ஜனவரி 23-29
ஏசாயா 38–42
பாட்டு 78; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சோர்ந்துபோகிறவர்களுக்கு யெகோவா சக்தி கொடுக்கிறார்”: (10 நிமி.)
ஏசா 40:25, 26—யெகோவாவுக்கு அபாரமான ஆற்றல் இருக்கிறது (ip-1 பக். 409-410 பாரா. 23-25)
ஏசா 40:27, 28—நமக்கு வரும் கஷ்டங்களும் நமக்கு நடக்கும் அநியாயங்களும் யெகோவாவுக்கு தெரியும் (ip-1 பக். 411 பாரா 27)
ஏசா 40:29-31—தன்னை நம்புகிறவர்களுக்கு யெகோவா அவருடைய சக்தியைத் தந்து பலப்படுத்துகிறார் (ip-1 பக். 413-415 பாரா. 29-31)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 38:17—எந்த அர்த்தத்தில் யெகோவா நம் பாவங்களையெல்லாம் அவருடைய முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிகிறார்? (w03 7/1 பக். 17 பாரா 17)
ஏசா 42:3—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w15 2/15 பக். 8 பாரா 13)
ஏசாயா 38 முதல் 42 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 40:6-17
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) kt துண்டுப்பிரதி, பக். 1—கடைசியில், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த முறை அதைப் பற்றி பேசுவதாகச் சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) kt துண்டுப்பிரதி—அந்த நபர் ஆர்வமாக கேட்டால், பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 107-108 பாரா. 5-7—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 68
“துன்புறுத்தப்படும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். டகன்ராக் நீதிமன்றத்தில் மீண்டும் யெகோவாவின் சாட்சிகளின் வழக்கு—அவர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற வீடியோவை முதலில் காட்டுங்கள். (வீடியோக்கள் > எங்கள் அமைப்பு என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 18 பாரா. 1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 109; ஜெபம்