மார்ச் 21-27
யோபு 6-10
பாட்டு 68; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யோபு வேதனையில் பேசுகிறார்”: (10 நிமி.)
யோபு 6: 1-3, 9, 10, 26; 7:11, 16—வேதனையினால் ஒருவர் பேசும் விஷயங்களை வைத்து அவர் கெட்டவர் என்ற முடிவுக்கு வரக் கூடாது (w13 8/15 19 ¶7; w13 5/15 22 ¶13)
யோபு 9: 20-22—யோபுவுக்கு தவறான எண்ணம் இருந்தது. அவர் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் கடவுள் பார்ப்பதில்லை என்று நினைத்தார் (w15 10/1 10 ¶2; w86-E 3/1 18, 19 ¶10-12)
யோபு 10:12—யோபுவுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தாலும் யெகோவா செய்த நல்ல விஷயங்களைப் பற்றியே பேசினார் (w09 4/15 7 ¶18; w09 4/15 10 ¶13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
யோபு 6:14—மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதைப் பற்றி யோபு என்ன சொன்னார்? (w10 11/15 32 ¶20)
யோபு 7:9, 10; 10:21—இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று யோபு நம்பினார். அப்படியென்றால் இந்த வசனத்தில் இருக்கும் வார்த்தைகளை ஏன் சொன்னார்? (w06 3/15 14 ¶10)
யோபு 6 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: யோபு 9:1-21 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (இப்படிப் பேசலாம் பகுதி-இரண்டாவது குறிப்பு) நன்கொடை ஏற்பாட்டைப் பற்றி சொல்லுங்கள். (2 நிமிடத்திற்குள்)
மறுசந்திப்பு: கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (இப்படிப் பேசலாம் பகுதி-இரண்டாவது குறிப்பு) ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (4 நிமிடத்திற்குள்)
பைபிள் படிப்பு: fg பாடம் 2 ¶6-8 (6 நிமிடத்திற்குள்)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 114
மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும்: (15 நிமி.) கலந்து பேசுங்கள். ராஜ்ய ஊழியப் பள்ளியில் மூப்பர்கள் பார்த்த வீடியோவை காட்டுங்கள். அதில், ஒரு சகோதரி கணவனை இழந்த வேதனையில் பேசுகிறார். அவருக்கு மூப்பர்கள் எப்படி ஆறுதல் சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 107 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 23; ஜெபம்