ஆதியாகமம் 36:1-43

36  ஏசாவின், அதாவது ஏதோமின்,+ வரலாறு இதுதான்.  ஏசா கல்யாணம் செய்த கானானியப் பெண்கள்: ஏத்தியனான ஏலோனின் மகள்+ ஆதாள்,+ ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகுவின் மகளுமான அகோலிபாமாள்,+  இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின்+ சகோதரியுமான பஸ்மாத்.+  ஏசாவின் மனைவி ஆதாளுக்கு எலிப்பாஸ் பிறந்தான், பஸ்மாத்துக்கு ரெகுவேல் பிறந்தான்.  அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோராகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள். இவர்கள்தான் கானான் தேசத்தில் ஏசாவுக்குப் பிறந்த மகன்கள்.  பின்பு, ஏசா தன்னுடைய மனைவிகளையும் மகன்களையும் மகள்களையும் தன்னுடைய வீட்டிலிருந்த எல்லாரையும் கூட்டிக்கொண்டு, தன்னுடைய தம்பி யாக்கோபைவிட்டுத் தூரமாக வேறொரு தேசத்துக்குப் போனார்.+ அப்போது, தன்னுடைய ஆடுமாடுகளையும் மற்ற எல்லா கால்நடைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்தில் தான் சம்பாதித்திருந்த சொத்துகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்.+  ஏனென்றால், ஏசாவும் யாக்கோபும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாதளவுக்கு அவர்களுடைய உடைமைகள் ஏராளமாகப் பெருகியிருந்தன. அதோடு, அவர்கள் குடியிருந்த தேசத்தில் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதுமான இடம் இருக்கவில்லை.  அதனால், சேயீர் மலைப்பகுதியில்+ ஏசா குடியேறினார். ஏசாவின் இன்னொரு பெயர் ஏதோம்.+  சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்ந்த ஏதோமியர்களின் தகப்பனான ஏசாவுடைய வரலாறு இதுதான். 10  ஏசாவுடைய மகன்கள்: ஏசாவின் மனைவியான ஆதாளுக்குப் பிறந்த எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்துக்குப் பிறந்த ரெகுவேல்.+ 11  எலிப்பாசின் மகன்கள்: தேமான்,+ ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்.+ 12  ஏசாவின் மகன் எலிப்பாசுக்கு திம்ணா மறுமனைவியானாள். அவள் எலிப்பாசுக்கு அமலேக்கைப்+ பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான ஆதாளின் பேரன்கள். 13  ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா. இவர்கள்தான் ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின்+ பேரன்கள். 14  சிபியோனின் பேத்தியும் ஆனாகுவின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளுக்குப் பிறந்த மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு. 15  ஏசாவின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள்+ இவர்கள்தான்: ஏசாவின் மூத்த மகன் எலிப்பாசின் மகன்களான தேமான், ஓமார், செப்போ, கேனாஸ்,+ 16  கோராகு, கத்தாம், அமலேக். இவர்கள்தான் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள்.+ இவர்கள்தான் ஆதாளின் பேரன்கள். 17  ஏசாவின் மகன் ரெகுவேலின் மகன்கள்: நாகாத், சேராகு, சம்மா, மீசா. இவர்கள்தான் ஏதோம் தேசத்தில்+ ரெகுவேலின் வம்சத்தில் வந்த குலத்தலைவர்கள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் பேரன்கள். 18  ஏசாவுடைய மனைவி அகோலிபாமாளின் மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு. இவர்கள்தான் ஆனாகுவின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் மகன்களில் குலத்தலைவர்களாக இருந்தவர்கள். 19  ஏசாவின் மகன்களும் அவர் வம்சத்தில் வந்த குலத்தலைவர்களும் இவர்கள்தான். ஏசாவின் இன்னொரு பெயர் ஏதோம்.+ 20  அந்தத் தேசத்தில் குடியிருந்த ஓரியனான சேயீரின் மகன்கள்:+ லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,+ 21  திஷோன், ஏத்சேர், திஷான்.+ இவர்கள்தான் ஏதோம் தேசத்திலிருந்த சேயீரின் மகன்களான ஓரியர்களின் குலத்தலைவர்கள். 22  லோத்தானின் மகன்கள்: ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி: திம்ணா.+ 23  சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம். 24  சிபியோனின் மகன்கள்:+ அயா, ஆனாகு. இந்த ஆனாகு தன்னுடைய அப்பா சிபியோனின் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருந்த சமயத்தில் வெந்நீர் ஊற்றுகளை வனாந்தரத்தில் கண்டுபிடித்தான். 25  ஆனாகுவின் பிள்ளைகள்: மகன் திஷோன், மகள் அகோலிபாமாள். 26  திஷோனின் மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்தரான், கேரான்.+ 27  ஏத்சேரின் மகன்கள்: பில்கான், சகவான், அக்கான். 28  திஷானின் மகன்கள்: ஊத்ஸ், அரான்.+ 29  ஓரியர்களின் குலத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 30  திஷோன், ஏத்சேர், திஷான்.+ இவர்கள்தான் சேயீர் தேசத்தில் இருந்த ஓரியர்களின் குலத்தலைவர்கள். 31  இஸ்ரவேலர்களை ராஜாக்கள் ஆட்சி செய்வதற்குமுன்+ ஏதோம் தேசத்தை ஆட்சி செய்த ராஜாக்களின்+ விவரம் இதுதான்: 32  பெயோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி செய்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் தின்காபா. 33  பேலா இறந்தபின், போஸ்றாவைச் சேர்ந்த சேராகுவின் மகன் யோபாப் ஆட்சிக்கு வந்தான். 34  யோபாப் இறந்தபின், தேமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான். 35  ஊசாம் இறந்தபின், பேதாத்தின் மகன் ஆதாத் ஆட்சிக்கு வந்தான். அவன் மோவாப் பிரதேசத்தில் மீதியானியர்களைத்+ தோற்கடித்திருந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் ஆவீத். 36  ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்காவைச் சேர்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான். 37  சம்லா இறந்தபின், ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த ரெகொபோத்தைச் சேர்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான். 38  சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால்-கானான் ஆட்சிக்கு வந்தான். 39  அக்போரின் மகன் பாகால்-கானான் இறந்தபின், ஹாதார் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்த நகரத்தின் பெயர் பாகு. அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகள், மேசகாப்பின் பேத்தி. 40  அவரவர் வம்சங்களின்படியும் அவரவர் இடங்களின்படியும், ஏசாவின் சந்ததியில் வந்த குலத்தலைவர்களின் பெயர்கள்: திம்ணா, ஆல்வா, ஏதேத்,+ 41  அகோலிபாமா, ஏலா, பினோன், 42  கேனாஸ், தேமான், மிப்சார், 43  மக்தியேல், இராம். ஏதோமியர்கள் உரிமையாக்கிக்கொண்ட தேசத்தில்+ அவரவர் குடியேறிய பகுதிகளின்படி குலத்தலைவர்களாக இருந்தவர்கள் இவர்கள்தான். இந்த ஏதோமியர்களின் மூதாதை ஏசா.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா