கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள்
நமக்குப் பாவ இயல்பு இருப்பதால், தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யாமல் நம் இஷ்டத்துக்கு நடந்தால், யெகோவாவுடைய தயவை இழந்துவிடுவோம். சிலருக்கு, யெகோவாமேல் இருக்கிற அன்பைவிட சாப்பாடு, துணிமணி, வீடு போன்ற விஷயங்களில்தான் அதிக ஆசை இருக்கிறது. வேறு சிலர் தங்களுடைய பாலியல் ஆசைகளைத் திருப்திப்படுத்துவதற்காக, ஒழுக்கம் சம்பந்தமாகக் கடவுள் கொடுத்திருக்கிற சட்டங்களை மதிக்காமல் நடந்துகொள்கிறார்கள். (ரோ 1:26, 27) இன்னும் சிலர், நண்பர்களுடைய பிரியத்தைச் சம்பாதிப்பதற்காக... தங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக... அவர்களோடு சேர்ந்து தவறான விஷயங்களைச் செய்கிறார்கள்.—யாத் 23:2.
நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்த நாம் என்ன செய்யலாம்? யெகோவாவை சந்தோஷப்படுத்த நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வதற்குக் கவனம் செலுத்த வேண்டும். (மத் 4:4) அதுமட்டுமல்ல, தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்த யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும். ஏனென்றால், நமக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும். நம்முடைய நியாயமான ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்றும் அவருக்குத் தெரியும்.—சங் 145:16.
புகை நமக்குப் பகை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
-
சிலர் ஏன் புகைப் பிடிக்கிறார்கள்?
-
புகைப் பிடிப்பதால் உங்களுக்கு என்ன ஆகும்?
-
புகைப் பிடிப்பதும் ஈ-சிகரெட் பிடிப்பதும் ஏன் தவறு?–2கொ 7:1
-
யாராவது புகைப் பிடிக்கச் சொன்னால், வேண்டாம் என்று சொல்வதற்கும் அந்தப் பழக்கத்தை விடுவதற்கும் நீங்கள் என்ன செய்யலாம்?