லேவியராகமம் 12:1-8

12  பின்பு யெகோவா மோசேயிடம்,  “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு பெண் கர்ப்பமாகி ஆண் குழந்தையைப் பெற்றால், ஏழு நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு+ நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள்.  எட்டாம் நாளில் அந்த ஆண் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+  இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 33 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அந்தச் சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான எதையும் அவள் தொடக் கூடாது, பரிசுத்த இடத்துக்குள் வரவும் கூடாது.  அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், 14 நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 66 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.  ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவள் தன்னுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்ததும், ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ ஒரு புறாக் குஞ்சை அல்லது காட்டுப் புறாவைப் பாவப் பரிகார பலியாகவும் கொண்டுவர வேண்டும். அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.  அவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் செலுத்தி, அவளுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்கி அவள் சுத்தமாவாள். ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவளுக்காகக் கொடுக்கப்படும் சட்டம் இதுதான்.  ஆனால், ஆட்டுக்குட்டியைக் கொடுக்க வசதி இல்லாவிட்டால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ அவள் கொண்டுவர வேண்டும். ஒன்றைத் தகன பலியாகவும் மற்றொன்றைப் பாவப் பரிகார பலியாகவும் கொடுக்க வேண்டும். அவளுக்காக குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவள் சுத்தமாவாள்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா