ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
நினைவு நாள் அழைப்பிதழ் வினியோகிப்பு (மார்ச் 19-ஏப்ரல் 15)
“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்குதான் வந்திருக்கோம். உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவு நாள் நிகழ்ச்சிதான் அது.” அழைப்பிதழை அவரிடம் கொடுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈமெயிலாகவோ அனுப்புங்கள்]. பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் [அல்லது ஆன்லைனில் நீங்கள் எப்படி கலந்துக்கலாம்னு] இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுல கலந்துக்கவும் உங்கள கூப்பிடுறோம்” என்று சொல்லுங்கள்.
ஆர்வம் காட்டினால்: இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈமெயிலாகவோ அனுப்புங்கள்].
மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?
முதல் சந்திப்பு * (மார்ச் 1-18, ஏப்ரல் 16-30)
கேள்வி: ஹாஸ்பிட்டல்ல வேல செய்றவங்க அவங்களோட உயிர பெருசா நினைக்காம மத்தவங்களுக்கு உதவுறத பத்தி கேள்விப்படுறப்ப உங்களுக்கு எப்படி இருக்கு?
வசனம்: யோவா 15:13
மறுசந்திப்புக்கான கேள்வி: யாராவது அவங்களோட உயிரையே பணயம் வெச்சு உங்களுக்கு (இல்லன்னா உங்களுக்கு வேண்டியவங்களுக்கு) உதவி செஞ்சிருக்காங்களா?
மறுசந்திப்பு *
கேள்வி: யாராவது அவங்களோட உயிரையே பணயம் வெச்சு உங்களுக்கு (இல்லன்னா உங்களுக்கு வேண்டியவங்களுக்கு) உதவி செஞ்சிருக்காங்களா?
வசனம்: மத் 20:28
மறுசந்திப்புக்கான கேள்வி: இப்படி நமக்காக உயிர கொடுத்தவர பத்தி நினைச்சு பாக்குறதுக்கான ஒரு விசேஷ நிகழ்ச்சி நடக்கப்போகுது. அதுல நீங்களும் கலந்துக்க விரும்புறீங்களா?
^ பாரா. 7 ^ பாரா. 11 உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி கேள்விகளையும் மறுசந்திப்புக்கான கேள்விகளையும் சூழமைவையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.