ஏசாயா 45:1-25

45  யெகோவாவாகிய நான் கோரேசைத்+ தேர்ந்தெடுத்திருக்கிறேன்.நான் அவனுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன்.+அவனுக்கு முன்பாகத் தேசங்களை அடிபணிய வைப்பேன்.+அவனுக்கு முன்பாக ராஜாக்களை வீழ்த்துவேன்.அவனுக்கு முன்பாக நகரவாசல்களும் அவற்றின் கதவுகளும்பூட்டப்படாமல் திறந்திருக்கும்படி செய்வேன்.அவனிடம் நான் சொல்வது இதுதான்:   “நான் உனக்கு முன்னால் போய்,+குன்றுகளைத் தரைமட்டமாக்குவேன். செம்புக் கதவுகளை நொறுக்கிப்போடுவேன்.இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துப்போடுவேன்.+   இருட்டில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும்,ரகசிய இடங்களில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும் உனக்குத் தருவேன்.+அப்போது, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா நான்தான் என்றும்,உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவர் நான்தான்+ என்றும் நீ புரிந்துகொள்வாய்.   என் ஊழியனான யாக்கோபுக்காகவும் நான் தேர்ந்தெடுத்த இஸ்ரவேலுக்காகவும்,உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறேன். என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உனக்குக் கௌரவமான பெயரைக் கொடுக்கிறேன்.   நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உன்னைப் பலப்படுத்துவேன்.   ஏனென்றால், கிழக்கிலிருந்து மேற்குவரை இருக்கிற ஜனங்கள் எல்லாரும்என்னைத் தெரிந்துகொள்ள வேண்டும்.என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள்.+   வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.   வானம் பொழியட்டும்.+மேகங்கள் நீதியை மழைபோல் தூவட்டும். பூமி அதில் நனைந்து மீட்பு என்ற விதையை முளைப்பிக்கட்டும்.நீதி என்ற விதையையும் துளிர்க்க வைக்கட்டும்.+ இவற்றை உருவாக்கியவர் யெகோவாவாகிய நானே.”   தன்னைப் படைத்தவரோடு வழக்காடுகிறவனுக்கு* கேடுதான் வரும்.தரையில் கிடக்கிற மண் ஓடுகளில் ஒன்றைப் போல் அவன் இருக்கிறான்.களிமண் குயவனைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்க முடியுமா?+ அல்லது ஒரு மண்பாத்திரம், “உங்களுக்குக் கையே இல்லை” என்று சொல்ல முடியுமா?* 10  ஒரு அப்பாவைப் பார்த்து, “ஏன் பிள்ளை பெற்றீர்கள்?” என்றோ, அம்மாவைப் பார்த்து, “ஏன் பெற்றெடுத்தீர்கள்?” என்றோ கேட்கிறவனுக்குக் கேடுதான் வரும். 11  இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கியவருமான யெகோவா சொல்வது இதுதான்: “நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி என்னையே கேள்வி கேட்பாயா?என் பிள்ளைகளையும்+ என் கையால் படைத்தவற்றையும் பற்றி எனக்கே புத்தி சொல்வாயா? 12  நான் பூமியை உருவாக்கி+ அதில் மனுஷனைப் படைத்தேன்.+ என் கையாலேயே வானத்தை விரித்தேன்.+வானத்தின் படைகளுக்கு* நான்தான் கட்டளை கொடுக்கிறேன்.”+ 13  “நான் நீதியுள்ளவர். அதனால் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+அவருடைய வழிகளையெல்லாம் சீரமைப்பேன். அவர்தான் என்னுடைய நகரத்தைக் கட்டுவார்.+சிறைபிடிக்கப்பட்ட என் ஜனங்களை பணமோ லஞ்சமோ வாங்காமல்+ விடுதலை செய்வார்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 14  யெகோவா சொல்வது இதுதான்: “எத்தியோப்பிய ஜனங்களுக்கும் உயரமான சபேயர்களுக்கும் சொந்தமான சரக்குகளும்,* எகிப்தியர்களின் சொத்தும்*உன் கைக்கு வந்து சேரும், அது உனக்குச் சொந்தமாகும். அவர்கள் விலங்குகளை மாட்டிக்கொண்டு உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள். உன்முன் வந்து தலைவணங்குவார்கள்.+ பின்பு உன்னிடம், ‘கடவுள் நிச்சயமாகவே உங்களோடு இருக்கிறார்.+அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவர் மட்டும்தான் கடவுள்’ என்று பயபக்தியோடு சொல்வார்கள்.” 15  இஸ்ரவேலின் கடவுளே, மீட்பரே!+உண்மையிலேயே நீங்கள் உங்களை மறைத்துக்கொள்கிறீர்கள். 16  சிலைகளைச் செய்பவர்கள் எல்லாரும் கேவலப்பட்டுப் போவார்கள்.அவர்கள் எல்லாரும் வெட்கப்பட்டு, அவமானப்பட்டுப் போவார்கள்.+ 17  ஆனால் இஸ்ரவேலர்களே, யெகோவா உங்களை என்றென்றும் மீட்பார்.+ நீங்கள் ஒருபோதும் அவமானமோ கேவலமோ அடைய மாட்டீர்கள்.+ 18  யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார்.+ அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார்.+அவர் அதைக் காரணம் இல்லாமல்* படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.+அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. 19  நான் மறைவான இடத்திலிருந்தோ இருட்டான இடத்திலிருந்தோ பேசவில்லை.+யாக்கோபின் வாரிசிடம், ‘எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் என்னை வணங்கு’ என்று நான் சொல்லவில்லை. நான் யெகோவா, நான் நீதியானதைப் பேசுபவர், உண்மையானதை அறிவிப்பவர்.+ 20  மற்ற தேசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களே, நீங்கள் ஒன்றுகூடுங்கள், திரண்டு வாருங்கள்.+ செதுக்கப்பட்ட சிலைகளைச் சுமந்து செல்கிறவர்களுக்கும்,காப்பாற்ற முடியாத தெய்வங்களிடம் வேண்டுகிறவர்களுக்கும் அறிவே இல்லை.+ 21  நீங்கள் உங்களுடைய வழக்கைச் சொல்லுங்கள், ஆதாரங்களைக் காட்டுங்கள். ஒன்றாகக் கலந்துபேசுங்கள். ரொம்பக் காலத்துக்கு முன்பே இதைச் சொன்னது யார்?பூர்வ காலத்திலிருந்தே இதை அறிவித்தது யார்? யெகோவாவாகிய நான்தானே? என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.நீதியான கடவுளும் மீட்பரும் நான்தான்;+ என்னைப் போல வேறு யாரும் இல்லை.+ 22  பூமியெங்கும் இருப்பவர்களே, என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது காப்பற்றப்படுவீர்கள்.+ஏனென்றால் நான்தான் கடவுள், என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ 23  நான் என்மேல் சத்தியம் செய்திருக்கிறேன்.என் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தை நீதியானது,இது நிறைவேறாமல் போகாது:+ எனக்கு முன்னால் எல்லாரும் மண்டிபோடுவார்கள்.எனக்கு விசுவாசமாய்* இருக்கப்போவதாக எல்லாரும் சத்தியம் செய்வார்கள்.+ 24  அதோடு இப்படிச் சொல்வார்கள்: ‘யெகோவாதான் உண்மையிலேயே நீதியான கடவுள், பலம்படைத்தவர். அவரை எதிர்க்கிற எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள். 25  யெகோவாமேல் நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை என்று இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்த எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.+அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள்.’”

அடிக்குறிப்புகள்

வே.வா., “தன்னை உருவாக்கியவரோடு வாக்குவாதம் செய்கிறவனுக்கு.”
அல்லது, “‘நீங்கள் செய்த மண் பாத்திரத்துக்குக் கைப்பிடியே இல்லை’ என்று களிமண் சொல்ல முடியுமா?”
அதாவது, “நட்சத்திரங்களுக்கும் வானத்திலுள்ள எல்லாவற்றுக்கும்.”
அல்லது, “கூலியாட்களும்.”
அல்லது, “வியாபாரிகளும்.”
அல்லது, “காலியாக இருப்பதற்கு.”
வே.வா., “பற்றுமாறாமல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா