கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சகோதரிகளால் யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியும்—எப்படி?
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறைய வேலைகளை சகோதரிகள் செய்கிறார்கள். (சங் 68:11) ஏராளமான பைபிள் படிப்புகளை எடுக்கிறார்கள். ஒழுங்கான பயனியர்களில் பெரும்பாலானவர்கள் சகோதரிகள்தான்! ஆயிரக்கணக்கான சகோதரிகள், பெத்தேல் ஊழியர்களாகவும் மிஷனரிகளாகவும் கட்டுமான வாலண்டியர்களாகவும் அல்லது கட்டுமான ஊழியர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் சேவை செய்கிறார்கள். முதிர்ச்சியுள்ள சகோதரிகள், குடும்பத்தையும் சபையையும் பலப்படுத்துகிறார்கள். (நீதி 14:1) அவர்களால் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்ய முடியவில்லை என்றாலும் சபைக்குப் பிரயோஜனமாக இருக்கிற விதத்தில் சில குறிக்கோள்களை வைக்கலாம். நீங்கள் ஒரு சகோதரியா? அப்படியென்றால், யெகோவாவுடைய சேவையை இன்னும் அதிகமாக செய்வதற்கு என்ன செய்யலாம்?
-
கடவுளுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ளலாம்.—1தீ 3:11; 1பே 3:3-6
-
அனுபவம் குறைந்த சகோதரிகளுக்கு உதவலாம்.—தீத் 2:3-5
-
நிறைய ஊழியம் செய்யலாம், ஊழியத்தில் உங்கள் திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம்
-
வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாம்
-
தேவை அதிகம் உள்ள இடங்களுக்குப் போய் ஊழியம் செய்யலாம்
-
பெத்தேல் சேவைக்காக அல்லது கட்டுமான சேவைக்காக விண்ணப்பிக்கலாம்
-
ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்
“எஜமானுக்காக கடினமாக உழைக்கிற பெண்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:
-
இந்த வீடியோவில் பார்த்த சகோதரிகள் சொன்னது உங்களை எப்படி உற்சாகப்படுத்தியது?