ஏசாயா 59:1-21

59  உங்களைக் காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கை என்ன சின்னதா?+நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாதபடி அவருடைய காது என்ன மந்தமா?+   நீங்கள் செய்த குற்றங்கள்தானே உங்கள் கடவுளைவிட்டு உங்களைப் பிரித்துவிட்டன?+ நீங்கள் செய்த பாவங்களால்தானே அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்காமல்,அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்துக்கொண்டார்?+   உங்கள் கைகள் இரத்தத்தால் கறைபட்டிருக்கின்றன.+உங்கள் விரல்கள் குற்றத்தால் தீட்டுப்பட்டிருக்கின்றன. உங்கள் உதடுகள் பொய் சொல்கின்றன;+ உங்கள் நாவு அநியாயமாகப் பேசுகிறது.   நீதிக்குக் குரல்கொடுக்க யாருமே இல்லை.+நேர்மையாக வழக்காட ஒருவரும் இல்லை. வீணானதை நம்புகிறார்கள்;+ பிரயோஜனம் இல்லாததைப் பேசுகிறார்கள். கெட்டதை யோசிக்கிறார்கள், அக்கிரமத்தைச் செய்கிறார்கள்.+   அவர்களுடைய யோசனைகள் விஷப் பாம்பின் முட்டைகளைப் போல் இருக்கின்றன.அவற்றிலிருந்து விஷப் பாம்பின்* குட்டிகள்தான் வரும். அந்த முட்டைகளைச் சாப்பிடுகிறவன் செத்துப்போவான்.அவர்கள் வெறும் சிலந்தி வலையைத்தான் பின்னுகிறார்கள்.+   அந்த வலையை அவர்களால் உடையாக உடுத்திக்கொள்ள முடியாது,போர்வையாகப் போர்த்திக்கொள்ளவும் முடியாது.+ அவர்கள் கெட்ட செயல்களைச் செய்கிறார்கள்.எப்போதும் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள்.+   அவர்களுடைய கால்கள் கெட்டதைச் செய்ய ஓடுகின்றன.அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்த வேகமாகப் போகின்றன.+ அவர்கள் எப்போதும் கெட்டதையே யோசிக்கிறார்கள்.எப்போதுமே மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள்.+   சமாதான வழியில் அவர்கள் கால்வைத்ததே இல்லை.அவர்களுடைய பாதைகளில் நியாயம் இல்லை.+ அவர்களுடைய வழிகள் குறுக்கு வழிகள்.அந்த வழிகளில் போகிறவர்களுக்குச் சமாதானமே கிடைக்காது.+   அதனால்தான், நியாயம் எங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.நீதி எங்களை நெருங்குவதே இல்லை. நாங்கள் ஒளிக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் இருளைத்தான் பார்க்கிறோம்.வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் இருட்டில்தான் நடக்கிறோம்.+ 10  குருடர்களைப் போலத் தடவித் தடவி சுவரைத் தேடுகிறோம்.பார்வை இல்லாதவர்களைப் போலத் தட்டுத்தடுமாறுகிறோம்.+ ராத்திரியில் தடுக்கி விழுவதைப் போலப் பட்டப்பகலிலும் தடுக்கி விழுகிறோம்.பலசாலிகளின் நடுவே செத்தவர்களைப் போல இருக்கிறோம். 11  நாங்கள் எல்லாரும் கரடிகளைப் போல உறுமுகிறோம்.புறாவைப் போலச் சோகமாக முனகுகிறோம். நியாயத்துக்காக ஏங்குகிறோம், ஆனால் அது கிடைப்பதே இல்லை.மீட்புக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் அது கிடைத்த பாடில்லை. 12  ஏனென்றால், உங்களுக்குமுன் நாங்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்தோம்.+எங்கள் பாவங்கள் ஒவ்வொன்றும் எங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்கிறது.+ எங்கள் குற்றங்களையும் பாவங்களையும்நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.+ 13  நாங்கள் பாவம் செய்து யெகோவாவை விட்டுவிட்டோம்.எங்கள் கடவுளுக்கே துரோகம் செய்துவிட்டோம். கொடுமை செய்யவும் கலகம் செய்யவும் திட்டம் போட்டோம்.+இதயத்தில் சதி செய்து பொய் பேசினோம்.+ 14  நியாயம் பின்னால் தள்ளப்படுகிறது.+நீதி தூரமாக நிற்கிறது.உண்மை பொது சதுக்கத்தில் நிலைதடுமாறுகிறது.நேர்மை அங்கு நுழைய முடிவதில்லை. 15  உண்மை காணாமல்போய்விட்டது.+கெட்ட வழிக்குப் போகாதவர்கள் சூறையாடப்படுகிறார்கள். எங்குமே நியாயம் இல்லை.+ யெகோவா இதைப் பார்த்துக் கோபப்பட்டார். 16  நியாயம் செய்ய ஒருவனும் இல்லாததை அவர் பார்த்தார்.யாருமே தலையிடாததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.அதனால் அவருடைய கையாலேயே மீட்பு தந்தார்.*அவருடைய நீதி அவருக்குத் துணையாக இருந்தது. 17  நீதியை உடல்கவசம் போலப் போட்டுக்கொண்டார்.மீட்பை* தலைக்கவசமாக அணிந்துகொண்டார்.+ பழிவாங்குதலை உடை போல உடுத்திக்கொண்டார்.+வைராக்கியத்தை மேலாடை போல அணிந்துகொண்டார். 18  அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார். 19  மேற்கில் இருக்கிறவர்கள் யெகோவாவின் பெயருக்குப் பயப்படுவார்கள்.கிழக்கில் இருக்கிறவர்கள் அவருடைய மகிமையைக் கண்டு நடுங்குவார்கள்.ஏனென்றால், ஆற்றைப் போல யெகோவா வருவார்.அவருடைய சக்தியால் பாய்ந்து வருகிற ஆற்றைப் போல வேகமாக வருவார். 20  “விடுவிக்கிறவர்+ சீயோனுக்கு வருவார்.+குற்றங்களைவிட்டுத் திரும்புகிற யாக்கோபின் சந்ததியிடம் வருவார்”+ என்று யெகோவா சொல்கிறார். 21  “இதுதான் நான் அவர்களோடு செய்யும் ஒப்பந்தம்”+ என்று யெகோவா சொல்கிறார். “உங்கள் வாயில் நான் அருளும் வார்த்தைகள் இன்றுமுதல் என்றென்றுமே உங்கள் வாயிலிருந்தும் உங்கள் பிள்ளைகளுடைய வாயிலிருந்தும் பேரப்பிள்ளைகளுடைய வாயிலிருந்தும் விலகாது; நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற என் சக்தியும் உங்களைவிட்டு விலகாது” என்று யெகோவா சொல்கிறார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “விரியன் பாம்பின்.”
வே.வா., “வெற்றி பெற்றார்.”
வே.வா., “வெற்றியை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா