சங்கீதம் 111:1-10
111 “யா”வைப் புகழுங்கள்!*+
א [ஆலெஃப்]
நான் யெகோவாவை முழு இதயத்தோடு புகழ்வேன்.+ב [பேத்]நேர்மையானவர்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன்.
ג [கீமெல்]
2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை.+ד [டாலத்]அவற்றின் மேல் பிரியமாக இருக்கிற எல்லாரும் அவற்றை ஆராய்கிறார்கள்.+
ה [ஹே]
3 அவருடைய செயல்கள் அற்புதமானவை, அதிசயமானவை.ו [வா]அவருடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+
ז [ஸாயின்]
4 அவருடைய அருமையான செயல்களை எல்லாருடைய நினைவிலும் அவர் நிறுத்துகிறார்.+
ח [ஹேத்]
யெகோவா கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர்.+
ט [டேத்]
5 தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.+
י [யோத்]
தன்னுடைய ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கிறார்.+
כ [காஃப்]
6 மற்ற தேசத்து மக்களின் சொத்துகளைத் தன் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.+ל [லாமெத்]இப்படி, தன்னுடைய செயல்களின் வல்லமையைத் தன் மக்களுக்குக் காட்டியிருக்கிறார்.
מ [மேம்]
7 அவருடைய கைகளின் செயல்கள் உண்மையானவை, நியாயமானவை.+נ [நூன்]அவருடைய ஆணைகளெல்லாம் நம்பகமானவை.+
ס [சாமெக்]
8 அவற்றை எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.ע [ஆயின்]உண்மையும் நீதியும் அவற்றின் அஸ்திவாரம்.+
פ [பே]
9 அவர் தன்னுடைய மக்களை மீட்டிருக்கிறார்.+
צ [சாதே]
தன்னுடைய ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார்.
ק [கோஃப்]
அவருடைய பெயர் பரிசுத்தமானது, பயபக்திக்குரியது.+
ר [ரேஷ்]
10 யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கான முதல் படி.+
ש [ஸீன்]
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் மிகுந்த விவேகத்தோடு* நடக்கிறார்கள்.+
ת [ட்டா]
அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ வே.வா., “கனிவும்.”
^ வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”