யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 6:1-17

6  ஏழு முத்திரைகளில்+ ஒன்றை ஆட்டுக்குட்டியானவர்+ உடைப்பதைப் பார்த்தேன். அப்போது நான்கு ஜீவன்களில்+ ஒன்று இடிமுழக்கம் போன்ற குரலில், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன்.  அப்போது, ஒரு வெள்ளைக் குதிரை+ வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவரின் கையில் ஒரு வில் இருந்தது. அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது.+ அவர் ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுப் போனார், ஜெயித்து முடிப்பதற்காகப் புறப்பட்டுப் போனார்.+  அவர் இரண்டாவது முத்திரையை உடைத்தபோது, இரண்டாவது ஜீவன்+ “வா!” என்று சொல்வதைக் கேட்டேன்.  அப்போது வேறொரு குதிரை வந்தது. அது சிவப்புக் குதிரை; அதன்மேல் உட்கார்ந்திருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் அதிகாரம் கொடுக்கப்பட்டது; பூமியில் இருக்கிற மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப்போடுவதற்காக அந்த அதிகாரம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது; அவனுக்கு ஒரு பெரிய வாளும் கொடுக்கப்பட்டது.+  அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது,+ மூன்றாவது ஜீவன்+ “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். அப்போது, ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது.  பின்பு, நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து ஒரு குரல் வருவதுபோல் எனக்குக் கேட்டது; அது, “ஒரு தினாரியுவுக்கு*+ ஒரு படி* கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கு மூன்று படி பார்லி; ஒலிவ எண்ணெயையும் திராட்சமதுவையும் தீர்த்துவிடாதே”+ என்று சொன்னது.  அவர் நான்காவது முத்திரையை உடைத்தபோது, நான்காவது ஜீவன்+ “வா!” என்று சொல்வதைக் கேட்டேன்.  அப்போது, மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் பெயர் ‘மரணம்.’ கல்லறை* அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து போனது. நீண்ட வாளாலும், பஞ்சத்தாலும்,+ கொடிய கொள்ளைநோயாலும், கொடிய விலங்குகளாலும் பூமியின் நான்கிலொரு பகுதியை அழிக்க அவற்றுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.+  அவர் ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, கடவுளுடைய வார்த்தையின் காரணமாகவும் சாட்சி கொடுத்ததன்+ காரணமாகவும் கொல்லப்பட்டிருந்தவர்களின்+ இரத்தத்தைப் பலிபீடத்தின்+ கீழே பார்த்தேன். 10  அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள். 11  அப்போது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை உடை கொடுக்கப்பட்டது.+ இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருக்கும்படி சொல்லப்பட்டது. அதாவது, அவர்களைப் போலவே கொலை செய்யப்படவிருந்த சக அடிமைகளான+ அவர்களுடைய சகோதரர்களின் எண்ணிக்கை நிறைவு பெறும்வரை பொறுத்திருக்கும்படி சொல்லப்பட்டது. 12  அவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; அப்போது, பயங்கர நிலநடுக்கம் உண்டானது; ரோமத்தாலான* கறுப்பு துக்கத் துணியைப் போல் சூரியன் கறுப்பானது; சந்திரன் முழுவதும் இரத்தம்போல் சிவப்பானது.+ 13  காற்று பலமாக அடிக்கும்போது அத்தி மரத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல் வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. 14  சுருள் சுருட்டப்படுவதுபோல் வானமும் சுருட்டிப்போடப்பட்டது.+ எல்லா மலைகளும் எல்லா தீவுகளும் அவை இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன.+ 15  அப்போது பூமியின் ராஜாக்களும், உயர் அதிகாரிகளும், படைத் தளபதிகளும், பணக்காரர்களும், பலசாலிகளும், அடிமைகள் எல்லாரும், சுதந்திர மக்கள் எல்லாரும் மலைகளில் இருக்கிற பாறைகளுக்கு நடுவிலும் குகைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.+ 16  பின்பு, அந்த மலைகளையும் பாறைகளையும் பார்த்து, “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரின்+ முகத்துக்கும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்துக்கும்+ எங்களை மூடி மறைத்துக்கொள்ளுங்கள்.+ 17  ஏனென்றால், அவர்களுடைய கடும் கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது.+ அதை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

ஒரு நாள் கூலிக்குச் சமமான ஒரு ரோம வெள்ளிக் காசு. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “குவார்ட்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அநேகமாக, ஆட்டின் ரோமம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா