக்கியம்

ஆங்கிலம்

ரீம்ஸ்-டூவே* 1582-1610 வல்கேட் கர்த்தர் (அதோனாய், வல்கேட்

இருமுறை)

கிங் ஜேம்ஸ்

வர்ஷன்* 1611 M கர்த்தர் ரிசீவ்ட்

(யெகோவா, சில) டெக்ஸ்ட்

யங் 1862-98 M ஜெஹோவா ரிசீவ்ட்

டெக்ஸ்ட்

இங்லிஷ் 1881-95 M கர்த்தர் வெஸ்ட்காட்டும்

ரிவைஸ்ட்* (ஜெஹோவா, சில) ஹார்ட்டும்

எம்ஃபஸைஸ்ட் 1878-1902 M யாவே வெஸ்ட்காட்டும்

பைபிள் (கின்ஸ்பர்க்) ஹார்ட்டும்,

ட்ரெகில்லஸ்

அமெரிக்கன் 1901 M ஜெஹோவா வெஸ்ட்காட்டும்

ஸ்டாண்டர்ட் ஹார்ட்டும்

அன் அமெரிக்கன் 1923-39 M கர்த்தர் வெஸ்ட்காட்டும்

டிரான்ஸ்லேஷன் (யாவே, சில) ஹார்ட்டும்

(ஸ்மித்-குட்ஸ்பீட்)*

ரிவைஸ்ட் 1946-52 M கர்த்தர் வெஸ்ட்காட்டும்

ஸ்டாண்டர்ட்* ஹார்ட்டும்,

நெஸ்லெ

நியூ இங்லிஷ் 1961-70 M (BHK) கர்த்தர் புதிய பல்திரட்டு

பைபிள்* (ஜெஹோவா, சில) வாக்கியம்

டுடேஸ் இங்லிஷ் 1966-76 M (BHK) கர்த்தர் UBS

வர்ஷன்

நியூ கிங் ஜேம்ஸ் 1979-82 M (BHS) கர்த்தர் மெஜாரிட்டி

பைபிள்/ ரிவைஸ்ட் (யா, சில) டெக்ஸ்ட்

ஆதரைஸ்ட் வர்ஷன்

நியூ ஜெருசலம் 1985 M யாவே கிரேக்கு

பைபிள்*

ஸ்பானிஷ்

வலேரா 1602 M ஜெஹோவே ரிசீவ்ட் டெக்ஸ்ட்

மாடர்னா 1893 M ஜஹோவே ஸ்கிரிவ்னர்

நேக்கர்-கொலுங்கா* 1944 M யாவே கிரேக்கு

எவரிஸ்ட்டோ 1964 M யாவே கிரேக்கு

மார்ட்டீன் நீட்டோ*

செராஃபீன் 1965 M (BHK) யாஹ்வே, நெஸ்லெ-ஆலந்த்

டி ஆசீஜொ* செனோர்

பிப்ளியா டி 1967 M யாவே கிரேக்கு

ஜெருசலம்*

கன்ட்டேரா-இக்லீசியாஸ்* 1975 M (BHK) யாஹ்வே கிரேக்கு

நுவா பிப்ளியா 1975 M செனோர் கிரேக்கு

எஸ்பனோலா*

போர்த்துகீஸ்

அல்மேடா 1681, 1750 M ஜெஹோவா ரிசீவ்ட் டெக்ஸ்ட்

ஃபிகூய்ரெடோ* 1778-90 வல்கேட் சென்ஹார் வல்கேட்

மட்டோஸ் சோர்ஸ்* 1927-30 வல்கேட் சென்ஹார் வல்கேட்

பான்டிஃபீசியோ 1967 M ஜாவே மெர்க்

இன்ஸ்டிட்யூட்டோ

பிப்ளிக்கோ*

ஜெருசலம்* 1976, 1981 M ய்யாவே கிரேக்கு

ஜெர்மன்

லூத்தர்* 1522, 1534 M ஹெர் இராஸ்மஸ்

ஸூர்ச்சர் 1531 M ஹெர், ஜாவே கிரேக்கு

எல்பெர்ஃபெல்டர் 1855, 1871 M ஜெஹோவா ரிசீவ்ட் டெக்ஸ்ட்

மென்ஞ் 1926 M ஹெர் கிரேக்கு

லூத்தர் (திருத்தியது)* 1964, 1984 M ஹெர் கிரேக்கு

பைபெல் இன் 1967 M (BHS) ஹெர் நெஸ்லெ-

ஹியூட்டிஜெம் ஆலந்த்,

டயூட்ஸ்ச் UBS

(க்யூட் நக்ரிச்ட்)*

ஈன்ஹீட்ஸூபர்ஸெட்ஸங்க்*

  1972, 1974 M ஹெர், ஜாவே கிரேக்கு

ரெவீடியர்ட்டி 1975, 1985 M ஹெர், ஜாவே கிரேக்கு

எல்பெர்ஃபெல்டர்

பிரெஞ்சு

டார்பி 1859, 1885 M நித்தியர் கிரேக்கு

க்ராம்ப்பன்* 1894-1904 M ஜேஹோவா மெர்க்

ஜெருசலம்* 1948-54 வல்கேட், யாவே வல்கேட்,

எபிரெயு கிரேக்கு

டோப் எக்கூமெனிக்கல் 1971-75 M (BHS) சீக்னெயர் நெஸ்லெ,

பைபிள்* UBS

ஓஸ்ட்டி* 1973 M யாஹ்வே கிரேக்கு

செகான்ட் திருத்தியது 1978 M (BHS) நித்தியர் நெஸ்லெ-

ஆலந்த்,

பிளாக்,

மெட்ஸ்ஜெர்,

விக்ரென்

ஃபிரான்கேயஸ் 1982 M (BHS) சீக்னியுர் நெஸ்லெ,

கோரன்ட் UBS

டச் (நெதர்லாந்து)

ஸ்டேட்டென்வெர்ட்டலிங்

1637 M ஹீரே ரிசீவ்ட் டெக்ஸ்ட்

லீட்ஸ் வெர்ட்டலிங் 1899-1912 M ஜாவே நெஸ்லெ

பெட்ரஸ்-கனிஸியஸ்வெர்ட்டலிங்*

1929-39 M ஜாவே நெஸ்லெ

NBG-வெர்ட்டலிங் 1939-51 M ஹெர் நெஸ்லெ

வில்லிப்ரோர்ட்வெர்ட்டலிங்*

1961-75 M ஜாவே நெஸ்லெ

க்ரூட் நியூஸ் 1972-83 M ஹெர் நெஸ்லெ

பிஜ்பெல்*

இத்தாலியன்

டயோடேட்டி 1607, 1641 M சிக்னோர் கிரேக்கு

ரிவெடுட்டா (லுஸ்ஸை) 1921-30 M நித்தியர் கிரேக்கு

நர்டோனி* 1960 M சிக்னோர், ஜாவே கிரேக்கு

போன்டிஃபிசியோ 1923-58 M சிக்னோர், ஜாவே மெர்க்

இஸ்டிட்யூட்டோ

பிப்ளிக்கோ*

கரோஃபலோ* 1960 M ஜாவே, சிக்னோர் கிரேக்கு

கன்கோர்டெட்டா* 1968 M (BHK) சிக்னோர், இயாவே நெஸ்லெ,

மெர்க்

CEI* 1971 M சிக்னோர் கிரேக்கு

பரோலா டெல் 1976-85 M (BHS) சிக்னோர் UBS

சிக்னோர்*

* நட்சத்திரக் குறியானது, தள்ளுபடியாகமம் அடங்கியிருந்தது ஆனால் எல்லா பதிப்புகளிலும் ஒருவேளை தோன்றாது எனக் குறித்துக் காட்டுகிறது.

“M” மசோரெட்டிக் வாக்கியத்தைக் குறிப்பிடுகிறது. அது தனிமையாக நிற்கையில், மசோரெட்டிக் வாக்கியத்தின் விசேஷித்த பதிப்பு எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.

“BHK” கிட்டலின் பிப்ளியா ஹெப்ரேய்க்காவைக் குறிப்பிடுகிறது.

“UBS” ஐக்கிய பைபிள் சங்கங்கள் வெளியிட்ட தி கிரீக் நியூ டெஸ்டமென்டைக் குறிப்பிடுகிறது.

“BHS” பிப்ளியா ஹெப்ரேய்க்கா ஸடட்கார்ட்டென்சியாவைக் குறிப்பிடுகிறது.

“கிரேக்கு” என்பது, கிரேக்கிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதைக் குறிக்கிறது, ஆனால் தனிப்பட்ட வாக்கியம் எதுவும் காட்டப்படுவதில்லை.