கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இளைஞர்களே, யெகோவா உங்களுடைய உயிர் நண்பரா?
உங்கள் நண்பரிடம் என்னென்ன குணங்களை எதிர்பார்ப்பீர்கள்? ஒருவேளை, அவர் உண்மையானவராக, அன்பானவராக, தாராள குணமுள்ளவராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். இந்த எல்லா குணங்களையும் யெகோவா காட்டுகிறார்! (யாத் 34:6; அப் 14:17) நீங்கள் செய்யும் ஜெபத்தை அவர் கவனித்துக்கேட்கிறார். உங்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார். (சங் 18:19, 35) நீங்கள் தவறு செய்யும்போது மன்னிக்கிறார். (1யோ 1:9) யெகோவாவைப் போல ஒரு அருமையான நண்பர் இருக்க முடியுமா?
யெகோவாவுடைய நண்பராக ஆவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பைபிளைப் படித்து அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அவரிடம் மனம்திறந்து பேசுங்கள். (சங் 62:8; 142:2) யெகோவா எதையெல்லாம் முக்கியமானதாக நினைக்கிறாரோ அதையெல்லாம் நீங்களும் முக்கியமானதாக நினையுங்கள். உதாரணத்துக்கு, அவருடைய மகனை, அவருடைய அரசாங்கத்தை, எதிர்காலத்தை பற்றிய வாக்குறுதிகளை உயர்வாக நினையுங்கள். அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள். (உபா 32:3) யெகோவாவோடு நெருங்கிய நட்பை வைத்துக்கொள்ளும்போது, அவர் என்றென்றைக்கும் உங்களுடைய நண்பராக இருப்பார்.—சங் 73:25, 26, 28.
இளைஞர்கள்—“யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?
-
யெகோவாவை வணங்க சபையில் இருக்கிற மற்றவர்கள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்?
-
ஊழியத்தில் ஈடுபடுவது, யெகோவாவோடு இருக்கிற நட்பைப் பலப்படுத்திக்கொள்ள எப்படி உதவும்?
-
யெகோவாவுக்கு எந்தெந்த விதங்களில் நீங்கள் சேவை செய்யலாம்?
-
யெகோவாவிடம் நீங்கள் ருசித்துப்பார்த்த விஷயம் என்ன?