பைபிளில் இருக்கும் புதையல்கள்
நாம் ஏன் திருப்தியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும்?
ஏராளமான பரிசுகளைக் கொடுக்க யெரொபெயாம் தயாராக இருந்தாலும் கடவுளுடைய தீர்க்கதரிசி அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் (1ரா 13:7-10; w08 8/15 பக். 8 பாரா 4)
யெகோவா நேரடியாக கொடுத்த கட்டளைக்கு அந்தத் தீர்க்கதரிசி பிற்பாடு கீழ்ப்படியாமல் போய்விட்டார் (1ரா 13:14-19; w08 8/15 பக். 11 பாரா 15)
கீழ்ப்படியாமல் போனதால் அவர் உயிரையே இழந்துவிட்டார் (1ரா 13:20-22; w08 8/15 பக். 9 பாரா 10)
நாம் திருப்தியோடு இருந்தால் தீர்மானங்கள் எடுக்கும்போது யெகோவாவையே நம்பியிருந்தால் மோசமான பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள மாட்டோம்.—1தீ 6:8-10.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இருக்குறத வைச்சு நான் திருப்தியா இருக்குறேனா? நான் எடுக்குற தீர்மானங்கள் நான் அடக்கமா இருக்குறத காட்டுதா?’—நீதி 3:5; 11:2.