பைபிளில் இருக்கும் புதையல்கள்
உங்களுடைய துணையை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
பொய் தெய்வங்களை வணங்கிய பெண்களை சாலொமோன் முட்டாள்தனமாக கல்யாணம் செய்துகொண்டார் (1ரா 11:1, 2; w18.07 பக். 18 பாரா 7)
அவருடைய மனைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை யெகோவாவைவிட்டு வழிவிலகச் செய்தார்கள் (1ரா 11:3-6; w19.01 பக். 15 பாரா 6)
யெகோவாவுக்கு அவர்மீது பயங்கர கோபம் வந்தது (1ரா 11:9, 10; w18.07 பக். 19 பாரா 9)
கல்யாணம் ஆகாத கிறிஸ்தவர்கள் “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1கொ 7:39) ஆனால், ஒருவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார் என்பதற்காக அவர் உங்களுக்கு ஏற்ற துணையாக ஆகிவிட மாட்டார். முழு இதயத்தோடு யெகோவாவைத் தொடர்ந்து வணங்குவதற்கு அந்த நபர் உங்களுக்கு உதவி செய்வாரா? யெகோவாமேல் ஆழமான அன்பு இருப்பதை அவர் வாழ்கிற விதம் காட்டுகிறதா? என்றெல்லாம் யோசித்துப்பாருங்கள். கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்வதற்கு முன்பு உங்களுடைய வருங்கால துணையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.