சங்கீதம் 25:1-22
தாவீதின் பாடல்.
א [ஆலெஃப்]
25 யெகோவாவே, நான் உங்களிடம் உதவிக்காகக் கெஞ்சுகிறேன்.
ב [பேத்]
2 என் கடவுளே, நான் உங்களையே நம்பியிருக்கிறேன்.+என்னை அவமானப்பட விட்டுவிடாதீர்கள்.+
என்னுடைய வேதனைகளைப் பார்த்து எதிரிகள் சந்தோஷப்படும்படி செய்துவிடாதீர்கள்.+
ג [கீமெல்]
3 உங்கள்மேல் நம்பிக்கையாக இருக்கிற யாருமே அவமானப்பட மாட்டார்கள்.+காரணம் இல்லாமல் துரோகம் செய்கிறவர்களுக்குத்தான் அவமானம் காத்திருக்கிறது.+
ד [டாலத்]
4 யெகோவாவே, உங்களுடைய பாதைகளை எனக்குக் காட்டுங்கள்.+உங்களுடைய வழிகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
ה [ஹே]
5 உங்களுடைய சத்திய பாதையில் என்னை நடத்தி, எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ஏனென்றால், என்னை மீட்கும் கடவுள் நீங்கள்தான்.
ו [வா]
நாள் முழுவதும் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
ז [ஸாயின்]
6 யெகோவாவே, உங்களுடைய இரக்கத்தையும் மாறாத அன்பையும்+ நினைத்துப் பாருங்கள்.அவற்றை ஆரம்பக் காலத்திலிருந்தே நீங்கள் காட்டி வருகிறீர்களே.+
ח [ஹேத்]
7 நான் இளமையில் செய்த பாவங்களையும் குற்றங்களையும் நினைத்துப் பார்க்காதீர்கள்.
யெகோவாவே, நீங்கள் நல்ல மனம் உள்ளவராக இருப்பதால்,+உங்களுடைய மாறாத அன்பின்படியே என்னை நினைத்துப் பாருங்கள்.+
ט [டேத்]
8 யெகோவா நல்லவர், நேர்மையானவர்.+
அதனால்தான், பாவிகளுக்கு நல்ல வழியைக் கற்றுக்கொடுக்கிறார்.+
י [யோத்]
9 அவர் தாழ்மையானவர்களை* நேர்வழியில் நடத்துவார்.+தாழ்மையானவர்களுக்கு* தன்னுடைய பாதையைக் காட்டுவார்.+
כ [காஃப்]
10 யெகோவா தன் ஒப்பந்தத்துக்கும்+ நினைப்பூட்டுதல்களுக்கும்+ கீழ்ப்படிகிறவர்களிடம்எப்போதுமே மாறாத அன்பைக் காட்டி, உண்மையோடு நடந்துகொள்கிறார்.
ל [லாமெத்]
11 யெகோவாவே, நான் செய்த குற்றம் பெரிதாக இருந்தாலும்,உங்கள் பெயருக்காக+ என்னை மன்னித்துவிடுங்கள்.
מ [மேம்]
12 யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் யார்?+
அவன் தேர்ந்தெடுக்க வேண்டிய வழியைப் பற்றி அவர் அவனுக்குக் கற்றுக்கொடுப்பார்.+
נ [நூன்]
13 அவன் நன்மைகளை அனுபவிப்பான்.+அவனுடைய சந்ததிக்கு இந்தப் பூமி சொந்தமாகும்.+
ס [சாமெக்]
14 தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+தன்னுடைய ஒப்பந்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.+
ע [ஆயின்]
15 என் கண்கள் எப்போதும் யெகோவாவையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.+
פ [பே]
16 உதவிக்கு யாரும் இல்லாமல் நான் தனியாகத் தவிக்கிறேன்.அதனால், உங்கள் முகத்தை என் பக்கமாகத் திருப்பி, எனக்குக் கருணை காட்டுங்கள்.
צ [சாதே]
17 என் இதயத்தின் வேதனைகள் பெருகிவிட்டன.+இந்தத் தவிப்பிலிருந்து என்னை விடுவியுங்கள்.
ר [ரேஷ்]
18 நான் படுகிற துன்பத்தையும் துயரத்தையும் பார்த்து,+என் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுங்கள்.+
19 எத்தனை பேர் என்னை எதிர்க்கிறார்கள் பாருங்கள்!எவ்வளவு மூர்க்கமாக என்னை வெறுக்கிறார்கள் பாருங்கள்!
ש [ஷீன்]
20 என் உயிரைப் பாதுகாத்து, என்னைக் காப்பாற்றுங்கள்.+
என்னைத் தலைகுனிய விட்டுவிடாதீர்கள்.
ஏனென்றால், நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.
ת [ட்டா]
21 என்னுடைய உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்.+நான் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.+
22 கடவுளே, எல்லா வேதனைகளிலிருந்தும் இஸ்ரவேலைக் காப்பாற்றுங்கள்.