Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள்

யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பொக்கிஷமாக நினையுங்கள்

யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு ஒரு விசேஷ பாக்கியம் இருக்கிறது. உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்து அவரோடு நெருக்கமான பந்தத்தை வைத்திருக்கிறோம். தன்னுடைய மகன் மூலம் யெகோவா நம்மை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். (யோவா 6:44) நம்முடைய ஜெபங்களைக் கவனித்துக் கேட்கிறார்.—சங் 34:15.

கடவுளோடு நமக்கு இருக்கிற விசேஷ பந்தத்தை எப்படிப் பாதுகாக்கலாம்? இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் யெகோவாவோடு ஒப்பந்தம் செய்து அவரோடு நெருக்கமான பந்தத்துக்குள் வந்த கொஞ்ச நாளிலேயே ஒரு பொன் கன்றுகுட்டியைச் செய்து அதை வணங்கினார்கள். (யாத் 32:7, 8; 1கொ 10:7, 11, 14) நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘தவறான ஒரு விஷயத்த செய்யணுங்குற ஆசை வர்றப்போ நான் எப்படி நடந்துக்குறேன்? நான் நடந்துக்குற விதம் யெகோவாவோட இருக்குற பந்தத்த பொக்கிஷமா நினைக்குறேன்னு காட்டுதா?’ நம் பரலோகத் தகப்பனிடம் அளவுகடந்த அன்பை வளர்த்துக்கொள்ளும்போது அவர் வெறுக்கிற விஷயங்களைவிட்டு நம்மால் விலகி ஓட முடியும்.—சங் 97:10.

யெகோவாவோடு நீங்கள் வைத்திருக்கும் பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள் (கொலோ 3:5) என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பேராசை என்றால் என்ன?

  • பேராசையையும் சிலை வழிபாட்டையும் ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?

  • மணத்துணைக்குத் துரோகம் செய்வதும் சிலை வழிபாடும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது?

  • முக்கியமாக, பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய துணையின் தேவைகளை ஏன் கவனித்துக்கொள்ள வேண்டும்?