கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவை நம்பியிருக்க மூன்று வழிகள்
யெகோவாவை நம்பியதால்தான் தாவீதால் கோலியாத்தை வெட்டி வீழ்த்த முடிந்தது. (1சா 17:45) தன்னை நம்புகிறவர்களுக்கு உதவ யெகோவா ஆசைப்படுகிறார். (2நா 16:9) அதனால், நம்முடைய அனுபவத்தையும் திறமையையும் நம்பியிருக்காமல் யெகோவாவை நம்பியிருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ மூன்று வழிகள்!
-
அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். தவறு செய்துவிட்டு யெகோவாவிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக தவறு செய்வதற்கான எண்ணம் வரும்போதே அவரிடம் உதவி கேளுங்கள். (மத் 6:12, 13) ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டு அதை ஆசீர்வதிக்கும்படி கேட்காமல் முடிவு எடுப்பதற்கு முன்பே வழிநடத்துதலுக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.—யாக் 1:5.
-
தவறாமல் பைபிளை ஆராய்ச்சி செய்து படியுங்கள். தினமும் பைபிளைப் படியுங்கள். (சங் 1:2) பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற கடவுளுடைய ஊழியர்களைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். அவர்களைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்யுங்கள். (யாக் 1:23-25) ஊழியத்துக்குப் போகும்போது இவ்வளவு நாட்களாக உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை நம்பியிருக்காமல், ஒவ்வொரு தடவையும் பிரசுரங்களிலிருந்து நன்றாகத் தயாரித்துவிட்டுப் போங்கள். கூட்டங்களுக்கும் அதேபோல் தயாரித்துவிட்டுப் போனால் பிரயோஜனமாக இருக்கும்.
-
யெகோவாவின் அமைப்போடு ஒத்துழையுங்கள். அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதல்களை நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உடனடியாக அதன்படி நடங்கள். (எண் 9:17) மூப்பர்கள் கொடுக்கிற ஆலோசனையையும் அறிவுரையையும் கவனமாகக் கேளுங்கள்.—எபி 13:17.
துன்புறுத்தலை நினைத்து பயப்படவே வேண்டாம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
• சகோதர சகோதரிகள் எதையெல்லாம் நினைத்து பயந்தார்கள்?
• பயத்தைச் சமாளிக்க அவர்களுக்கு எது உதவியது?