உபாகமம் 33:1-29
33 உண்மைக் கடவுளின் ஊழியராகிய மோசே தான் இறப்பதற்கு முன்பு இஸ்ரவேலர்களை ஆசீர்வதித்தார்.+
2 அப்போது அவர்,
“சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார்.
லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+
3 அவருடைய ஜனங்கள்மேல் பாசம் காட்டினார்.+பரிசுத்தமான அந்த ஜனங்கள் எல்லாரும் அவருடைய கையில் இருக்கிறார்கள்.+
அவருடைய காலடியில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.+அவருடைய வார்த்தைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.+
4 (மோசே நமக்குக் கட்டளையையும் சட்டத்தையும் கொடுத்தார்.+அது யாக்கோபின் சபையாருடைய சொத்து.)+
5 ஜனங்களின் தலைவர்களும் இஸ்ரவேல் கோத்திரத்தார்+ எல்லாரும் ஒன்றுகூடி வந்தபோது,+கடவுள் யெஷுரனில்*+ ராஜாவானார்.
6 ரூபன் சாகாமல் என்றும் வாழட்டும்.+அவனுடைய வம்சம் குறையாமல் பெருகட்டும்”+ என்று சொன்னார்.
7 பின்பு மோசே யூதாவை ஆசீர்வதித்து,+
“யெகோவாவே, யூதாவின் குரலைக் கேளுங்கள்.+அவனுடைய ஜனங்களிடமே அவனைத் திரும்பி வரச் செய்யுங்கள்.
அவன் தனக்குச் சொந்தமானதைக் காப்பாற்ற தன் கைகளால் போராடினான்.எதிரிகளைத் தோற்கடிக்க அவனுக்கு உதவி செய்யுங்கள்”+ என்று சொன்னார்.
8 பின்பு லேவியைப் பற்றி,+
“கடவுளே, உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவனிடம்+ உங்களுடைய தும்மீமையும், ஊரீமையும் கொடுத்தீர்கள்.+அவனை மாசாவில் சோதித்துப் பார்த்தீர்கள்.+
மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவனோடு வழக்காடினீர்கள்.+
9 அவன் தன்னுடைய அப்பா அம்மாவை மதிக்கவில்லை.
தன்னுடைய சகோதரர்களின் பக்கம் சாயவில்லை.+சொந்த பிள்ளைகளையும் சட்டை பண்ணவில்லை.
அவர்கள் உங்களுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.உங்களுடைய ஒப்பந்தத்தை மதித்தார்கள்.+
10 உங்கள் நீதித்தீர்ப்புகளை+ அவர்கள் யாக்கோபுக்குச் சொல்லித்தரட்டும்.உங்களுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.+
உங்களுக்கு வாசனையான தூபத்தைக் காட்டட்டும்.+உங்களுடைய பலிபீடத்தில் தகன பலி செலுத்தட்டும்.+
11 யெகோவாவே, அவனுக்கு நிறைய பலம் கொடுங்கள்.அவன் செய்வதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுங்கள்.
அவனுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களுடைய கால்களை ஒடித்துப்போடுங்கள்.அவர்கள் மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி செய்துவிடுங்கள்” என்று சொன்னார்.
12 பின்பு பென்யமீனைப் பற்றி,+
“யெகோவாவுக்குப் பிரியமானவன், அவனுடைய* பாதுகாப்பு நிழலில் தங்கியிருக்கட்டும்.நாள் முழுக்க அவன்* அவனுக்குத் தஞ்சம் தரட்டும்.அவனைத் தன் தோள்களில் சுமக்கட்டும்” என்று சொன்னார்.
13 பின்பு யோசேப்பைப் பற்றி,+
“அவனுடைய தேசம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படட்டும்.+வானத்திலிருந்து பனித்துளியும் ஆசீர்வாதங்களும் அங்கே பொழியட்டும்.ஆழத்திலிருந்து ஊற்றுகள் பொங்கி எழட்டும்.+
14 சூரிய வெளிச்சத்தில் அழகான செடிகொடிகள் முளைக்கட்டும்.ஒவ்வொரு மாதமும் நல்ல விளைச்சல் கிடைக்கட்டும்.+
15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.
16 பூமி எல்லா செல்வங்களையும் தரட்டும்.+முட்புதரில் தோன்றிய கடவுள்+ ஆசீர்வாதம் பொழியட்டும்.
எல்லாமே யோசேப்பின் தலைமேல் இறங்கட்டும்.சகோதரர்களில் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமேல் வரட்டும்.+
17 அவனுடைய கம்பீரம் காளையின் முதல் கன்றைப் போன்றது.அவனுடைய கொம்புகள் காட்டு எருதின் கொம்புகள் போன்றவை.
அவற்றால் ஜனங்களை அவன் முட்டி மோதுவான்,அவர்கள் எல்லாரையும் பூமியெங்கும் விரட்டியடிப்பான்.
அந்தக் கொம்புகள்தான் எப்பிராயீமின் பத்தாயிரக்கணக்கான வீரர்கள்.+அந்தக் கொம்புகள்தான் மனாசேயின் ஆயிரக்கணக்கான வீரர்கள்” என்று சொன்னார்.
18 பின்பு செபுலோனைப் பற்றி,+
“செபுலோனே, நீ வெளியே போகும்போது* சந்தோஷப்படு.இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கியிருக்கும்போது சந்தோஷப்படு.+
19 அவர்கள் ஜனங்களை மலைக்கு அழைப்பார்கள்.
நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.
ஏனென்றால், ஆழ்கடலின் செல்வங்களையும்மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல்களையும்அவர்கள் அனுபவிப்பார்கள்” என்று சொன்னார்.
20 பின்பு காத்தைப் பற்றி,+
“காத்தின் எல்லைகளை+ விரிவாக்குகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
அவன் சிங்கத்தைப் போலப் பதுங்கியிருப்பான்.கையையும் உச்சந்தலையையும் கடித்துக் குதறிப்போடக் காத்திருப்பான்.
21 முதல் பங்கை அவனே எடுத்துக்கொள்வான்.+சட்டம் கொடுப்பவர் அதைத்தான் அவனுக்காக ஒதுக்கியிருந்தார்.+
அவனுடைய ஜனங்களின் தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள்.
யெகோவாவின் சார்பாக அவன் நீதி செய்வான்.இஸ்ரவேலில் அவருடைய நீதித்தீர்ப்புகளை நிறைவேற்றுவான்” என்று சொன்னார்.
22 பின்பு தாணைப் பற்றி,+
“தாண் ஒரு சிங்கக்குட்டி,+
பாசானிலிருந்து பாய்ந்து வரும் சிங்கக்குட்டி”+ என்று சொன்னார்.
23 பின்பு நப்தலியைப் பற்றி,+
“நப்தலி யெகோவாவின் பிரியத்தைப் பெற்று, திருப்தியாக இருக்கிறான்.அவருடைய ஆசீர்வாதத்தை நிறைவாகப் பெற்றிருக்கிறான்.
மேற்கையும் தெற்கையும் நீ சொந்தமாக்கிக்கொள்” என்று சொன்னார்.
24 பின்பு ஆசேரைப் பற்றி,+
“ஆசேருக்குக் கடவுள் நிறைய மகன்களைத் தந்து ஆசீர்வதிக்கட்டும்.
அவனுடைய சகோதரர்கள் அவனிடம் பிரியமாக இருக்கட்டும்.அவன் தன்னுடைய பாதங்களை எண்ணெயில் கழுவட்டும்.”*
25 இரும்பும் செம்பும் உன் கதவின் தாழ்ப்பாள்கள்.+காலமெல்லாம் நீ பாதுகாப்போடு இருப்பாய்.
26 யெஷுரனின்+ உண்மைக் கடவுளைப் போல யாரும் இல்லை.+உனக்கு உதவி செய்ய அவர் வானத்தில் பவனி வருகிறார்.மகிமையோடு மேகத்தில் உலா வருகிறார்.+
27 பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை.+அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன.+
உன் எதிரியை உன் கண் முன்னால் அவர் துரத்திவிடுவார்.+‘அவர்களை ஒழித்துக்கட்டு!’ என்று சொல்வார்.+
28 இஸ்ரவேல் பாதுகாப்பாகத் தங்குவான்.தானியமும் புதிய திராட்சமதுவும் நிறைந்த தேசத்திலே,+பனி பொழியும் தேசத்திலே,+யாக்கோபின் வம்சம்* மட்டும் இருக்கும்.
29 இஸ்ரவேலே, நீ சந்தோஷமானவன்.+
உன்னைப் போல் யாரும் இல்லை.+யெகோவாவினால் மீட்கப்படுகிற ஜனம் நீ.+உன்னைக் காக்கும் கேடயம் அவர்தான்.+உன்னுடைய வீர வாளும் அவர்தான்.
உன் எதிரிகள் உன் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+நீ அவர்களுடைய முதுகில்* ஏறி மிதிப்பாய்” என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ இந்தப் பெயரின் அர்த்தம், “நேர்மையானவன்”; இது இஸ்ரவேலின் கௌரவப் பட்டம்.
^ வே.வா., “பற்றுமாறாமல்.”
^ அல்லது, “அவருடைய.”
^ அல்லது, “அவர்.”
^ அல்லது, “கிழக்கிலுள்ள.”
^ வே.வா., “நீ வியாபாரம் செய்யும்போது.”
^ வே.வா., “நனைக்கட்டும்.”
^ நே.மொ., “ஊற்று.”
^ அல்லது, “மலைகளை.”