ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .
யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்
யெகோவாமேல் இருக்கும் அன்பினால் நாம் அவரை வணங்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (மத் 22:37, 38) மாற்றங்களைச் செய்யவும், கஷ்டங்கள் மத்தியில் உறுதியாக இருக்கவும் இந்த அன்புதான் பைபிள் மாணவர்களுக்கு உதவும். (1யோ 5:3) ஞானஸ்நானம் எடுப்பதற்கும் இந்த அன்புதான் அவர்களைத் தூண்டும்.
தங்கள்மீது கடவுள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை பைபிள் மாணவர்கள் புரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளைக் கேளுங்கள். ஒருவேளை, “இதுலருந்து யெகோவாவ பத்தி என்ன கத்துக்கிட்டீங்க? கடவுள் உங்கமேல அன்பு வெச்சிருக்காருங்கறத புரிஞ்சுக்க இது எப்படி உதவி செய்யுது?” என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். (2நா 16:9) உங்களுடைய ஜெபத்துக்கு யெகோவா எப்படியெல்லாம் பதில் கொடுத்திருக்கிறார் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களுடைய ஜெபத்துக்கும் யெகோவா எப்படிப் பதில் கொடுக்கிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்லுங்கள். யெகோவாமேல் அவர்களுக்கு இருக்கும் அன்பையும் அவர்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அன்பையும் பார்க்கும்போது நாம் ரொம்பவே சந்தோஷப்படுவோம். யெகோவாவுடைய நண்பர்களாக ஆவதற்கு அவர்கள் ஆசைப்படுவதைப் பார்க்கும்போது நாம் அப்படியே பூரித்துப்போய்விடுவோம்.
உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்—யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
ஜேடுக்கு என்ன கஷ்டமான சூழ்நிலை வந்தது?
-
நீட்டா அவளுக்கு எப்படி உதவி செய்தாள்?
-
கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிக்க ஜேட் என்ன செய்தாள்?